யூகின் ஓடம்
இயூகின் பிளெசன்ட்சு ஓடம் Eugene Pleasants Odum | |
---|---|
பிறப்பு | நியூபோர்ட், நியூ ஹாம்சயர், ஐக்கிய அமெரிக்கா | செப்டம்பர் 17, 1913
இறப்பு | ஆகத்து 10, 2002 ஏதன்சு, ஜோர்ஜியா, ஐக்கிய அமெரிக்கா | (அகவை 88)
வாழிடம் | ஐக்கிய அமெரிக்கா |
தேசியம் | அமெரிக்கர் |
துறை | சூழலியலாளர், கணிதவியலாளர், இயல்மெய்யியலாளர், |
பணியிடங்கள் | ஜோர்ஜியா பல்கலைக்கழகம் |
கல்வி கற்ற இடங்கள் | இலினோய் பல்கலைக்கழகம் (முனைவர்) |
அறியப்படுவது | சூழல் அமைப்புத் திட்டத்தின் முன்னோடி |
விருதுகள் | டைலர் பரிசு (1977) கிராஃபூர்டு பரிசு (1987) |
இயூகின் பிளெசன்ட்சு ஓடம் (Eugene Pleasants Odum, செப்டம்பர் 17, 1913 – ஆகத்து 10, 2002) என்பவர் ஓர் அமெரிக்க உயிரியலாளரும், சூழலியலாளரும் ஆவார். சூழல் அமைப்புச் சூழலியலின் தந்தை (Father of Ecosystem Ecology) எனப் போற்றப்படுபவர். ஜார்ஜியா பல்கலைக்கழகத்தில் பணியாற்றியவர்.[1]
இவரது ”சூழலியலின் அடிப்படைகள்” என்ற நூல், இப்பயில்களத்துக்குப் புதிய சட்டகத்தை உருவாக்கியதால், சூழலியற் பயில்வைப் புரட்சிகரமாக மாற்றியது. சூழலியலை இயற்பியல், வேதியியல், புவியியல், உயிரியல் அறிவியல் புலங்களின் ஒருங்கிணைந்த பயில்களமாக்கியதோடு, நாம் வாழும் புவி தன்னியக்கம் வாய்ந்த, பல்வேறு கட்டமைப்புகளும் செயற்பான்மைகளும் உள்ள சூழல் அமைப்புகளின் இடையிணைப்புகளுடன் விளங்குவதைச் சுட்டி காட்டினார். சூழல் அமைப்புகள் சூரிய ஆற்றலைப் பயன்படுத்தி, உயிரிலிப் பொருள் ஊட்டச் சத்துகளைச் சுழற்சிப்படுத்தி, உயிரினத்துக்கும் மாந்த இனத்துக்கும் பெருந்தொண்டாற்றுகின்றன. சூழலியலுக்கு ஆற்றிய பெரும்பணிகளுக்காக அமெரிக்க அறிவியற் கல்விக்கழகத்தின் ஆய்வுத்தகைஞராக அவர் தேர்வு செய்யப்பட்டார். மேலும் நோபல் பரிசுக்கீடான சுவீடன் நாட்டு அரசுக் கல்விக்கழகத்தின் கிராஃபோர்டு பரிசு அவருக்கும் அவரது உடன்பிறப்பாளருக்கும் (எச். டி. ஓடம்) வழங்கப்பட்டது.
எழுதிய நூல்கள்
[தொகு]- 1939. Variations in the heart rate of birds: a study in physiological ecology
- 1953. Fundamentals of Ecology
- 1963. Ecology
- 1975. Ecology, the link between the natural and the social sciences
- 1983. Basic Ecology
- 1993. Ecology and Our Endangered Life Support Systems
- 1998. Ecological Vignettes: Ecological Approaches to Dealing with Human Predicament
- 2000. Essence of Place
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Marine, Tom (டிசம்பர் 7, 2007). "Ecology school 'small with big ideas'". The Red and Black. The Red and Black Publishing Company. Archived from the original on 2012-02-29. பார்க்கப்பட்ட நாள் 2008-03-25.
{{cite web}}
: Check date values in:|date=
(help)