உள்ளடக்கத்துக்குச் செல்

மோகனூர் அசலதீபேஸ்வரர் கோயில்

ஆள்கூறுகள்: 11°03′06.9″N 78°08′13.7″E / 11.051917°N 78.137139°E / 11.051917; 78.137139
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மோகனூர் அசலதீபேஸ்வரர் கோயில், நாமக்கல்
புவியியல் ஆள்கூற்று:11°03′06.9″N 78°08′13.7″E / 11.051917°N 78.137139°E / 11.051917; 78.137139
பெயர்
புராண பெயர்(கள்):மகனூர்
பெயர்:மோகனூர் அசலதீபேஸ்வரர் கோயில், நாமக்கல்
அமைவிடம்
மாவட்டம்:நாமக்கல்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:அசலதீபேஸ்வரர், குமரீஸ்வரர்
தாயார்:மதுகரவேணியம்பிகை, குமராயி
தல விருட்சம்:வில்வ மரம்
தீர்த்தம்:காவிரி தீர்த்தம்
ஆகமம்:காமீகம்
வரலாறு
தொன்மை:500 ஆண்டுகளுக்கு முன்

அருள்மிகு அசலதீபேஸ்வரர் திருக்கோயில், தமிழ்நாட்டில் நாமக்கல், மோகனூர் என்னுமிடத்தில் உள்ளது. இது ஒரு தேவார வைப்புத்தலமாகும். [1]

இறைவன், இறைவி

[தொகு]

இங்குள்ள இறைவன் அசலதீபேஸ்வரர் ஆவார். இறைவி மதுகரவேணியம்பிகை ஆவார்.

தல வரலாறு

[தொகு]

இத்தலத்தில் குமராயி என்ற சிவபக்தை தயிர் விற்கும் வியபாரம் செய்து வந்துள்ள���ர். அவர் சிவபெருமானுக்கு தயிரை பிரசாதமாக தந்து வேண்டியமையால் குழந்தைக்கு தாயானார். ஊர்மக்கள் ஏசவே, இத்தலத்திற்கு அருகேயுள்ள காவேரியில் விழுந்து இறந்தார். அங்கு அம்பிகை காட்சிதந்தமையால் அம்பிகையை குமராயி என்றும் மூலவரை குமரப்பன் என்றும் அழைக்கின்றனர். இத்தலத்தினை தேவார வைப்புத் தலமாக கூறுகின்றனர்.

தெய்வங்கள்

[தொகு]

இக்கோயிலில் விநாயகர், முருகன் உடன் வள்ளி, தெய்வானை, ஐயப்பன், தட்சணாமூர்த்தி , சண்டிகேஸ்வரர், விஷ்ணு துர்க்கை, பைரவர், சரஸ்வதி, பிரம்மா, 63 நாயன்மார்கள், நவக்கிரகங்கள் ஆகியோர் உள்ளனர்.

முக்கிய பண்டிகைகள்

[தொகு]

இங்கு தமிழ் புத்தாண்டு, சித்ரா பவுர்ணமி, திருவாதிரை, ஆடிப்பெருக்கு ஆடி அமாவாசை, ஆருத்ரா தரிசனம்,சிவராத்திரி, நவராத்திரி, ஆங்கிலப் புத்தாண்டு, பிரதோஷம்,வைகாசி விசாகம், தை அமாவாசை , விநாயகர் சதுர்த்தி, மாசி மகம், கார்த்திகை தீபம் போன்ற விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. பு.மா.ஜெயசெந்தில்நாதன், தேவார வைப்புத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009

வெளி இணைப்புக்கள்

[தொகு]