மைசூரில் உள்ள பாரம்பரிய கட்டிடங்களின் பட்டியல்
மைசூரில் உள்ள பாரம்பரிய கட்டிடங்களின் பட்டியல் முதல் பிரிவில் மைசூர் நகரத்திலும் அதைச் சுற்றியுள்ள இடங்களிலும் உள்ள இந்திய விடுதலைக்கு முன்னர் கட்டப்பட்ட பாரம்பரியம் மற்றும் நினைவுச்சின்ன மாளிகைகளைப் பட்டியலிடுகிறது. பின்னர் நவீன கட்டிடங்களை அட்டவணைப்படுத்துகிறது. மைசூர் நகரத்தின் வரலாறு, குறிப்பாக தக்காண பீடபூமியின் வரலாறு இந்திய விடுதலைக்கு முன் பின் என இரு காலங்களிலும் பரவியுள்ளது. இடைக்கால இந்தியாவின் புராண காலத்திற்கு முன்பே மைசூர் ஒரு குடியரசாக உருவானதாக நம்பப்படுகிறது. மைசூர் பகுதிகள் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் வேத எழுத்துக்களில் இருந்து குறிப்பிடப்படுவதைக் காணலாம். அதில் இப்பகுதி மகிசாகா (வலிமைமிக்க / பெரிய இராச்சியம்) என்று அழைக்கப்படுகிறது.
வரலாறு
[தொகு]பல நூற்றாண்டுகளாக, பொது சகாப்தத்திற்கு முன்னும் பின்னும், இப்பகுதி வெவ்வேறு, பல வம்சங்களால் ஆளப்பட்டது. பெரும்பாலும் தென்னிந்திய ராச்சியங்களான ராஷ்டிரகூடர்கள், மேலைச் சாளுக்கியர்கள், போசளர்கள் மற்றும் பலர். விஜயநகரப் பேரரசால் ஆளப்பட்டு படிப்படியாக தனது செல்வாக்கை இழந்து தனது கடைசி வம்சமான உடையார் அரச குலம் ஆளப்படும் வரை ஆட்சியிலிருந்தது.
அரசர்கள் காலத்து புரவலர்கள்
[தொகு]முந்தைய சாம்ராச்சியங்கள் மற்றும் முடியாட்சிகளால் மேற்கொள்ளப்பட்ட பெரும்பாலான கட்டுமானப் பணிகள் காலப்போக்கில் முற்றிலுமாக அழிக்கப்பட்டுவிட்டன. தக்காண சுல்தான்களின் படையெடுப்பு காரணமாவோ அல்லது பின்வந்த முடியாட்சிகளாலோ அகற்றப்பட்டன. இருப்பினும், மைசூர் நகரத்தின் பெரும்பாலான கட்டமைப்புகள், உண்மையில், பெங்களூரு, ஈரோடு, சிவமொக்கா, சித்ரதுர்கா போன்றவற்றை உள்ளடக்கிய மைசூர் இராச்சியத்தின் நகரங்களில், 1700 களின் முற்பகுதியிலும் 1940 களின் பிற்பகுதியிலும் உடையார்களால் பெரும்பாலும் கட்டப்பட்டன.
மைசூர் ஏறக்குறைய ஆறு நூற்றாண்டுகளாக இராச்சியத்தின் தலைநகராக இருந்ததால் (ஐதர் அலி மற்றும் திப்பு சுல்தான் ஆகியோரின் ஆட்சியின் போது ஒரு குறுகிய காலத்திற்கு தலைநகரை சிறீரங்கப்பட்டணத்திற்கு மாற்றியதைத் தவிர), உடையார்கள் நகரத்தின் கட்டுமானத்தையும் முன்னேற்றத்தையும் நேரடியாக மேற்பார்வையிட்டனர். பிற மைசூர் இராச்சிய நகரங்களில் கட்டுமானம் துணை அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டது. பெங்களூரு கெம்பெ கவுடாவிடமும் (1510 மற்றும் 1569 க்கு இடையில் இரண்டாம் சாமராச உடையார் மற்றும் மூன்றாம் சாமராச உடையாரின் கீழ்), சிவமொக்கா சிவப்ப நாயக்கரிடமும் (1645 மற்றும் 1660 க்கு இடையில் முதலாம் நரசராச உடையாரின் கீழ்), மற்றும் பல. ஆட்சியாளர்களின் வீழ்ச்சி மற்றும் வலுவான பிரித்தானிய ஆட்சியின் செல்வாக்கிற்குப் பிறகு, உடையார்கள் மைசூர் இராச்சியத்தின் முதன்மை, நேரடி ஆட்சியாளர்களாக மாறினர். ஆகையால் மைசூர் அதன் அனைத்து முன்னேற்றங்களையும் உடையார்களுக்கு உரித்தாக்குகிறது. முழுமையான முடியாட்சியை ஒழித்த பின்னர், பெரும்பாலான கட்டமைப்புகள் மக்களாட்சி அரசாங்க அமைப்புகளால் ஏற்படுத்தப்பட்டன. இந்திய அரசு செல்லுவம்பா மாளிகை அரண்மனையை மத்திய உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனமாகவும் , மைசூர் பல்கலைக்கழகம் ஜெயலட்சுமி மாளிகை அரண்மனையை பல்கலைக்கழக அருங்காட்சியகமாகவும், கீழை ஆராய்ச்சி நூலகத்தை அருங்காட்சியக நூலகமாகவும் பயன்படுத்துகிறது. மேலும், கர்நாடக அரசு சுற்றுலா ஈர்ப்பிற்காக பல அரண்மனைகளைப் பயன்படுத்துகிறது.
சுதந்திரத்திற்கு முந்தைய மாளிகையின் பட்டியல்
[தொகு]வருடம் | கட்டிடம் | பெயர் தற்போது | |
---|---|---|---|
அரண்மனைகள் | |||
1912[1] | மைசூர் அரண்மனை | தற்காலிக குத்தகைதாரர்: கர்நாடக அரசு; உரிமையாளர்கள்: அரச குடும்பம் | |
1861 | ஜெகன்மோகன் அரண்மனை | தற்போது, சிறீஜெயச்சமராஜேந்திர கலைக்கூடம் மற்றும் ஜெகன்மோகன் அரண்மனை கலை மற்றும் கைவினை அருங்காட்சியகம் | |
1916 | சித்தரஞ்சன் அரண்மனை | தற்போது, தி கிரீன் ஹோட்டல், சுற்றுச்சூழல் விடுதி | |
1921 | லலித மகால் அரண்மனை | தற்போது, தி லலிதா மகால் அரண்மனை விடுதி, மூன்று நட்சத்திர விடுதி | |
1905 | ஜெயலட்சுமி விலாசம் | இப்போது, ஜெயலட்சுமி விலாசம் | |
1918 | செலுவாம்பா மாளிகை | தற்போது, மத்திய உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவத்தால் பயன்படுத்தப்படுகிறது | |
1924 | இராஜேந்திர விலாச அரண்மனை | இப்போது, அரச குடும்பத்தின் ஒரு தனி அரண்மனை | |
கல்வி கட்டிடங்கள் | |||
1915 | கிராபோர்ட் அரங்கம் | ||
1887 | கீழைநாட்டு ஆராய்ச்சி நிறுவனம் | தேசிய நூலகம் | |
1876 | மாரிமல்லப்ப உயர்நிலைப்பள்ளி | ||
1840 | ஹார்ட்விக் உயர்நிலைப்பள்ளி | ||
1851 | மகாராஜா கல்லூரி, மைசூர் | ||
1917 | மகாராஜா மகளிர் கல்லூரி | ||
1924 | மைசூர், மருத்துவக் கல்லூரி | ||
1917 | சாமராஜேந்திர தொழில்நுட்ப நிறுவனம் | ||
1940 | டி பானுமய்யா முதுகலை கல்லூரி | ||
சிறீ சாமராஜேந்திர அர்சு உறைவிடப் பள்ளி | |||
1940 | டி பானுமய்யா வணிக மற்றும் கலைக் கல்லூரி | ||
1927 | யுவராஜா கல்லூரி | ||
பொது அலுவலங்கள் | |||
1884 | சி. வி. ரங்காச்சார்லு நினைவு மாளிகை | ||
1918 | கிருஷ்ணராஜேந்திர மருத்துவமனை | ||
1889 | செலுவாம்பா மருத்துவமனை | ||
1879 | லான்ஸ்டவுன் கட்டிடம் | வணிக வளாகம் | |
1870 | தொடருந்து நிலையம் | ||
மதக் க��்டிடங்கள் | |||
1810 | பரகலா மடம் | ||
1933 | புனித பிலோமினா தேவாலயம், மைசூர் | ||
1670s | சாமுண்டீஸ்வரி கோயில் |
சான்றுகள்
[தொகு]- ↑ "Mysore Palace". culturalindia.net. பார்க்கப்பட்ட நாள் 2021-02-07.