உள்ளடக்கத்துக்குச் செல்

மைக்கேல் ஜான் திசுனே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மைக்கேல் ஜான் திசுனே (Michael John Disney) அல்லது (Mike Disney)(பிறப்பு: பிரிசுட்டல், இங்கிலாந்து, 1937 அக்தோபர், 7) ஒரு பிரித்தானிய வானியற்பியலாளர் ஆவர். இவர் 1969 இல் நண்டுத் துடிமீனின் ஒளியியல் உறுப்பைக் கண்டுபிடித்தார். [1] இக்கண்டுபிடிப்பில் ஜான் கோக்கும் இவரோடு இணைந்திருந்தார். இதுவே முதலில் நோக்கிய ஒளியியல் துடிமீனாகும்.

மேலும், இவர் தாழ்பரப்புப் பொலிவு பால்வெளிகளைக் கண்டுபிடித்த முன்னோடிகளில் ஒருவராவார்.

திசுனே தான் ஓய்வு 2005 ஆம் ஆண்டு வரை கார்டிப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்தார்.இவர் அண்ட உப்பல் கோட்பாட்டை நேரடியாக எதிர்த்த திறனாய்வாளர் ஆவார்.

இவர் 'தூய்மையற்ற கணிதவியல்' எனும் சிரிப்புமூட்டும் சிறுகதையை ஆலன் உரைட் உடன் இணைந்து எழுதியுள்ளார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "A Pulsar Discovery - Moments of Discovery:1968". Archived from the original on 2015-09-25. பார்க்கப்பட்ட நாள் 2022-07-13.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மைக்கேல்_ஜான்_திசுனே&oldid=3952607" இலிருந்து மீள்விக்கப்பட்டது