முனையக் கணு
Appearance
தொலைத்தொடர்பில், முனையக் கணு (terminal) என்பது தொலைத்தொடர்புப் பிணையத்தின் இறுதியில் அமைந்துள்ள கருவிகளாகும். இவை ஒரு தொலைத்தொடர்புப் பிணைப்பை முடிவுறச் செய்கின்றன. பிணையத்தில் இக்கருவிகள் மூலமே குறிப்பலைகள் நுழையவும் வெளியேறவும் இயலும். பொதுவாக பயனருடன் இடைமுகம் கொண்டிருக்கும்.
சில எடுத்துக்காட்டுகள்:
- தொலைபேசிகள்
- தொலைப்பிரதிகள்
- கணினி முனையங்கள்
- பிணைய வழங்கிகள்
சில நேரங்களில் சிக்கலான கருவிகளும் தொலைத்தொடர்பு முனையங்களாகக் கருதப்படும்; காட்டாக:
- திசைவிகள்
- தனியார் தானியக்க கிளை இணைப்பகங்கள்