மிக்சோர்னிசு
மிக்சோர்னிசு | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | திமாலிடே
|
பேரினம்: | மிக்சோர்னிசு பிளைத், 1842
|
மாதிரி இனம் | |
மிக்சோர்னிசு குலாரிசு[1] = மோடாசிலா உருபிகாபிலா பிளைத், 1842 |
மிக்சோர்னிசு (Mixornis) என்பது பழைய உலக சிலம்பன் குடும்பமான திமாலிடேயில் உள்ள குருவிச் பேரினமாகும்.
வகைப்பாட்டியல்
[தொகு]மிக்சோர்னிசு சிற்றினங்கள் முன்பு மக்ரோனசு பேரினத்தில் வைக்கப்பட்டன. 2012ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட ஒரு மூலக்கூறு தொகுதி வரலாற்று ஆய்வில் மக்ரோனசு ஒற்றைத்தொகுதிமரபு உயிரினத் தோற்றம் உடையது அல்ல என்று கண்டறியப்பட்டது. ஒற்றைத் தொகுதி மரபு உயிரினத்தினை உருவாக்க மக்ரோனசு பிரிக்கப்பட்டது.[2][3] சில சிற்றினங்கள் புதிதாகத் தோற்றுவிக்கப்பட்ட மிக்சோர்னிசு பேரினத்திற்கு மாற்றப்பட்டன. 1842ஆம் ஆண்டில் இங்கிலாந்து விலங்கியல் நிபுணர் எட்வர்ட் பிளைத் என்பவரால் மிக்சோர்னிசு அறிமுகப்படுத்தப்பட்டது. இது 1833ஆம் ஆண்டில் சாமுவேல் திக்கல் விவரித்த மிக்சோரோனசு குலாரிசு ரூபிகாபிலாசின் இளைய ஒத்தபெயராகும். இது இப்போது முள்-கோடு சிலம்பன் (மிக்சோர்னிசு குலாரிசு ரூபிகாபிலா) சிற்றினத்தின் துணையினங்களில் ஒன்றாகும்.[2][4][5] இந்த பேரினத்தின் பெயர் "கலப்பு" அல்லது "கலத்தல்" (mixis) என்று பொருள்படும் பண்டைய கிரேக்க மிக்சிசு மற்றும் "பறவை" என்று பொருளான ஆர்னிசு (ornis) ஆகியவற்றை ஒருங்கிணைக்கிறது.[6][7]
சிற்றினங்கள்
[தொகு]இந்த பேரினத்தில் பின்வரும் சிற்றினங்கள் அடங்கும்.[2]
படம் | பொதுப் பெயர் | விலங்கியல் பெயர் | பரவல் |
---|---|---|---|
முள்-கோடு சிலம்பன் | மிக்சோர்னிசு குலாரிசு | இந்தியா, இந்தோனேசியா, மலேசியா, மியான்மர், நேபாளம், பிலிப்பீன்சு, சிங்கப்பூர், தாய்லாந்து, வியட்நாம், சீனா, பூட்டான், புரூணை, கம்போடியா, வங்கதேசம் | |
தடித்த-கோடு சிலம்பன் | மிக்சோர்னிசு போர்னென்சிசு | போர்னியோ மற்றும் சாவகம் தீவு | |
சாம்பல்-கன்ன சிலம்பன் | மிக்சோர்னிசு பிளாவிகோலிசு | சாவகம் தீவு | |
கங்கியன் சிலம்பன் | மிக்சோர்னிசு பிரில்விட்சு | கங்கியன் தீவுகள் | |
சாம்பல்-முக சிலம்பன் | மிக்சோர்னிசு கெல்லேய் | கம்போடியா, லாவோஸ், வியட்நாம் |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Timalidae". aviansystematics.org. The Trust for Avian Systematics. பார்க்கப்பட்ட நாள் 2023-07-15.
- ↑ 2.0 2.1 2.2 Gill, Frank; Donsker, David; Rasmussen, Pamela, eds. (August 2022). "Babblers & fulvettas". IOC World Bird List Version 12.2. International Ornithologists' Union. பார்க்கப்பட்ட நாள் 22 September 2022.
- ↑ Moyle, R.G.; Andersen, M.J.; Oliveros, C.H.; Steinheimer, F.D.; Reddy, S. (2012). "Phylogeny and biogeography of the core babblers (Aves: Timaliidae)". Systematic Biology 61 (4): 631–651. doi:10.1093/sysbio/sys027.
- ↑ Edward Blyth (1842). "Report from the curator". Journal of the Asiatic Society of Bengal 11, Part 2 (128): 788-799 [794, note]. https://www.biodiversitylibrary.org/page/40005164.
- ↑ Mayr, Ernst; Paynter, Raymond A. Jr, eds. (1964). Check-List of Birds of the World. Vol. 10. Cambridge, Massachusetts: Museum of Comparative Zoology. p. 318.
- ↑ Jobling, James A. (2010). The Helm Dictionary of Scientific Bird Names. London: Christopher Helm. p. 257. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4081-2501-4.
- ↑ Collar, N. J. & Robson, C. 2007. Family Timaliidae (Babblers) pp. 70 – 291 in; del Hoyo, J., Elliott, A. & Christie, D.A. eds. Handbook of the Birds of the World, Vol. 12. Picathartes to Tits and Chickadees. Lynx Edicions, Barcelona.