உள்ளடக்கத்துக்குச் செல்

மாலதி கிருஷ்ணமூர்த்தி ஹோலா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மாலதி ஹோலா
தனித் தகவல்கள்
பிறந்த நாள்6 சூலை 1958 (1958-07-06) (அகவை 66)
பிறந்த இடம்கோட்டா, கருநாடகா , இந்தியா
விளையாட்டு
விளையாட்டுஇணை ஒலிம்பிக் விளையாட்டு தடகள வீராங்கனை

மாலதி கிருஷ்ணமூர்த்தி ஹோலா (Malathi Krishnamurthy Holla) இந்தியாவைச் சேர்ந்த இணை ஒலிம்பிக் விளையாட்டு தடகள வீராங்கனையாவார். இவரது சாதனைகளுக்காக அருச்சுனா விருது மற்றும் பத்மசிறீ விருது வழங்கப்பட்டது. மாலதி 397 தங்கப் பதக்கங்கள், 27 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 5 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளார்.[1]

சொந்த வாழ்க்கை

[தொகு]

இவர் இந்தியாவின் கருநாடகாவின் கோட்டா எனும் ஊரில் ஜூலை 6,1958 அன்று பிறந்தார். இவரது தந்தை கிருஷ்ணமூர்த்தி ஹோலா ஒரு சிறிய உணவு விடுதியை நடத்தி வந்தார். இவரது தாயார் பத்மாவதி நான்கு குழந்தைகளையும் கவனித்துக் கொண்டார். மாலதிக்கு ஒரு வயதாக இருக்கும்போது இளம்பிள்ளை வாதத்தால் பாதிக்கப்பட்டார். இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக மின்சார அதிர்ச்சி சிகிச்சை அளிக்கப்பட்டு தனது உடல் வலிமையை மேம்படுத்திக்கொண்டார்.[2]

விளையாட்டு

[தொகு]

தென் கொரியா, பார்செலோனா, ஏதென்ஸ் மற்றும் பெய்சிங்கில் நடைபெற்ற இணை ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளிலும், பெய்சிங், பேங்காக், தென் கொரியா மற்றும் கோலாலம்பூரில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டிகளிலும், டென்மார்க் மற்றும் ஆத்திரேலியாவில் நடைபெற்ற உலக வாகையாளர் போட்டிகளிலும், ஆத்திரேலியாவில் நடந்த பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளிலும் மற்றும் பெல்ஜியம், கோலாலம்பூர் மற்றும் இங்கிலாந்தில் நடந்த வாகையாளர் போட்டிகளில் இவர் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.

மாலா சிண்டிகேட் வங்கி யில் மேலாளராக பணிபுரிகிறார். தனது நண்பர்களுடன் இணைந்து உருவாக்கப்பட்ட ஒரு தொண்டு அறக்கட்டளை மாத்ரு அறக்கட்டளையில் பல்வேறு குறைபாடுகள் உள்ள 54 குழந்தைகளுக்கு அடைக்கலம் அளிக்கிறார்.[3] முக்கியமாக கிராமப்புறங்களில் பெற்றோர்கள் தங்கள் குழந்தையை பள்ளிக்கு அனுப்பவோ அல்லது மருத்துவ சிகிச்சையை வழங்கவோ முடியாமல் இருக்கும் இளம்பிள்ளைவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மீது கவனம் செலுத்துகிறார்.[2]

சுயசரிதை

[தொகு]

மாலதி முதல் அங்கீகரிக்கப்பட்ட சுயசரிதையான எ டிஃபரண்ட் ஸ்பிரிட் என்பதை ஜூலை 8,2009 அன்று வெளியிட்டார்.[4]

இந்த சுயசைதையில் “நான் இளமையாக இருந்தபோது, விழுந்த மாம்பழங்களை எடுக்க கொல்லைப்புறத்திற்கு ஓடி வந்த என் நண்பர்களில் முதன்மையானவராக இருக்க விரும்பினேன். நான் ஒரு பறவையைப் போல அச்சமின்றி ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு பறக்க விரும்பினேன். ஆனால் நான் வளர்ந்தவுடன், ஓடுவதற்கு கால்கள் மற்றும் பறக்க இறக்கைகள் தேவை என்பதை உணர்ந்தேன். நான் காயப்பட்டேன். ஆனால் நான் கைவிடவில்லை. எனக்கு தெரியும், ஒரு நாள், நான் ஓடுவேன்”... என்று மாலதி கூறுகிறார்.

விருதுகள்

[தொகு]

இணை ஒலிம்பிக் விளையாட்டுகளில் இவரது சாதனைகளுக்காக அருச்சுனா விருது மற்றும் பத்மசிறீ விருது வழங்கப்பட்டது. மாலதி 397 தங்கப் பதக்கங்கள், 27 வெள்ளிப் பதக்கங்கள் மற்றும் 5 வெண்கலப் பதக்கங்களை வென்றுள்ளார்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2015. Archived from the original (PDF) on 15 October 2015. பார்க்கப்பட்ட நாள் 21 July 2015.
  2. 2.0 2.1 "Excerpt about Malathi Holla from India At The Olympic Games" (in en-US). Women's Web: For Women Who Do. http://www.womensweb.in/articles/india-at-the-olympic-games/. 
  3. "Sri Vanamali Seva Award and Dr. Mathoor Krishnamurthy Award presented - Star of Mysore" (in en-US). Star of Mysore. 2017-10-22. https://starofmysore.com/sri-vanamali-seva-award-dr-mathoor-krishnamurthy-award-presented/. 
  4. "TBI BLOGS: International Para-Athlete Malathi Holla is a Champion for the Differently-Abled in India" (in en-US). The Better India. 2016-06-20. https://www.thebetterindia.com/58636/malathi-holla-mathru-foundation-differently-abled/.