உள்ளடக்கத்துக்குச் செல்

மார்வெல் திரைப் பிரபஞ்சம்: நான்காம் கட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நான்காம் கட்டம்
தயாரிப்பு
மூலக்கதைமார்வெல் வரைகதை
நடிப்புகீழே பார்
கலையகம்
விநியோகம்
வெளியீடு2021–2022
நாடுஅமெரிக்கா
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவுமொத்தம் (7 படங்கள்):
$1.46–1.54 பில்லியன்
மொத்த வருவாய்மொத்தம் (7 படங்கள்):
$5.712 பில்லியன்

மார்வெல் திரைப் பிரபஞ்சம்: நான்காம் கட்டம்[1] என்பது மார்வெல் வரைகதை வெளியீடுகளில் தோன்றும் கதாபாத்திரங்களை அடிப்படையாக கொண்டு மார்வெல் இசுடியோசு நிறுவனம் தயாரித்த அமெரிக்க நாட்டு மீநாயகன் திரைப்படங்களின் வரிசையாகும். இந்த நான்காம் கட்டதின் தயாரிப்புகள் அனைத்தும் 2021 முதல் 2023 வரை வெளியிடப்படுகிறது.

இது மார்வெல் இசுடியோசு நிறுவனத்தால் டிஸ்னி இயங்குதள விநியோக சேவையான டிஸ்னி+ என்ற ஓடிடி தளத்திற்க்காக பல இணையத் தொடர்களை உரு��ாக்கி, அது ஏற்கனவே தயாரிப்பிற்கு தயாராக இருந்த மார்வெல் திரைப்படங்களுடன் இந்த தொலைக்காட்சித் தொடர்களைச் இணைப்பதே இந்த நான்காம் கட்டத்தின் முதல் உரிமம் ஆகும். இந்த நான்காம் கட்டம் வாண்டாவிஷன் என்ற தொடருடன் தொடங்கியது, இது சனவரி 2021 இல் டிஸ்னி+[2][3][4] என்ற ஓடிடி தளத்தில் திரையிடப்பட்டது, அதே நேரத்தில் இந்த கட்டத்தில் முதல் திரையரங்கப் படம் பிளாக் விடோவ்[5] ஆகும், இது ஜூலை 2021 இல் வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் மோஷன் பிக்சர்ஸ் ஆல் வெளியிடப்பட்டது. கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக நான்காம் கட்டத்தின் வெளியீட்டு அட்டவணை பலமுறை மாற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.[6]

கேவின் பிகே என்பவர் இந்த கட்டத்தில் ஒவ்வொரு படத்தையும் தயாரிக்க, அவருடன் இணைந்து மார்வெல் இசுடியோசு நிர்வாகிகாளான, ஜொனாதன் சுவார்ட்ஸ் என்பவர் சாங்க்-சி அண்ட் தி லெஜெண்ட் ஒப் தி டென் ரிங்ஸ் என்ற படத்தையும், தோர்: லவ் அண்ட் தண்டர் என்ற படத்தை பிராட் விண்டர்பாம் என்பவரும் மற்றும் எட்டெர்னல்சு என்ற படத்தை நேட் மூர் என்பவரும் தயாரித்துள்ளனர்கள். இவர்களுடன் இசுபைடர்-மேன்: நோ வே ஹோம்[7] என்ற படத்தை அமி பாஸ்கல் என்பவர் சோனி பிக்சர்ஸ் இரிலீசிங் சார்பில் தயாரித்துள்ளார்.

இந்த கட்டத்தில் மார்வெல் திரைப் பிரபஞ்சத் திரைப்படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்த எலிசபெத் ஓல்சென், பவுல் பெட்டனி, அந்தோணி மேக்கி, செபாஸ்டியன் இஸ்டான், டாம் ஹிடில்ஸ்டன், ஜெரமி ரெனர் போன்ற பல நடிகர்களுக்கு தனித்தையாக பல தொடர்கள் உருவாக்கப்பட்டுள்ளது.[8] அதே தருணம் சாங்க்-சி அண்ட் தி லெஜெண்ட் ஒப் தி டென் ரிங்ஸ், எட்டெர்னல்சு, இசுபைடர்-மேன்: நோ வே ஹோம், டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் இன் த மல்டிவெர்ஸ் ஆப் மேட்னெஸ், தோர்: லவ் அண்ட் தண்டர், பிளாக் பான்தர்: வகாண்டா போரெவர் போன்ற படங்கள் மூலம் புதிய கதாபாத்திரங்களும் இந்த கட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.[9]

இந்த நான்காம் கட்டம் 2021 இல் பிளாக் விடோவ் வெளியீட்டில் தொடங்கி 2022 இல் பிளாக் பான்தர்: வகாண்டா போரெவர் வெளியீட்டில் முடிந்தது. இந்த கட்டத்தின் மொத்தம் ஏழு படங்கள் வெளியாகி, உலக வசூல் ரீதியாக $5.7 பில்லியனுக்கு மேல் வசூலித்தன.

வளர்ச்சி

[தொகு]

அக்டோபர் 2016 வாக்கில் த வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் நிறுவனத்தால் 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டிற்கான பெயரிடப்படாத மார்வெல் இசுடியோசின் படங்களுக்கான பல வெளியீட்டு தேதிகளை திட்டமிடப்பட்டுள்ளது. மார்வெல் இசுடியோசு தலைவரான கேவின் பிகே என்பவர் அந்தத் தேதிகளுக்கான சில படங்கள் ஏற்கனவே அறியப்பட்டவை என்று கூறினார்.[1][10]

நவம்பர் 2017 வாக்கில் டிஸ்னி தனது புதிய இயங்குதள விநியோக சேவையான டிஸ்னி+ என்ற ஓடிடி தளம் ஒன்றை வெளியிடுவதாகவும் அதற்காகக குறிப்பாக மார்வெல் தொலைக்காட்சி தொடரை உருவாக்கி வருகிறது என்றும், இது 2019 ஆம் ஆண்டின் இறுதிக்குள் தொடங்க திட்டமிடப்பட்டடுள்ளது என்று அறிவித்தனர்.[4]

கேவின் பிகே என்பவர் 2019 சான் டியாகோ காமிக்-கானில் நான்காம் கட்ட தலைப்புகள் பற்றிய சந்திப்பின் போது.

ஜூலை 2019 இல் மார்வெல் இசுடியோசு சார்பில் சான் டியாகோ காமிக்-கானில் என்ற வரைகதை சந்திப்பு குழுவை நடத்தி, அங்கு கேவின் பிகே என்பவரால் நான்காம் கட்டத்திற்க்கான பிளாக் விடோவ், எட்டெர்னல்சு, சாங்க்-சி அண்ட் தி லெஜெண்ட் ஒப் தி டென் ரிங்ஸ், டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் இன் த மல்டிவெர்ஸ் ஆப் மேட்னெஸ் மற்றும் தோர்: லவ் அண்ட் தண்டர் போன்ற ஐந்து திரைப்படங்களுக்கான அறிவிப்புடன் டிஸ்னி+[2] ஆக வாண்டாவிஷன், பால்கன் அண்ட் வின்டர் சோல்ஜர், லோகி, வாட் இப்...? மற்றும் ஹாக்ஐ போன்ற ஐந்து தொடர்களுக்கான தயாரிப்பு விவரங்களை அறிவித்தார்.[8] அத்துடன் திரைப்படங்கள் மற்றும் தொடர்களுக்கு இடையே தொடர்புகள் இருக்கும் என்று அவர் உறுதி செய்தார். பின்னர் பிளாக் பான்தர் (2018) மற்றும் கேப்டன் மார்வெல் (2019) ஆகியவற்றின் தொடர்ச்சியான புதிய படங்களுடன் ஃபென்டாஸ்டிக் ஃபோரை[11] அடிப்படையாகக் கொண்ட புதிய படமும் இந்த நான்காம் கட்டத்தில் சேர்க்கப்பட்டது. அந்த நேரத்தில் இந்த படங்கள் குறித்த அதிகாரப்பூர்வமான தேதிகள் வழங்கப்படாது என்றும் கேவின் பிகே என்பவர் குறிப்பிட்டார். ஒரு மாதத்திற்குப் பிறகு மேலும் மிஸ். மார்வெல், மூன் நைட் மற்றும் சீ-ஹல்க் போன்ற மூன்று டிஸ்னி+ தொடர்களை அறிவித்தார், அவை நான்காவது கட்டத்தின் ஒரு பகுதியாக வெளியிடப்படும் என்றும் அத்துடன் பிளாக் பாந்தர் படத்தின் தொடர்ச்சியின் தலைப்புடன் பிளாக் பான்தர் II என்றும் அது மே 6, 2022 வெளியிடப்படும் என்று அறிவித்தார். செப்டம்பரில் டிஸ்னி மற்றும் சோனி பிக்சர்ஸ் ஆகியோர் மார்வெல் இசுடியோசு மற்றும் கேவின் பிகே உடன் இணைந்து மீண்டும் இசுபைடர்-மேன்: நோ வே ஹோம் படத்தை தயாரிக்கத் தயாராக இருப்பதாக அறிவித்தனர்.

கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக பிளாக் விடோவ்[12] படம் மார்ச் 2020 இல் டிஸ்னியின் வெளியீட்டு அட்டவணையில் இருந்து நீக்கப்பட்டது. அத்துடன் பல திரைப்படங்களின் தயாரிப்பு மற்றும் வெளியீடுகள் தள்ளிவைக்கப்பட்டன அல்லது நிறுத்தப்பட்டன.

திரைப்படங்கள்

[தொகு]
திரைப்படம் வெளியான திகதி இயக்குநர் திரைக்கதை தயாரிப்பாளர்
பிளாக் விடோவ் சூலை 9, 2021 (2021-07-09)[13] கேட் சோட்லண்ட்[14] எரிக் பியர்சன்[15] கேவின் பிகே
சாங்க்-சி அண்ட் தி லெஜெண்ட் ஒப் தி டென் ரிங்ஸ் செப்டம்பர் 3, 2021 (2021-09-03) டெஸ்டின் டேனியல் கிரெட்டன்[16] டேவிட் கால்ஹாம், டெஸ்டின் டேனியல் கிரெட்டன், ஆண்ட்ரூ லான்ஹாம்[17] கேவின் பிகே,
ஜொனாதன் சுவார்ட்ஸ்
எட்டெர்னல்சு நவம்பர் 5, 2021 (2021-11-05) சோலி ஜாவோ[18] காஸ் பிர்போ, ரியான் பிர்போ, சோலி ஜாவோ, பேட்ரிக் பர்லீ[19][20] கேவின் பிகே,
நேட் மூர்
இசுபைடர்-மேன்: நோ வே ஹோம் திசம்பர் 17, 2021 (2021-12-17)[21] ஜோன் வாட்ஸ்[22] கிறிஸ் மெக்கேனா, எரிக் சோமர்ஸ்[23] கேவின் பிகே,
அமி பாஸ்கல்
டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் இன் த மல்டிவெர்ஸ் ஆப் மேட்னெஸ் மே 6, 2022 (2022-05-06) சாம் ரைமி[24] ஜேட் பார்ட்லெட், மைக்கேல் வால்ட்ரான்[25][26] கேவின் பிகே
தோர்: லவ் அண்ட் தண்டர் சூலை 8, 2022 (2022-07-08) தைகா வைதிதி[27] தைகா வைதிதி, ஜெனிபர் காய்டின் ரொபின்சன்[28] கேவின் பிகே,
பிராட் விண்டர்பாம்
பிளாக் பான்தர்: வகாண்டா போரெவர் நவம்பர் 11, 2022 (2022-11-11) ரையன் கூக்லர்[29] ரையன் கூக்லர், ஜோ ராபர்ட் கோல்[30] கேவின் பிகே

தொலைக்காட்சி தொடர்கள்

[தொகு]

நான்காம் கட்டத்தில் உள்ள அனைத்து தொடர்களும் டிஸ்னி+ இல் வெளியிடப்படுகின்றன.

தொடர்கள் பருவங்கள் அத்தியாயம் ஒளிபரப்பு திரைக்கதை இயக்குநர்
முதலில் ஒளிபரப்பப்பட்டது கடைசியாக ஒளிபரப்பப்பட்டது
வாண்டாவிஷன் 1 9 சனவரி 15, 2021 (2021-01-15) மார்ச்சு 5, 2021 (2021-03-05) ஜாக் ஷாஃபர்[31] மாட் ஷக்மேன்[32]
பால்கன் அண்ட் வின்டர் சோல்ஜர் 1 6 மார்ச்சு 19, 2021 (2021-03-19) ஏப்ரல் 23, 2021 (2021-04-23) மால்கம் சுபெல்மேன்[33] காரி சுகோக்லாண்ட்[34]
லோகி 1 6 சூன் 9, 2021 (2021-06-09) சூலை 14, 2021 (2021-07-14) மைக்கேல் வால்ட்ரான்[35] கேட் ஹெரான்[36]
வாட் இப்...? 1 9 ஆகத்து 11, 2021 (2021-08-11) அக்டோபர் 6, 2021 (2021-10-06) ஏ.சி. பிராட்லி[37] பிரையன் ஆண்ட்ரூஸ்
ஹாக்ஐ 1 6[38] நவம்பர் 24, 2021 (2021-11-24)[39] திசம்பர் 22, 2021 (2021-12-22)[40] ஜொனாதன் இக்லா[41] ரைஸ் தாமஸ், பெர்ட் மற்றும் பெர்டி[42]
மூன் நைட் 1 6[43] மார்ச்சு 30, 2022 (2022-03-30)[44] மே 4, 2022 (2022-05-04) ஜெர்மி ஸ்லேட்டர்[45] முகமது தியாப், ஜஸ்டின் பென்சன், ஆரோன் மூர்ஹெட்[46]
மிஸ். மார்வெல் 1 6[47] சூன் 8, 2022 (2022-06-08) சூலை 13, 2022 (2022-07-13)[48] பிஷா கே. அலி அடில் எல் அர்பி மற்றும் பிலால் ஃபல்லாஹ், ஷர்மீன் ஒபைட்-சினாய், மீரா மேனன்[49]
சீ-ஹல்க் 1 9 ஆகத்து 17, 2022 (2022-08-17) அக்டோபர் 12, 2022 (2022-10-12)[50] ஜெசிக்கா காவோ[51] கேட் கொய்ரோ, அனு வாலியா[52]
பெயரிடப்படாத மார்வெல் ஹாலோவீன் சிபெஷல் சிறப்பு அக்டோபர் 2022 (2022-10) TBA மைக்கேல் ஜெய்சினோ[53]
கார்டியன்ஸ் ஆப் தி கேலக்ஸி ஹாலிடே சிபெஷல் சிறப்பு திசம்பர் 2022 (2022-12) TBA ஜேம்ஸ் கன்

படத்தின் வருவாய்

[தொகு]
திரைப்படங்கள் வெளியீட்டு தேதி மொத்த வருவாய் அனைத்து நேர தரவரிசை ஆக்கச்செலவு
அமெரிக்கா மற்றும் கனடா பிற பிரதேசங்கள் உலகளவில் அமெரிக்கா மற்றும் கனடா உலகளவில்
பிளாக் விடோவ் சூலை 9, 2021 $183,651,655 $195,979,696 $379,631,351 268 369 $200 மில்லியன்[54][55]
சாங்க்-சி அண்ட் தி லெஜெண்ட் ஒப் தி டென் ரிங்ஸ் செப்டம்பர் 3, 2021 $224,442,148 $206,081,680 $430,523,828 178 299 $150–200 மில்லியன்[56]
எட்டெர்னல்சு நவம்பர் 5, 2021 $118,765,255 $162,600,000 $281,365,255 341 342 $236.2 மில்லியன்[57]
இசுபைடர்-மேன்: நோ வே ஹோம் திசம்பர் 17, 2021 $814,115,070 $1,107,732,041 $1,921,847,111 3 7 $200 மில்லியன்
டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் இன் த மல்டிவெர்ஸ் ஆப் மேட்னெஸ் மே 6, 2022 $411,331,607 $544,444,197 $955,775,804 37 61 $172–200 மில்லியன்
தோர்: லவ் அண்ட் தண்டர் சூலை 8, 2022 $343,256,830 $417,671,251 $760,928,081 66 115 $250 மில்லியன்
பிளாக் பான்தர்: வகாண்டா போரெவர் நவம்பர் 11, 2022 $453,829,060 $405,379,776 $859,208,836 25 85 $250 மில்லியன்
மொத்தம் $2,595,597,748 $3,116,221,930 $5,711,819,678 $1.46–1.54 பில்லியன்

விமர்சனம் மற்றும் பொதுமக்களின் கருத்து

[தொகு]
நான்காம் கட்டம் திரைப்படம்
தலைப்பு விமர்சனம் பொதுமக்கள்
அழுகிய தக்காளிகள் மெட்டாக்ரிடிக் சினிமாஸ்கோர்
பிளாக் விடோவ் 79% (437 மதிப்புரைகள்) 67 (57 மதிப்புரைகள்) ஏ-
சாங்க்-சி அண்ட் தி லெஜெண்ட் ஒப் தி டென் ரிங்ஸ் 92% (318 மதிப்புரைகள்) 71 (52 மதிப்புரைகள்)
எட்டெர்னல்சு 47% (340 மதிப்புரைகள்) 52 (62 மதிப்புரைகள்) பி
இசுபைடர்-மேன்: நோ வே ஹோம் 93% (432 மதிப்புரைகள்) 71 (60 மதிப்புரைகள்) ஏ+
டாக்டர் ஸ்ட்ரேஞ்ச் இன் த மல்டிவெர்ஸ் ஆப் மேட்னெஸ் 73% (460 மதிப்புரைகள்) 60 (65 மதிப்புரைகள்) பி+
தோர்: லவ் அண்ட் தண்டர் 63% (446 மதிப்புரைகள்) 57 (64 மதிப்புரைகள்) பி+
பிளாக் பான்தர்: வகாண்டா போரெவர் 83% (447 மதிப்புரைகள்) 67 (62 மதிப்புரைகள்)
நான்காம் கட்டம் தொடர்கள்
தலைப்பு பருவம் அழுகிய தக்காளிகள் மெட்டாக்ரிடிக்
வாண்டாவிஷன் 91% (192 மதிப்புரைகள்) 77 (41 மதிப்புரைகள்)
பால்கன் அண்ட் வின்டர் சோல்ஜர் 89% (30 மதிப்புரைகள்) 75 (30 மதிப்புரைகள்)
லோகி 1 92% (127 மதிப்புரைகள்) 74 (30 மதிப்புரைகள்)
வாட் இப்...? 1 93% (76 மதிப்புரைகள்) 69 (15 மதிப்புரைகள்)
ஹாக்ஐ 92% (174 மதிப்புரைகள்) 66 (27 மதிப்புரைகள்)
மூன் நைட் 86% (240 மதிப்புரைகள்) 69 (27 மதிப்புரைகள்)
மிஸ். மார்வெல் 98% (304 மதிப்புரைகள்) 78 (23 மதிப்புரைகள்)
சீ-ஹல்க் 77% (613 மதிப்புரைகள்) 67 (26 மதிப்புரைகள்)

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 Chitwood, Adam (April 21, 2017). "Kevin Feige Says the Post-'Avengers 4' MCU May Be a 'New Thing', Not 'Phase 4'". Collider. Archived from the original on April 23, 2017. பார்க்கப்பட்ட நாள் April 22, 2017.
  2. 2.0 2.1 Davis, Brandon (February 25, 2019). "Kevin Feige Promises Disney+ Shows Are Directly Connected to Marvel Cinematic Universe". ComicBook.com. Archived from the original on February 26, 2019. பார்க்கப்பட்ட நாள் February 26, 2019.
  3. Dinh, Christine (April 12, 2019). "All of the Marvel Disney+ News Coming Out of The Walt Disney Company's Investor Day". Marvel.com. Archived from the original on April 12, 2019. பார்க்கப்பட்ட நாள் April 12, 2019.
  4. 4.0 4.1 Cavanaugh, Patrick (May 15, 2019). "Kevin Feige Teases That Disney+ TV Series Will Honor the Spirit of Marvel One-Shots". ComicBook.com. Archived from the original on May 16, 2019. பார்க்கப்பட்ட நாள் May 19, 2019.
  5. Gonzalez, Umberto; Welk, Brian (September 23, 2020). "Disney Pushes 'Black Widow' Back to 2021". TheWrap. Archived from the original on September 23, 2020. பார்க்கப்பட்ட நாள் September 23, 2020.
  6. Welk, Brian (April 3, 2020). "'Black Widow' Moves to November as Other MCU Films Shift Back to 2021, 2022". TheWrap. Archived from the original on April 3, 2020. பார்க்கப்பட்ட நாள் April 3, 2020.
  7. Moreau, Jordan (July 23, 2020). "'Spider-Man: Far From Home' Sequel Delayed to December 2021". Variety. Archived from the original on July 24, 2020. பார்க்கப்பட்ட நாள் July 23, 2020.
  8. 8.0 8.1 Kroll, Justin (September 18, 2018). "Loki, Scarlet Witch, Other Marvel Heroes to Get Own TV Series on Disney Streaming Service (Exclusive)". Variety. Archived from the original on September 19, 2018. பார்க்கப்பட்ட நாள் September 18, 2018.
  9. Couch, Aaron; Kit, Borys (July 20, 2019). "Marvel Unveils Post-'Endgame' Slate with 'Eternals', 'Shang-Chi' and Multiple Sequels". The Hollywood Reporter. Archived from the original on July 21, 2019. பார்க்கப்பட்ட நாள் July 20, 2019.
  10. Weintraub, Steve (October 27, 2016). "Kevin Feige on 'Avengers: Infinity War', Spider-Man's Future, 2019 & 2020 MCU Movies, and 'Doctor Strange'". Collider. Archived from the original on October 28, 2016. பார்க்கப்பட்ட நாள் October 28, 2016.
  11. Liptak, Andrew (July 20, 2019). "Future Marvel projects will include the X-Men, Fantastic Four, and Captain Marvel 2". The Verge. Archived from the original on July 21, 2019. பார்க்கப்பட்ட நாள் July 21, 2019.
  12. Welk, Brian (April 3, 2020). "'Black Widow' Moves to November as Other MCU Films Shift Back to 2021, 2022". TheWrap. Archived from the original on April 3, 2020. பார்க்கப்பட்ட நாள் April 3, 2020.
  13. Rubin, Rebecca (March 23, 2021). "'Black Widow,' 'Cruella' to Debut on Disney Plus and in Theaters as Disney Shifts Dates for Seven Films". Variety. Archived from the original on March 23, 2021. பார்க்கப்பட்ட நாள் March 23, 2021.
  14. Kit, Borys (July 12, 2018). "'Black Widow' Movie Finds Director in Cate Shortland (Exclusive)". The Hollywood Reporter. Archived from the original on July 13, 2018. பார்க்கப்பட்ட நாள் July 12, 2018.
  15. Barnhardt, Andrew (January 14, 2020). "Thor: Ragnarok Writer Gets Sole Screenwriting Credit on Black Widow". ComicBook.com. Archived from the original on January 15, 2020. பார்க்கப்பட்ட நாள் January 16, 2020.
  16. Couch, Aaron; Kit, Borys (March 13, 2019). "Marvel's 'Shang-Chi' Sets Director Destin Daniel Cretton". The Hollywood Reporter. Archived from the original on March 14, 2019. பார்க்கப்பட்ட நாள் March 13, 2019.
  17. Debruge, Peter (August 23, 2021). "'Shang-Chi and the Legend of the Ten Rings' Review: Marvel Gives Lesser-Known Asian Hero the A-List Treatment". Variety. Archived from the original on August 23, 2021. பார்க்கப்பட்ட நாள் August 23, 2021.
  18. Kit, Borys (September 21, 2018). "Marvel Studios' 'The Eternals' Finds Its Director With Chloe Zhao". The Hollywood Reporter. Archived from the original on September 21, 2018. பார்க்கப்பட்ட நாள் September 21, 2018.
  19. Anderton, Ethan (May 24, 2021). "Why Does Marvel's 'Eternals' Poster Credit Chloé Zhao With Two Writing Credits?". /Film. Archived from the original on May 24, 2021. பார்க்கப்பட்ட நாள் May 24, 2021.
  20. "The Eternals". Writers Guild of America West. Archived from the original on August 14, 2021. பார்க்கப்பட்ட நாள் August 13, 2021.
  21. Paige, Rachel (February 24, 2021). "'Spider-Man: No Way Home' Premieres in December 2021". Marvel.com. Archived from the original on February 24, 2021. பார்க்கப்பட்ட நாள் February 24, 2021.
  22. Labonte, Rachel (June 10, 2020). "MCU's Spider-Man 3: Marisa Tomei Teases What To Expect Of Aunt May". Screen Rant. Archived from the original on June 12, 2020. பார்க்கப்பட்ட நாள் June 12, 2020.
  23. Fleming, Mike Jr. (August 23, 2019). "Next Post-'Spider-Man' Skirmish For Sony & Disney: A Tug Of War Over 'Spider-Man' Helmer Jon Watts?". Deadline Hollywood. Archived from the original on August 24, 2019. பார்க்கப்பட்ட நாள் August 24, 2019.
  24. Evangelista, Chris (April 15, 2020). "Sam Raimi Confirms He's Directing 'Doctor Strange in the Multiverse of Madness'". Film. Archived from the original on April 15, 2020. பார்க்கப்பட்ட நாள் April 15, 2020.
  25. Sneider, Jeff (October 17, 2019). "Exclusive: Marvel Taps Jade Halley Bartlett to Write 'Doctor Strange in the Multiverse of Madness'". Collider. Archived from the original on October 17, 2019. பார்க்கப்பட்ட நாள் October 17, 2019.
  26. Kit, Borys (February 7, 2020). "'Doctor Strange 2' Lands New Writer With 'Loki' Show Creator (Exclusive)". The Hollywood Reporter. Archived from the original on February 8, 2020. பார்க்கப்பட்ட நாள் February 7, 2020.
  27. Kit, Borys (July 16, 2019). "Taika Waititi to Direct 'Thor 4' (Exclusive)". The Hollywood Reporter. Archived from the original on July 17, 2019. பார்க்கப்பட்ட நாள் July 16, 2019.
  28. Kroll, Justin (February 10, 2020). "'Thor' Sequel Writing Staff Recruits 'Someone Great's' Jennifer Kaytin Robinson (Exclusive)". Variety. Archived from the original on February 11, 2020. பார்க்கப்பட்ட நாள் February 11, 2020.
  29. Kit, Borys (October 11, 2018). "Ryan Coogler Signs on to Write and Direct 'Black Panther' Sequel (Exclusive)". The Hollywood Reporter. Archived from the original on October 12, 2018. பார்க்கப்பட்ட நாள் October 11, 2018.
  30. Meares, Joel (July 12, 2021). "Kevin Feige Previews the MCU's Upcoming Phase 4: Shang-Chi, Eternals, No Way Home, Wakanda Forever, and More". Rotten Tomatoes. Archived from the original on July 12, 2021. பார்க்கப்பட்ட நாள் July 12, 2021.
  31. Kit, Borys (January 9, 2019). "Marvel's 'Vision and Scarlet Witch' Series Lands 'Captain Marvel' Writer (Exclusive)". The Hollywood Reporter. Archived from the original on January 10, 2019. பார்க்கப்பட்ட நாள் January 10, 2019.
  32. Couch, Aaron (August 23, 2019). "Marvel Unveils 3 New Disney+ Shows Including 'She-Hulk' and 'Moon Knight'". The Hollywood Reporter. Archived from the original on August 23, 2019. பார்க்கப்பட்ட நாள் August 23, 2019.
  33. Kroll, Justin; Otterson, Joe (October 30, 2018). "Falcon-Winter Soldier Limited Series in the Works With 'Empire' Writer (Exclusive)". Variety. Archived from the original on October 31, 2018. பார்க்கப்பட்ட நாள் October 31, 2018.
  34. Fleming, Mike Jr. (May 20, 2019). "Kari Skogland To Direct 6-Part 'The Falcon And The Winter Soldier' Miniseries With Anthony Mackie, Sebastian Stan, Daniel Bruhl & Emily Van Camp". Deadline Hollywood. Archived from the original on May 21, 2019. பார்க்கப்பட்ட நாள் May 20, 2019.
  35. Kit, Borys (February 15, 2019). "Marvel's 'Loki' Series Lands 'Rick and Morty' Writer (Exclusive)". The Hollywood Reporter. Archived from the original on February 18, 2019. பார்க்கப்பட்ட நாள் February 18, 2019.
  36. Vejvoda, Jim (August 24, 2019). "Loki Will Take Character "to an Entirely New Part of the MCU"". IGN. Archived from the original on August 24, 2019. பார்க்கப்பட்ட நாள் August 24, 2019.
  37. Radulovic, Petrana (August 24, 2019). "Everything we learned at D23's Disney Plus presentation". Polygon. Archived from the original on August 24, 2019. பார்க்கப்பட்ட நாள் August 24, 2019.
  38. Hussaini, Syed Fahadullah (August 31, 2021). "Hawkeye Show Episode Count Revealed". Screen Rant. Archived from the original on September 1, 2021. பார்க்கப்பட்ட நாள் September 2, 2021.
  39. Holub, Christian (July 29, 2021). "Clint Barton finally meets Kate Bishop in Hawkeye first look". Entertainment Weekly. Archived from the original on July 29, 2021. பார்க்கப்பட்ட நாள் July 29, 2021.
  40. Oddo, Marco Vito (October 20, 2021). "New 'Hawkeye' TV Spot Reveals the Comic Book Mercenary Kazi, a.k.a. Clown". Collider. Archived from the original on October 20, 2021. பார்க்கப்பட்ட நாள் October 20, 2021.
  41. Kit, Borys (September 6, 2019). "Marvel's 'Hawkeye' Series Finds Its Writer With 'Mad Men' Scribe (Exclusive)". The Hollywood Reporter. Archived from the original on September 6, 2019. பார்க்கப்பட்ட நாள் September 6, 2019.
  42. Kit, Borys (July 17, 2020). "Marvel's 'Hawkeye' Disney+ Series Lands 'Troop Zero,' 'Comrade Detective' Directors (Exclusive)". The Hollywood Reporter. Archived from the original on July 17, 2020. பார்க்கப்பட்ட நாள் July 18, 2020.
  43. Goldberg, Matt (January 11, 2021). "How Long Are Marvel's Disney+ Shows? Kevin Feige Talks 'Loki', 'Falcon and the Winter Soldier', and 'She-Hulk'". Collider. Archived from the original on January 11, 2021. பார்க்கப்பட்ட நாள் January 11, 2021.
  44. Hipes, Patrick (November 12, 2021). "Disney+ Day: All The Streamer's Film & TV News From Premiere Dates To Series Orders". Deadline Hollywood. Archived from the original on November 12, 2021. பார்க்கப்பட்ட நாள் November 12, 2021.
  45. Kit, Borys; Goldberg, Lesley (November 8, 2019). "Marvel's 'Moon Knight' Series Finds Its Head Writer With 'Umbrella Academy' Series Creator (Exclusive)". The Hollywood Reporter. Archived from the original on November 8, 2019. பார்க்கப்பட்ட நாள் November 8, 2019.
  46. Kit, Borys (January 8, 2021). "Marvel's 'Moon Knight': Indie Auteurs Justin Benson and Aaron Moorhead Board as Directors (Exclusive)". The Hollywood Reporter. Archived from the original on January 8, 2021. பார்க்கப்பட்ட நாள் January 8, 2021.
  47. Frater, Patrick (May 11, 2021). "'Ms. Marvel' Series Completes Production in Thailand Despite Virus Resurgence (Exclusive)". Variety. Archived from the original on May 11, 2021. பார்க்கப்பட்ட நாள் May 11, 2021.
  48. Roberts, Kayleigh (May 16, 2022). "Here's When Every Episode of 'Ms. Marvel' Comes Out". Cosmopolitan. Archived from the original on May 17, 2022. பார்க்கப்பட்ட நாள் May 16, 2022.
  49. Couch, Aaron (September 18, 2020). "'Ms. Marvel' Finds Directors in Pakistani Oscar Winner, 'Bad Boys For Life' Filmmakers (Exclusive)". The Hollywood Reporter. Archived from the original on September 18, 2020. பார்க்கப்பட்ட நாள் September 18, 2020.
  50. Spencer, Samuel (May 18, 2022). "'She-Hulk: Attorney at Law' Disney+ Release Date, Cast, Trailer, Plot". Newsweek. Archived from the original on May 18, 2022. பார்க்கப்பட்ட நாள் May 18, 2022.
  51. Kit, Borys (November 8, 2019). "Marvel's 'She-Hulk' Finds Its Head Writer With 'Rick and Morty' Scribe (Exclusive)". The Hollywood Reporter. Archived from the original on November 8, 2019. பார்க்கப்பட்ட நாள் November 8, 2019.
  52. Paige, Rachel (December 10, 2020). "Tatiana Maslany Stars in new 'She-Hulk' Comedy Series Coming to Disney+". Marvel.com. Archived from the original on December 11, 2020. பார்க்கப்பட்ட நாள் December 10, 2020.
  53. Kit, Borys (March 11, 2022). "Composer Michael Giacchino to Direct Marvel's Halloween Special". The Hollywood Reporter. Archived from the original on March 11, 2022. பார்க்கப்பட்ட நாள் March 11, 2022.
  54. "Black Widow (2021)". Box Office Mojo. பார்க்கப்பட்ட நாள் November 4, 2021.
  55. Rubin, Rebecca (July 7, 2021). "Box Office: 'Black Widow' Poised to Race Past 'F9's' Pandemic Record Debut". Variety. Archived from the original on July 7, 2021. பார்க்கப்பட்ட நாள் July 7, 2021.
  56. "Shang-Chi and the Legend of the Ten Rings (2021)". Box Office Mojo. பார்க்கப்பட்ட நாள் November 14, 2021.
  57. "Eternals (2021)". Box Office Mojo. பார்க்கப்பட்ட நாள் November 14, 2021.