உள்ளடக்கத்துக்குச் செல்

மவுச்சரைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மவுச்சரைட்டு
Maucherite
கியூபானைட்டு-மவுச்சரைட்டு-வாலெரைட்டு
பொதுவானாவை
வகைஆர்சனைடு கனிமம்
வேதி வாய்பாடுNi11As8
இனங்காணல்
நிறம்சாம்பல் முதல் சிவப்பு, வெள்ளி வெண்மை வரை
படிக அமைப்புநாற்கோணம்
மோவின் அளவுகோல் வலிமை4.5–5.5
கீற்றுவண்ணம்சாம்பல் கருப்பு
ஒப்படர்த்தி6.9–7.3
மேற்கோள்கள்[1]

மவுச்சரைட்டு (Maucherite) என்பது Ni11As8 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். பொதுவாக செம்பு, இரும்பு, கோபால்ட்டு, ஆண்டிமனி மற்றும் கந்தகம் ஆகியவை அசுத்தங்களாக இதனுடன் கலந்துள்ளன. சாம்பல் முதல் சிவப்பு வெள்ளி வெள்ளை நிறங்களில் காணப்படும் நிக்கல் ஆர்சனைடு கனிமமாக இது கருதப்படுகிறது.

நாற்கோண படிக அமைப்பில் படிகமாகும் இக்கனிமம் மற்ற நிக்கல் ஆர்சனைடு மற்றும் சல்பைடு தாதுக்களுடன் நீர் வெப்ப இழைப் பகுதிகளில் தோன்றுகிறது. 5 என்ற மோவின் கடினத்தன்மை அளவும் 7.83 என்ற ஒப்படர்த்தி அளவும் கொண்டு உலோகத்தன்மையுடன் ஒளிபுகா படிகமாக பண்புகளை வெளிப்படுத்துகிறது. இதன் அலகு செல் சமச்சீர் குழு P41212 அல்லது P43212 ஆகும்.

1913 ஆம் ஆண்டில் செருமனியின் ஈசுலெபனில் மௌச்சரைட்டு கண்டுபிடிக்கப்பட்டது. செருமன் கனிம சேகரிப்பாளரான வில்லெம் மௌச்சரின் (1879-1930) நினைவாக பெயரிடப்பட்டது.

பன்னாட்டு கனிமவியல் சங்கம் மவுச்சரைட்டு கனிமத்தை Muc[2] என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Mineralienatlas
  2. Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W. 
  • Mindat localities
  • Schumann, Walter (1991). Mineralien aus aller Welt. BLV Bestimmungsbuch (2 ed.). p. 223. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-405-14003-8.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மவுச்சரைட்டு&oldid=4145690" இலிருந்து மீள்விக்கப்பட்டது