மலாயா பல்கலைக்கழகம்
மலாயா பல்கலைக்கழகத்தின் நுழைவாசல் | |
முந்தைய பெயர் | மன்னர் ஏழாம் எட்வர்ட் மருத்துவக் கல்லூரி ராபிள்ஸ் கல்லூரி சிங்கப்பூரின் மலாயா பல்கலைக்கழகம் |
---|---|
குறிக்கோளுரை | அறிவுதான் முன்னேற்றத்தின் ஆதாரம் (Ilmu Puncha Kemajuan) (Knowledge is the Source of Progress) |
வகை | பொதுத்துறை பல்கலைக்கழகம் (ஆய்வுப் பல்கலைக்கழகம் |
உருவாக்கம் | 28 செப்டம்பர் 1905[1][2] |
நிதிக் கொடை | MYR 633 மில்லியன். (2021)[3] (US $135 மில்லியன்) |
வேந்தர் | பேராக் சுல்தான் நசுரின் சா |
துணை வேந்தர் | பேராசிரியர் டத்தோ நூர் அசுவான் அபு ஒசுமான் |
மாணவர்கள் | 35,054 (2023)[4] |
பட்ட மாணவர்கள் | 20,181 (2023)[4] |
பட்டப்பின் படிப்பு மாணவர்கள் | 14,873 (2023)[4] |
அமைவிடம் | Universiti Malaya, 50603 , , 3°07′15″N 101°39′23″E / 3.12083°N 101.65639°E |
நிறங்கள் | சிவப்பு, பொன், நீலம் |
சேர்ப்பு | பொ.ப.கூ, பசிபிக் விளிம்பு பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பு, தென்கிழக்காசிய உயர் கல்வி நிறுவனங்களின் கூட்டமைப்பு, ஆசியான் பல்கலைக்கழகப் பிணையம், இசுலாமிய உலகப் பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பு,[5] |
இணையதளம் | www |
மலாயா பல்கலைக்கழகம் (மலாய்:Universiti Malaya; ஆங்கிலம்:University of Malaya; ஜாவி: ونيۏرسيتي ملايا சீனம்: 馬來亞大學) என்பது மலேசியாவின் மிகப் பழைய பல்கலைக்கழகம் ஆகும். 1905-ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்தப் பல்கலைக்கழகம் கோலாம்பூருக்கு அருகே லெம்பா பந்தாய் பகுதியில் அமைந்துள்ளது. இது உலகின் முன்னணிப் பல்கலைக்கழங்களில் ஒன்றாகும்.
மலாயா சுதந்திரம் அடைந்த போது மலாயாவில் இருந்த ஒரே பல்கலைக்கழகம் இதுவாகும்.[6] மலேசியாவின் ஐந்து பிரதமர்கள் மற்றும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த அரசியல், வணிகம் மற்றும் கலாசாரப் பிரமுகர்கள்; இந்தப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர்கள் ஆவார்கள்.[7]
இங்கு தமிழ் மொழிப் பட்டப் படிப்பும் வழங்கப்படுகிறது. மலாயா பல்கலைக்கழகத்தில் இரண்டு புலங்களில் தமிழ்மொழி கற்பிக்கப்படுகின்றது. கல்வி புலத்தில், இந்திய ஆய்வியல் துறையின் கீழ் தமிழ்மொழி இளங்கலை பட்டப்படிப்பு வழங்கப்படுகிறது. மொழியியல் புலத்தின் கீழ் இளங்கலை மொழியியல் பட்டப்படிப்பு வழங்கப்படுகிறது.
பொது
[தொகு]மலாயா பல்கலைக்கழகத்தின் முன்னோடிக் கல்லூரியான மன்னர் ஏழாம் எட்வர்ட் மருத்துவக் கல்லூரி, 28 செப்டம்பர் 1905 அன்று சிங்கப்பூரில் நிறுவப்பட்டது. அப்போது சிங்கப்பூர் பிரித்தானியப் பேரரசின் ஒரு பிரதேசமாக இருந்தது. அக்டோபர் 1949-இல், மன்னர் ஏழாம் எட்வர்ட் மருத்துவக் கல்லூரியும்; ராபிள்ஸ் கல்லூரியும் இணைக்கப்பட்டதும், புதிய பல்கலைக்கழகமாக மலாயா பல்கலைக்கழகம் உருவானது.
15 சனவரி 1959-இல் மலாயா பல்கலைக்கழகத்தின் இரண்டு தன்னாட்சி பிரிவுகள்; ஒன்று சிங்கப்பூரிலும் மற்றொன்று கோலாலம்பூரிலும் அமைக்கப்பட்டன. 1960-ஆம் ஆண்டில், இந்த இரண்டு பிரிவுகளும் தன்னாட்சி மற்றும் தனி தேசியப் பல்கலைக்கழகங்களாக மாற வேண்டும் என்று மலேசிய அரசாங்கம் கருத்துரைத்தது.
சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகம்
[தொகு]அதன்படி ஒரு பிரிவு சிங்கப்பூரில் அமைக்கப்பட்டு, சிங்கப்பூர் பல்கலைக்கழகம் என பெயரைப் பெற்றது. பின்னர் அந்தப் பல்கலைக்கழகத்திற்கு சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகம் என மறுபெயரிடப்பட்டது. 1965-ஆம் ஆண்டில், மலேசியாவில் இருந்து சிங்கப்பூர் விடுதலை அடைந்த பிறகு, மற்றொரு பலகலைக்கழகப் பிரிவு கோலாலம்பூரில் அமைக்கப்பட்டு, மலாயா பல்கலைக்கழகம் என்று பெயரிடப்பட்டது.
1961-ஆம் ஆண்டு மலேசியச் சட்டத்தின் கீழ், 1962 சன்வரி 1-ஆம் தேதி மலாயா பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது. 2012-ஆம் ஆண்டில், மலேசிய உயர்க் கல்வி அமைச்சினால் மலாயா பல்கலைக்கழகத்திற்கு தன்னாளுமை தகுதி வழங்கப்பட்டது.[1][8][2]
தரவரிசை பட்டியல்
[தொகு]தற்போது, மலாயா பல்கலைக்கழகம் 2,300-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள்; விரிவுரையாளர்கள்; பேராசிரியர்கள் எனும் கல்வியாளர்களைக் கொண்டுள்ளது.[4] மேலும், இந்தப் பல்கலைக்கழகம் பதின்மூன்று துறைகள், இரண்டு கல்விக்கூடங்கள், ஐந்து கல்விக் கழகங்கள் மற்றும் ஆறு கல்வி மையங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அண்மைய உலகப் பல்கலைகழகங்களின் தரவரிசை பட்டியலில், மலாயா பல்கலைக்கழகம் தற்போது உலகில் 65-ஆவது இடத்திலும், ஆசியாவில் 11-ஆவது இடத்திலும், தென்கிழக்கு ஆசியாவில் 3-ஆவது இடத்திலும் உள்ளது. அத்துடன் மலேசியாவில் மிக உயர்ந்த தரவரிசை கற்றல் நிறுவனமாகவும் உள்ளது..[9]
மலேசியப் பிரதமர்கள்
[தொகு]மலேசியாவின் வளர்ச்சிக்கு பல ஆண்டுகளாக, குறிப்பிடத்தக்க பங்களிப்புகளை வழங்கிய மாணவர்கள் பலரை மலாயா பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ளது. மேலும் அதன் பட்டதாரிகள் நாட்டின் பல்வேறு துறைகளில் குறிப்பிடத்தக்கவர்களாக உள்ளனர். அரசியலில், மலாயா பல்கலைக்கழகம் அதிக எண்ணிக்கையிலான பிரதமர்களை உருவாக்கியுள்ளது.
மலேசியாவின் பத்து ப��ரதமர்களில் ஐவர், மலாயா பல்கலைக்கழகத்தில் படித்துப் பட்டம் பெற்றவர்கள் ஆவார்கள். மலாயா பல்கலைக்கழகத்தின் முன்னாள் பட்டதாரிகள் மக்களவை உறுப்பினர்களாகவும், மேலவை உறுப்பினர்களாகவும், மாநில சட்டமன்ற உறுப்பினர்களாகவும், மத்திய அமைச்சரவையின் அமைச்சர்களாகவும், முதலமைச்சர்களாகவும், ஆளுநர்களாகவும் மற்றும் மலேசிய மேலவை; மலேசிய மக்களவை; இரு அவைகளின் அவைத் தலைவர்களாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.[10]
குறிப்பிடத்தக்க அரசியல்வாதிகள்
[தொகு]குறிப்பிடத்தக்க அரசியல்வாதிகளில் மலேசிய மக்களவையின் தற்போதைய அவைத் தலைவர் ஜொகாரி அப்துல், மலேசிய மேலவையின் முன்னாள் அவைத் தலைவர் விக்னேஸ்வரன் சன்னாசி, முன்னாள் நிதி அமைச்சர் டாயிம் சைனுடின் போன்றவர்கள் முன்னாள் மாணவர்கள் ஆவார்கள்.[11] [12]
முன்னாள் மலாக்கா ஆளுநர்; மற்றும் பகாங் மாநிலத்தின் மந்திரி பெசார் முகமட் கலீல் யாக்கோப்; மற்றும் சுங்கை பூலோ மக்களவை தொகுதியின் மக்களவை உறுப்பினர் சிவராசா ராசையா போன்றோர் மலாயா பல்கலைக்கழகத்தில் முதுநிலை பட்டம் பெற்றவர்கள் ஆவார்கள்.[13][14]
காட்சியகம்
[தொகு]-
சட்டத்துறை வளாகம்
-
பல்கலைக்கழக நூலகம்
-
அருகிலுள்ள அலுவலக கட்டிடங்கள்
-
பல்கலைக்கழக பேருந்து நிறுத்தம்
-
துங்கு சான்சலர் மண்டபம்
-
பல்கலைக்கழக கலைக்கூடம்
-
பல்கலைக்கழக எல்ஆர்டி தொடருந்து நிலையம்
-
பல்கலைக்கழக மொழியியல் துறை
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "Our History". um.edu.my. Archived from the original on 2017-09-08. பார்க்கப்பட்ட நாள் 25 September 2017.
- ↑ 2.0 2.1 "University of Malaya – The oldest university in Malaysia". Malaysia Central. 6 June 2008. பார்க்கப்பட்ட நாள் 25 September 2017.
- ↑ "Financial Report 2021" (PDF). Universiti Malaya. 2021. p. 339.
- ↑ 4.0 4.1 4.2 4.3 "UM Fact Sheet". um.edu.my. Archived from the original on 2018-04-18.
- ↑ "Federation of the Universities of the Islamic World". Archived from the original on 26 January 2005. பார்க்கப்பட்ட நாள் 16 April 2010.
- ↑ "World University Rankings". Times Higher Education (THE) (in ஆங்கிலம்). 2018-09-26. பார்க்கப்பட்ட நாள் 2019-05-11.
- ↑ "Learning from Universiti Malaya's success stories". The New Straits Times. 8 November 2021. https://www.nst.com.my/opinion/letters/2021/11/743311/learning-universiti-malayas-success-stories. பார்த்த நாள்: 4 May 2022.
- ↑ humans.txt. "UM Fact Sheet". um.edu.my. பார்க்கப்பட்ட நாள் 23 July 2018.
- ↑ "Universiti Malaya (UM)". QS Top Universities. பார்க்கப்பட்ட நாள் 31 July 2018.
- ↑ "Johari Abdul: Dari kerusi Parlimen ke Yang Dipertua". Berita Harian. 19 December 2022. பார்க்கப்பட்ட நாள் 2023-10-26.
- ↑ "PROMULGATION OF THE 17TH PRESIDENT OF THE SENATE". Malaysian Parliament. 11 May 2016. பார்க்கப்பட்ட நாள் 2023-10-26.
- ↑ "Daim gets PhD 11 years later". New Straits Times (in ஆங்கிலம்). 13 October 2019. பார்க்கப்பட்ட நாள் 2023-10-26.
- ↑ "Tun Datuk Seri Utama Dr. Mohd Khalil Bin Yaakob". Klip.my (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-10-26.
- ↑ "Sivarasa A/L K. Rasiah". MYMP.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-10-26.