உள்ளடக்கத்துக்குச் செல்

மரியம் அல் அசுத்துருலாபி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மரியம் அல் அசுத்துருலாபி (Mariam al-Asturlabi) அல்லது அல்-'லிய்லியா பிந்த் அல்-'லிய்லி அல்-அசுத்துருலாபி (அரபு மொழி: العجلية بنت العجلي الأسطرلابي),[1] ஒரு பத்தாம் நூற்றாண்டு இடைக்கால இசுலாமியப் பெண் வானியலாளர் ஆவார். இவர் இன்றைய வடக்கு சிரியாவான அலெப்போவில் வாழ்ந்த வான்கோளம் உருவாக்குபவர் ஆவார்.[2][3]

இளமை

[தொகு]

இவர் வான்கோளம் செய்பவராகிய அல்-'லிய்லி அல்-அசுத்துருலாபியின் மகளாவார்.[3] இபின் அல் நாதிம் கூறுகிறபடி, இவர் பாசுதுலசுவிடம் பயில்நிலையாளராக இருந்துள்ளார்.[3]

வாழ்க்கைப்பணி

[தொகு]

அல்-'லிய்லியா கடல், வான் பயணத்துக்கு வழிகாட்டியாக விளங்கும் கருவியாகிய வான்கோளங்களைப் பத்தாம் நூற்றாண்டில் வடிவமைத்து உருவாக்கினார்.[1][4] இவர் கி.பி. 944 முதல் 967 வரையில் ஆட்சிபுரிந்த சாயிப் அல் தாவ்லவால் பணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.[1][3]

தகைமைகள்

[தொகு]

என்றி ஈ. கோல்ட் 1990 இல் கண்டுபிடித்த முதன்மைப் பட்டைச் சிறுகோள் 7060 அல்-'லிய்லியா இவரது நினைவாகப் பெயரிடப்பட்டுள்ளது.[2] பெயரீட்டுச் சான்று 2016 நவம்பர் 14 இல் வெளியிடப்பட்டது (சி. கோ. சு. 102252).[5]

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 Salim Al-Hassani. "Women's Contribution to Classical Islamic Civilisation: Science, Medicine and Politics". பார்க்கப்பட்ட நாள் 2016-08-15.
  2. 2.0 2.1 "7060 Al-'Ijliya (1990 SF11)". Minor Planet Center. பார்க்கப்பட்ட நாள் 21 November 2016.
  3. 3.0 3.1 3.2 3.3 Dodge, Bayard (1970). The Fihrist of Al-Nadīm: A Tenth-century Survey of Muslim Culture. Columbia University Press. p. 671. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-231-02925-4.
  4. "How astronomers and instrument-makers in Muslim civilisations expanded our knowledge of the universe | Muslim Women's Council". www.muslimwomenscouncil.org.uk. Archived from the original on 2016-08-13. பார்க்கப்பட்ட நாள் 2016-08-12.
  5. "MPC/MPO/MPS Archive". Minor Planet Center. பார்க்கப்பட்ட நாள் 21 November 2016.

வெளி இணைப்புகள்

[தொகு]