உள்ளடக்கத்துக்குச் செல்

மணிஷா குல்யாணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மணிஷா குல்யாணி
பிறப்புசெய்ப்பூர், ராஜஸ்தான்
பணிநிகழ்த்து கலைஞர்
வலைத்தளம்
http://www.manishagulyani.in

மனிஷா குல்யானி 1985 செப்டம்பர் 14 ஆம் தேதி பிறந்த (Manisha Gulyani) இவர் இந்தியாவைச் சேர்ந்த கதக் நடனக் கலைஞராவார். [1] இவர் இந்திய கலாச்சார உறவுகள் அமைப்பின் கதக் கலைஞரும், வெளிநாடுகளில் உள்ள இந்திய கலாச்சார மையங்களுக்கான அமைப்பின் ஆசிரியரும் மற்றும் கலைஞருமான பண்டிட். கிர்தாரி மகாராஜின் சீடர் ஆவார். [2] [3] [4] இவர் இந்தியாவிலும் வெளிநாட்டிலும் உள்ள பல்வேறு முக்கிய தளங்களில் தனது நிகழ்ச்சிகளை வழங்கியுள்ளார். [5] [6]

ஆரம்ப கால வாழ்க்கை

[தொகு]

மனிஷா இந்தியாவின் ஜெய்ப்பூரில் பிறந்து வளர்ந்தார். ஜெய்ப்பூர் கதக் கேந்திராவில் இளம் வயதில் தனது பயிற்சியைத் தொடங்கினார். பின்னர் இந்தியாவின் புகழ்பெற்ற பிற நிறுவனங்களிலிருந்தும் கதக்கில் மேம்பட்ட தகுதிகளைப் பெற்றார். மணீஷா குல்யானி மேலும் 7 வயதிற்குள், தனது நடனப் பயிற்சியைத் தொடங்கினார். குழந்தை பருவத்திலிருந்தே, அவர் கதக் கற்க ஆர்வமாக இருந்தார் மற்றும் வடிவத்தில் நிபுணத்துவம் பெற்றார். ஜெய்ப்பூர் கதக் கேந்திராவில் தனது முதல் நடனப் பள்ளியாக சேர்ந்தார், ஜெய்ப்பூர் கரானாவின் கதக் கற்றார்

தொழில்

[தொகு]

இவர் ஒரு நல்ல கதக் நடனக் கலைஞர் மட்டுமல்ல, மற்ற இந்திய திரைப்பட மற்றும் நாட்டுப்புற நடனங்களான சாரி, கூமர், கல்பெலியா, மன்ட், கெய்ர், கர்பா, தாண்டியா, கிடா, காஷ்மீரி-தூங்ரி, பஹாரி, பெங்காலி, ஒடியா மற்றும் சில பழங்குடியின நடனங்களையும் நடனமாடத் தெரிந்தவர். [7]

இந்திய பாரம்பரிய இசைத் துறையில் ஆய்வுக் கட்டுரைகளை வழங்கிய இவர் பாரதிய வித்யா பவன் மற்றும் ஜெய்ப்பூர், தில்லி பப்ளிக் பள்ளியின் நடன பயிற்றுநராக இருந்துள்ளார். இவரது கதக் பாடல்களில் தேசிய மற்றும் சர்வதேச அளவில் பாலியில் நடைபெற்ற ஸ்பிரிட் திருவிழா, வெனிஸில் நடைபெற்ற பட்டுப்பாதைத் திட்டம், சீனாவில் நடைபெற்ற நானிங் சர்வதேசத் திருவிழா, நைஜீரியாவில் நடைபெற்ற ட்ரூஃபெஸ்டா சர்வதேச நடனத் திருவிழா, கலாச்சார ஐரோப்பா, அமெரிக்காவில் நடைபெற்ற ஓமி சர்வதேச கலை மையம் & ஹை பாயிண்ட் பல்கலைக் கழகம் மற்றும் இந்தியாவில் மதிப்பிற்குரிய கதக் மற்றும் இசை விழாக்களும் அடங்கும். ஆண்டுதோறும் ஒழுங்கமைக்கப்பட்ட மதிப்புமிக்க இந்திய செம்மொழி நடன விழாவின் திராக் உத்சவதின் கண்காணிப்பாளராக உள்ளார். [8] [9] [10]

தனிப்பட்ட வாழ்க்கை

[தொகு]

மனிஷா லோகேஷ் குல்யானி என்பவரை மணந்து கொண்டார். இத்தம்பதியருக்கு ஒரு குழந்தை இருக்கிறது.

விருதுகள்

[தொகு]

மனிஷா தேசிய ஆராய்ச்சி கூட்டாளர் கௌரவம் பெற்றுள்ளார். இந்திய அரசாங்கத்தின் தேசிய உதவித்தொகை இளையோர் மற்றும் மூத்தவராகப் பெற்றுள்ளார். ஜெய்ப்பூர் கதக் கேந்திராவிடமிருந்து தகுதி உதவித்தொகையும் பெற்றுள்ளார். 2007ஆம் ஆண்டில் அமெரிக்காவின் ஓமி சர்வதேச நடன விருது, 2012ஆம் ஆண்டில் அஜ்மீர் சர்வதேச சூபி விழாவில் வழங்கிய ஐஎஸ்எஃப்ஐ தங்க விருது, 2014 இல் ஜெய்ப்பூரில் கலைகளில் இளைஞர் ஐகான் விருது மற்றும் 2015 ஆம் ஆண்டின் இந்தியாவின் ஃபிக்கி ஃப்ளோ பெண் விருது போன்ற விருதுகள் வழங்கப்பட்டது. டொராண்டோவின் சர்க்யூ டி சோலெயிலின் வரவிருக்கும் தயாரிப்புகளுக்கான கதக் கலைஞராகவும், தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் தூர்தர்ஷனின் தரப்படுத்தப்பட்ட கலைஞராகவும் உள்ளார். இந்திய அரசின் கலாச்சார அமைச்சகத்தின் கீழ் ஒரு ஆராய்ச்சி கூட்டாளராகவும் இருக்கிறார். தற்போது இவர் ஜெய்ப்பூரில் கதக் பயிற்றுவிப்பாளராகவும், நிகழ்ச்சி நிகழ்த்துபவராகவும் உள்ளார்.

குறிப்புகள்

[தொகு]
  1. "Archived copy". Archived from the original on 23 April 2012. பார்க்கப்பட்ட நாள் 13 December 2013.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  2. http://www.culturall.ch/Autumn%20Concert.htm
  3. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2015-05-05. பார்க்கப்பட்ட நாள் 2020-02-23.
  4. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்" (PDF). Archived from the original (PDF) on 2015-09-24. பார்க்கப்பட்ட நாள் 2020-02-23.
  5. http://www.newindianexpress.com/cities/thiruvananthapuram/Dance-is-My-Language/2014/04/14/article2166996.ece/
  6. "Archived copy". Archived from the original on 1 June 2014. பார்க்கப்பட்ட நாள் 1 June 2014.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  7. http://meetkalakar.com/Artist/2714-Manisha-Gulyani
  8. "Archived copy". Archived from the original on 2013-12-14. பார்க்கப்பட்ட நாள் 2013-12-14.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  9. http://www.sguardi.info/index.php?id=205,1216,0,0,1,0
  10. "Archived copy". Archived from the original on 2013-12-14. பார்க்கப்பட்ட நாள் 2013-12-14.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=மணிஷா_குல்யாணி&oldid=3792268" இலிருந்து மீள்விக்கப்பட்டது