மணிப்பூரில் திருவிழாக்கள்
மணிப்பூரில் திருவிழாக்கள் (Festivals in Manipur) என்பது கிழக்கு இந்தியாவின் இமயமலை மாநிலமான மணிப்பூரில், கொண்டாடப்படும் திருவிழாக்கள் ஆகும். ஒரு வருடத்தின் அனைத்து மாதங்களிலும் ஏதாவது ஒரு பண்டிகை மணிப்பூரில் கொண்டாடப்படுகிறது.[1][2]
சனவரி
[தொகு]இமோயினு இரட்பா அல்லது எமோயினு இரட்பா அல்லது வாக்சிங் தரனிதோனி பான்பா என்பது மெய்தி தெய்வமான இமோயினு அகோங்பிக்கு அர்ப்பணிக்கப்பட்ட விளக்கு பூசை திருவிழா ஆகும். குறிப்பாக மணிப்பூரில் உள்ள சனாமாகிசத்தை பின்பற்றும் மெய்தி மக்களால் இந்த விழா கொண்டாடப்படுகிறது.[3][4][5]
கான்-ங்காய்: கான்-ஞாய் என்று அழைக்கப்படும் "சகான் கான்-ஞாய்" இந்தியாவின் அசாம், மணிப்பூர் மற்றும் நாகாலாந்து மாநிலங்களின் ஜெலியாங்ராங் மக்களின் திருவிழாவாகும். ரோங்மேய் நாகா/கபுய் பழங்குடியினரின் பழங்குடி நாட்காட்டி முழுவதும் அனுசரிக்கப்படும் பல பண்டிகைகளில் இது மிக முக்கிய திருவிழாவாகும்.[6][7][8]
குடியரசு நாள்: இந்தியக் குடியரசு நாள் விழா மணிப்பூர் மாநிலம் முழுவதும் கொண்டடப்படும் ஒரு தேசிய நாளாகும்.
பிப்ரவரி
[தொகு]வசந்த பஞ்சமி, இந்து தெய்வமான சரசுவதியின் நினைவாக சரசுவதி பூஜை என்றும் அழைக்கப்படுகிறது, இது வசந்த காலத்தின் வருகைக்கான தயாரிப்பைக் குறிக்கும் பண்டிகையாகும். இத்திருவிழா இந்திய மதங்களில் பிராந்தியத்தைப் பொறுத்து வெவ்வேறு வழிகளில் கொண்டாடப்படுகிறது. நாற்பது நாட்களுக்குப் பிறகு நடைபெறும் ஹோலிகா மற்றும் ஹோலிக்கான தயாரிப்பின் தொடக்கத்தையும் வசந்த பஞ்சமி குறிக்கிறது.[9]
லுயி நாகி நி: லுயி நாகி நி என்பது மணிப்பூர் மாநிலத்தில் நாகா பழங்குடியினரால் கொண்டாடப்படும் விதை விதைப்பு திருவிழா ஆகும். இந்த திருவிழா விதை விதைக்கும் பருவத்தை அறிவிக்கிறது. நாகர்களுக்கான ஆண்டின் தொடக்கத்தைக் குறிக்கிறது. 1988 முதல் இத்திருவிழா நாளினை அரசு விடுமுறையாக அறிவித்துள்ளது.[10]
மார்ச்
[தொகு]யோசாங் என்பது மணிப்பூரில் வசந்த காலத்தில் ஐந்து நாட்கள் கொண்டாடப்படும் ஒரு பண்டிகையாகும். இது மணிப்பூரிகள் கடைபிடிக்கும் லம்டா மாதத்தின் பௌர்ணமி நாளில் (பிப்ரவரி/மார்ச்) தொடங்கி தொடங்குகிறது. யோசாங் என்பது மெய்தி மக்களின் பூர்வீக மரபுகளாகும். இது மணிப்பூரில் மிக முக்கியமான பண்டிகையாக கருதப்படுகிறது. ஹோலியைப் போலவே, மணிப்பூரின் மெய்தி மக்கள் இந்த விழாவின் போது ஒருவர் மீது ஒருவர் வண்ணப் பொடிகளையோ அல்லது வண்ணம் கலந்த நீரையோ பூக்கொண்டு கொண்டாடுகின்றனர்.[11]
மகா சிவராத்திரி:
மகா சிவராத்திரி (Maha Shivaratri) இந்துக்களால் கொண்டாடப்படும் சிவனுக்குரிய விரதமாகும். இவ்விரதம் ஆண்டுதோறும் மாசி மாதத்தில் வரும் கிருஷ்ணபட்ச (தேய்பிறை) சதுர்த்தசி திதியில் இரவில் கொண்டாடப்படும்.[12]
ஏப்ரல்
[தொகு]மெய்தி செரோபா அல்லது சஜிபு செரொபா என்றும் அழைக்கப்படும் இந்த ப்பண்டிகை இந்திய மாநிலமான மணிப்பூரில் சனாமகிச மதத்தைப் பின்பற்றும் மக்களின் சந்திர புத்தாண்டு விழாவாகும். சஜிபு நோங்மா பன்பா என்ற பெயர் மணிப்புரி சொல்லிருந்து உருவானது: சஜிபு - வழக்கமாக ஏப்ரல் மாதத்தில் வரும் மெய்தி சந்திர நாட்காட்டியின் படி என்றும், நோங்மா - ஒரு மாதத்தின் முதல் தேதி என்றும், பன்பா - இருக்க வேண்டும் எனப் பொருள். உண்மையில், இதன் பொருள் சஜிபு மாதத்தின் முதல் நாள் என்பதாகும்.[13][14]
புனித வெள்ளி:
புனித வெள்ளி அல்லது பெரிய வெள்ளி அல்லது ஆண்டவருடைய திருப்பாடுகளின் வெள்ளி (Good Friday) என்பது கிறிஸ்தவர்கள் இயேசு கிறிஸ்து அனுபவித்த துன்பங்களையும் சிலுவைச் சாவையும் நினைவுகூர்ந்து ஒவ்வொரு ஆண்டும் மணிப்பூரில் கொண்டாடுகின்ற ஒரு விழா ஆகும். கிறித்தவ வழிபாட்டு ஆண்டில் முக்கியமான இந்த நாள் இயேசு உயிர்பெற்றெழுந்த ஞாயிறு கொண்டாட்டத்திற்கு முந்திய வெள்ளிக்கிழமை நிகழும்.[15][16][17]
இயேசு கல்வாரி மலையில் சிலுவையில் அறையப்பட்டதை நினைவுகூர்கின்ற இவ்விழாவின்போது கிறித்தவக் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்
மே
[தொகு]மெய்தி நாட்காட்டி நாள்:
மெய்தி நாட்காட்டி அல்லது மணிப்புரி காலண்டர் அல்லது காங்கிளிபக் நாட்காட்டி அல்லது மாலியாபம் பால்ச்சா கும்ஷிங் (என்பது மெய்தியின் மனிதர்களால் பயன்படுத்தப்படும் ஒரு சந்திர நாட்காட்டி ஆகும். மத மற்றும் விவசாய நடவடிக்கைகள்.சஜிபூ செரோபா என்று அழைக்கப்படும் புத்தாண்டு தினம் சஜிபு மாதத்தின் 1 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.[18]
சூன்
[தொகு]நோன்புப் பெருநாள் அல்லது ஈகைத் திருநாள் (அரபு மொழி: عيد الفطر ஈதுல் ஃபித்ர்) என்பது இசுலாமிய இருபெரும் திருநாட்களில் ஒன்றாகும். இத்திருநாளில் மணிப்பூரில் உள்ள இசுலாமியார்கள் தங்களது புனித மாதமாகிய ரமலான் முழுவதும் நோன்பு நோற்று முடித்ததை அடுத்து இது கொண்டாடுகின்றனர்.[19]
சூலை
[தொகு]சனாமஹி அஹோங் கோங் சிங்பா:
சனாமஹி அஹோங் கோங் சிங்பா அல்லது சனாமஹி அஹோங் கோங்பா அல்லது காங் சிங்பா என்பது மணிப்புரி மக்களின் மதத் திருவிழா ஆகும். இது முக்கியமாக மைதேய் கடவுள் லைனிங்தௌ சனாமகியை உள்ளடக்கிய பிரமாண்ட தேருடன் கூடிய பொது ஊர்வலத்துடன் கொண்டாடப்படுகிறது. இம்பால் நகரம் திருவிழாவின் முக்கிய இடமாக செயல்படுகிறது. ஊர்வலத்தில் கலந்துகொள்ளும் ஆயிரக்கணக்கான பக்தர்களை இங்கு கூடுகின்றனர். இந்த விழா 350 ஆண்டுகளுக்கு முன்பு கொண்டாடப்பட்டது, நீண்ட இடைநிறுத்தத்திற்குப் பிறகு, இது மீண்டும் 2018-ல் கொண்டாடப்பட்டது.[20][21][22]
ஆகத்து
[தொகு]செப்டம்பர்
[தொகு]ஹெய்க்ரு ஹிடோங்பா: "ஹெய்க்ரு ஹிடோங்பா" (மணிப்பூரி படகுப் பந்தய விழா) என்பது ஒவ்வொரு ஆண்டும் இம்பாலின் சகோல்பண்ட் பிஜோய் கோவிந்த லைகாய் அகழியில் மெய்தி காலண்டர் மாதமான லாங்பன் (செப்டம்பருடன் இணைந்த) 11வது நாளில் மதப் பாரம்பரியத்துடன் நடத்தப்படும் ஒரு சமூக-மத விழா ஆகும்.[23][24]
அக்டோபர்
[தொகு]பந்தோயிபி இரட்பா:
பந்தோயிபி இரட்பா அல்லது பந்தோயிபி இரட்பா தெளனி அல்லது பந்தோயிபி பூசை என்பது மணிப்புரி மக்களின் மதத் திருவிழாவாகும். இந்து பண்டிகையான துர்கா பூசையின் அதே நாளில் இந்த பண்டிகை வருகிறது. எனவே, மணிப்பூரில் இரண்டு பண்டிகைகளும் ஒன்றாகக் கொண்டாடப்படுகின்றன.[25][26]
குவாக் தான்பா (Kwaak Taanba) அல்லது குவாக் ஜாத்ரா ( Kwaak Jatra) அல்லது லொய்டம் கும்சபா ( Loidam Kumsaba) அல்லது காகம் விடும் திருவிழா (Crow freeing festival) என்பது மணிப்பூரின் பூர்வீக திருவிழா ஆகும். இத்திருவிழாவின் போது மணிப்பூர் மன்னர் தனது காவலிலிருந்து காகத்தை விடுவிக்கிறார். இந்த நாள் மெய்தி நாட்காட்டியின் மேரா மாதத்தின் 10வது சந்திர நாளில் வருகிறது.[27][28][29]
நிங்கோல் சகோபா:
நிங்கோல் சகோபா அல்லது சகோபா அல்லது ஹியாங்கே நினி பான்பா என்பது மணிப்பூரி நாட்காட்டியின் ஹியாங்கேயின் (அக்டோபர்-நவம்பர்) இரண்டாவது சந்திர நாளில் மெய்டே மக்களால் கொண்டாடப்படும் ஒரு திருவிழா ஆகும்.[25]
இந்துக்களால் கொண்டாப்படும் இத்திருவிழா மணிப்பூரிலும் கொண்டாடப்படுகிறது.
நவம்பர்
[தொகு]சங்காய் திருவிழா: சங்காய் திருவிழா, மணிப்பூரில் ஆண்டு தோறும் நவம்பரின் கடைசி பத்து நாட்களில் கொண்டாடப்படுகிறது. இதற்காக மணிப்பூர் மாநில சுற்றுலாத் துறை திருவிழாவை ஏற்று நடத்துகிறது. மணிப்பூரில் காணப்படும் சங்காய் மானின் நினைவாக சங்காய் திருவிழா என பெயரிடப்பட்டுள்ளது.
திசம்பர்
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Sen, Sukanya (February 20, 2019). "10 Festivals That Show The Cultural Diversity Of Manipur".
- ↑ "Manipur Festival". northeasttourism.gov.in. Archived from the original on 2020-06-28. பார்க்கப்பட்ட நாள் 2023-02-09.
- ↑ "Imoinu Iratpa around the world in 2021". Office Holidays.
- ↑ Khumukcham, Rinku. "CM wishes on Ima Imoinu Iratpa numit - Imphal Times". www.imphaltimes.com.
- ↑ "Meiteis celebrate Emoinu". www.telegraphindia.com.
- ↑ rongmeinaga (1 November 2010), Gaan Ngai 2009 Ragailong - Rongmei Naga, பார்க்கப்பட்ட நாள் 25 August 2017
- ↑ "Gaan Ngai Festival". mytravel.co.in (in ஆங்கிலம்). Archived from the original on 24 June 2018. பார்க்கப்பட்ட நாள் 25 August 2017.
- ↑ "Manipur Festivals Guide - Gaan-Ngai - The Post Harvest Festival Of Manipur". www.indiantravelguide.com. Archived from the original on 7 June 2018. பார்க்கப்பட்ட நாள் 25 August 2017.
- ↑ "National Portal यफ India".
- ↑ "Festivals in Manipur". E-Pao. பார்க்கப்பட்ட நாள் 28 July 2016.
- ↑ Singh, Ksh Imokanta (2008). Religion and Development in North-east India: A sociological understanding (PDF). University of Birmingham. p. 76. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-7044-2655-9. Archived from the original (PDF) on 19 ஜூன் 2015. பார்க்கப்பட��ட நாள் 18 June 2015.
However, rather than starting a completely new religious system, their efforts have focused on establishing a parallel culture to counter the Vaishnavite forces, for example observance of Yaosang (Meitei version of Holi) during the same period as the Hindu Dol jatra festival. This movement may try to create a political fissure within the society, but it is very difficult to sort out which elements are purely Hindu and which indigenous, because people have long internalized both elements in their way of life.
{{cite book}}
:|journal=
ignored (help); Check date values in:|archivedate=
(help) - ↑ Om Prakash Juneja; Chandra Mohan (1990). Ambivalence: Studies in Canadian Literature. Allied. pp. 156–157. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7023-109-7.
- ↑ "Sajibu Cheiraoba New Year Observation of Meeteis".
- ↑ Sajibu Cheiraoba
- ↑ The Chambers Dictionary. Allied Publishers. 2002. p. 639. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-86062-25-8. Archived from the original on 2 October 2021. பார்க்கப்பட்ட நாள் 13 April 2012.
- ↑ Elizabeth Webber; Mike Feinsilber (1999). Merriam-Webster's Dictionary of Allusions. Merriam-Webster. p. 67. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-87779-628-2. பார்க்கப்பட்ட நாள் 13 April 2012.
- ↑ Franklin M. Segler; Randall Bradley (2006). Christian Worship: Its Theology And Practice. B&H Publishing Group. p. 226. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8054-4067-6. Archived from the original on 3 October 2021. பார்க்கப்பட்ட நாள் 13 April 2012.
- ↑ "The Puya and Cheitharol Kumbaba". e-pao.net.
- ↑ Barr, Sabrina. "Eid al-Adha 2019: When is it, How is it celebrated and How to Wish Someone Happy Eid" இம் மூலத்தில் இருந்து 11 August 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190811153557/https://www.independent.co.uk/life-style/eid-al-adha-2019-when-date-holiday-uae-saudi-arabia-islam-festival-a9027196.html.
- ↑ "Ancient Manipur ritual held". www.telegraphindia.com.
- ↑ "Sanamahi Ahong-Khong Chingba ritual to be organised :: Manipur News | Manipur Daily | Poknapham - Manipuri News!". thepeopleschronicle.in. Archived from the original on 2021-09-13. பார்க்கப்பட்ட நாள் 2023-02-09.
- ↑ "Sanamahee Ahong Khong Chingba observed after 350 years". June 28, 2018.
- ↑ "Heikru-Hidongba Festival of Manipur, Heikru Hidongba Boat Festival".
- ↑ "'Heikru-Hidongba symbolises revival of age-old tradition'".[தொடர்பிழந்த இணைப்பு]
- ↑ 25.0 25.1 "Panthoibi celebrations under way". www.telegraphindia.com.
- ↑ "Durga Puja, Panthoibi festival celebrated in Manipur".
- ↑ "Kwak Tanba : 29th sep09 ~ E-Pao! Headlines". e-pao.net. பார்க்கப்பட்ட நாள் 2019-12-11.
- ↑ "Kwak Tanba ritual performed – Manipur News". manipur.org. பார்க்கப்பட்ட நாள் 2019-12-11.
- ↑ "Titular King wishes people on Kwak Tanba : 20th oct18 ~ E-Pao! Headlines". e-pao.net. பார்க்கப்பட்ட நாள் 2019-12-11.