உள்ளடக்கத்துக்குச் செல்

பொட்டாசியம் அறுபுளோரோ அலுமினேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பொட்டாசியம் அறுபுளோரோ அலுமினேட்டு
Potassium hexafluoroaluminate
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
முப்பொட்டாசியம்;அறுபுளோரோ அலுமினியம்(3-)
இனங்காட்டிகள்
60996-20-5
ChemSpider 11254636
EC number 262-553-6
InChI
  • InChI=1S/Al.6FH.3K/h;6*1H;;;/q+3;;;;;;;3*+1/p-6
    Key: ZIZQEDPMQXFXTE-UHFFFAOYSA-H
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 16693907
  • F[Al-3](F)(F)(F)(F)F.[K+].[K+].[K+]
பண்புகள்
K3AlF6
தோற்றம் தூள்
உருகுநிலை 1035
சிறிதளவு கரையும்
தீங்குகள்
GHS pictograms The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)The health hazard pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)
GHS signal word எச்சரிக்கை
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

பொட்டாசியம் அறுபுளோரோ அலுமினேட்டு (Potassium hexafluoroaluminate) என்பது K3AlF6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.[1][2][3] கிரையோலைட்டு என்ற கனிமமாக இது இயற்கையில் தோன்றுகிறது.[4]

தயாரிப்பு

[தொகு]

அதிக வெப்பநிலையில் பொட்டாசியம் ஐதராக்சைடுடன் நீரற்ற ஐதரசன் புளோரைடு மற்றும் அலுமினியம் ஐதராக்சைடு இரண்டின் வினையிலிருந்து பெறப்படும் புளோரோ அலுமினிக்கு அமிலத்துடன் சேர்த்து வினைபுரியச் செய்தால் பொட்டாசியம் அறுபுளோரோ அலுமினேட்டு உருவாகும். வினையைத் தொடர்ந்து வடிகட்டி, உலர்த்தி, உருக்கி மற்றும் நசுக்கி இதைப் பயன்படுத்தலாம்.

6HF + Al(OH)3 → AlF3·3HF + 3H2O
AlF3·3HF + 3KOH → K3AlF6 + 3H2O

இயற்பியல் பண்புகள்

[தொகு]

பொட்டாசியம் அறுபுளோரோ அலுமினேட்டு பார்ப்பதற்கு வெள்ளை நிறத்தில் இருந்து வெளிர் சாம்பல் நிறத் தூளாகத் தோன்றுகிறது. இது தண்ணீரில் சிறிது கரைகிறது.

I41/a.[5] என்ற இடக்குழுவில் நாற்கோணப் படிகத்திட்டத்தில் நிறமற்ற படிகங்களாக பொட்டாசியம் அறுபுளோரோ அலுமினேட்டு உருவாகிறது.

பயன்கள்

[தொகு]

பொட்டாசியம் அறுபுளோரோ அலுமினேட்டு ஒரு பற்றவைக்கும் முகவராகப் பயன்படுத்தப்படுகிறது.[6]

பூச்சிக்கொல்லிகள் உற்பத்தி, கண்ணாடி பொருட்கள் உற்பத்தி மற்றும் கனிமப் பூச்சு தொழில் ஆகியவற்றிலும் பயன்படுத்தப்படுகிறது. அலுமினியம் தயாரித்தலில் பாக்சைட்டு தாதுவை கரைக்கும் கரைப்பானாகவும் பொட்டாசியம் அறுபுளோரோ அலுமினேட்டு பயன்படுகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Potassium Hexafluoroaluminate". American Elements. Retrieved 15 June 2024.
  2. "Potassium hexafluoroaluminate(iii)" (in ஆங்கிலம்). NIST. Retrieved 15 June 2024.
  3. Kirk-Othmer Encyclopedia of Chemical Technology, Volume 2 (in ஆங்கிலம்). John Wiley & Sons. 27 January 2004. p. 371. ISBN 978-0-471-48521-6. Retrieved 15 June 2024.
  4. Rudawska, Anna (24 October 2018). Abrasive Technology: Characteristics and Applications (in ஆங்கிலம்). BoD – Books on Demand. p. 119. ISBN 978-1-78984-193-0. Retrieved 15 June 2024.
  5. King, Graham; Abakumov, Artem M.; Woodward, Patrick M.; Llobet, Anna; Tsirlin, Alexander A.; Batuk, Dmitry; Antipov, Evgeny V. (15 August 2011). "The High-Temperature Polymorphs of K 3 AlF 6" (in en). Inorganic Chemistry 50 (16): 7792–7801. doi:10.1021/ic200956a. பன்னாட்டுத் தர தொடர் எண்:0020-1669. பப்மெட்:21744814. https://pubs.acs.org/doi/10.1021/ic200956a. பார்த்த நாள்: 15 June 2024. 
  6. "Potassium hexafluoroaluminate (CAS 13775-52-5)". Santa Cruz Biotechnology. Retrieved 15 June 2024.