உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:அபராசித வர்ம பல்லவன்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அபராசித வர்ம பல்லவன் என்னும் கட்டுரை வாழ்க்கை வரலாறு தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் வாழ்க்கை வரலாறு என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

பிற்காலப் பல்லவர்

[தொகு]
  • \\ மூன்றாம் நந்திவர்மனுக்குப் பின்பு அவனது முதல் மனைவியின் மூத்த மகன் நிருபதுங்கவர்மன் முடி சூட்டிக் கொண்டான். மூன்றாம் நந்திவர்மனின் இன்னொரு மனைவியின் மகன் அபாரசிதவர்மன் அரச பதவியைக் கைப்பற்ற எண்ணினான். இதனால் பல்லவ அரசாட்சிக்கு வாரிசு உரிமைப் போர் தொடங்கியது.\\ - எனவும்( இங்கு)
  • \\கி.பி.882 இல் நிருபதுங்கவர்மன் இறந்தவுடன் அவனது மகன் அபராசிதவர்ம பல்லவன் (கி.பி.882-890) ஆளத் தொடங்கினான். \\ என்று அதே தளத்தில் 5.1.1 அரசியல் பின்புலம் இங்கு என்றும் தமிழ் இணையக்கல்வி தளத்தில் தரப்பட்டுள்ளது.

இது குழப்பமாக உள்ளதே. எது சரியானது? நீங்கள் பல்ல்வருக்கும் பாண்டியருக்கும் இடையே நடந்த போர்களைப் பற்றி சமீபத்தில் எழுதி வரும் கட்டுரைகளைப் படித்தபோது எனக்கு ஏற்பட்ட குழப்பம் இது. இதுமட்டுமில்லாமல் த.விக்கியில் உள்ள ”வார்ப்புரு:பல்லவர் வரலாறு” காட்டும் பல்லவ மன்னர்களின் ஆட்சி காலமும் தமிழ் இணையக் கல்வித்தளம் தரும் காலமும் சில இடங்களில் மாறுபடுகின்றன.

இவ்விரு விஷயங்களையும் பார்க்கும்படியும். உங்களிடம் இருக்கும் வேறு ஏதேனும் ஆதாரங்களில் சரிபார்த்து எனது குழப்பத்திற்கு விடையிருந்தால் கூறும்படியும் கேட்டுக்கொள்கிறேன். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 08:59, 18 சூலை 2015 (UTC)[பதிலளி]

@Booradleyp1: பூங்கோதை, ”வார்ப்புரு:பல்லவர் வரலாறு” காட்டும் பல்லவ மன்னர்களின் ஆட்சி காலமும் தமிழ் இணையக் கல்வித்தளம் தரும் காலமும் சில இடங்களில் மாறுபடுகின்றன என்பதை நானும் பார்த்தேன். எனவே, அவைக் குறித்த எந்தத் திருத்தங்களையும் நான் செய்யவில்லை. தமிழ் அறிஞர்கள்தான் இதற்கு பதில் கூற முடியும்.

மேலே, நீங்கள் குறிப்பிட்ட குழப்பத்தையும் கண்டேன். நான் செய்ய முற்படுவது தமிழ் இணையப் பல்கலைக்கழகத்திலுள்ள செய்திகளும், விக்கிபீடியாவில் எழுதியுள்ள செய்திகளும் ஒன்றுபடும் இடங்களில், அல்லது விடுபட்டச் செய்திகளை இணைத்து, தமிழ் இணையப் பல்கலைக்கழக வெளியீட்டை மேற்கோளாக சேர்ப்பது மட்டுமே. இக்கட்டுரைகளில் மேற்கோள்களே இல்லாமல் இருந்ததால் இதைச் செய்தேன்.

நான் தமிழ் வேந்தர்கள் வரலாற்று ஆய்வாளன் இல்லை. வேறு மேற்கோள்கள் கிடைக்கும்போது தமிழ் இணையப் பல்கலைக்கழக பதிப்பிலுள்ள கருத்துக் குழப்பத்தைத் திருத்துகிறேன். அல்லது மற்ற விக்கிபீடியர்கள் மேற்கோள்களை வைத்திருந்தால் உதவவும். நன்றி --நந்தகுமார் (பேச்சு) 09:20, 18 சூலை 2015 (UTC)[பதிலளி]

@Booradleyp1:, இங்கு அபராசிதவர்ம பல்லவன் நிருபதுங்கவர்மனின் ஒன்றுவிட்ட சகோதரனின் மகன் என்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.--நந்தகுமார் (பேச்சு) 10:39, 18 சூலை 2015 (UTC)[பதிலளி]
@Booradleyp1:, ஒரு புத்தகம் கூகிள் தேடலில் கிடைத்தது. அதன்படி தற்பொழுது நிருபதுங்கவர்மன் பக்கத்தைத் திருத்தியுள்ளேன். கம்பவர்மன் பக்கத்தையும் ஆரம்பித்துவிட்டேன். பாருங்கள். --நந்தகுமார் (பேச்சு) 12:18, 18 சூலை 2015 (UTC)[பதிலளி]

உங்கள் முயற்சிக்கு நன்றி நந்தகுமார், இந்த உரையாடலைத் தொடர்புடைய கட்டுரைப் பக்கங்களில் இட்டுவைத்தால், இத்துறையில் ஆர்வமும் ஆழமும் கொண்ட பயனர்கள் மேலும் மேம்படுத்தக்கூடும் என நினைக்கிறேன்.--Booradleyp1 (பேச்சு) 12:57, 18 சூலை 2015 (UTC)[பதிலளி]