உள்ளடக்கத்துக்குச் செல்

பெரம்பலூர் மக்களவைத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெரம்பலூர் மக்களவைத் தொகுதி
மக்களவைத் தொகுதி
பெரம்பலூர் மக்களவைத் தொகுதி (2008 மறுசீரமைப்புக்குப் பிந்தையது)
தொகுதி விவரங்கள்
நிறுவப்பட்டது1952-நடப்பு
மாநிலம்தமிழ்நாடு
மொத்த வாக்காளர்கள்1,049,033[1]
சட்டமன்றத் தொகுதிகள்137. குளித்தலை
143. இலால்குடி
144. மண்ணச்சநல்லூர்
145. முசிறி
146. துறையூர் (SC)
147. பெரம்பலூர் (SC)

பெரம்பலூர் மக்களவைத் தொகுதி தமிழ்நாட்டின் 39 மக்களவைத் தொகுதிகளுள் 25வது தொகுதி ஆகும்.

தொகுதி மறுசீரமைப்பு

[தொகு]

பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் முன்பு பெரம்பலூர் (சட்டமன்றத் தொகுதி),உப்பிலியாபுரம் (சட்டமன்றத் தொகுதி), வரகூர்_(சட்டமன்றத்_தொகுதி), அரியலூர் (சட்டமன்றத் தொகுதி), ஆண்டிமடம் (சட்டமன்றத் தொகுதி),ஜெயங்கொண்டம் (சட்டமன்றத் தொகுதி) ஆகிய 6 சட்ட சபை தொகுதிகள் இடம் பெற்றிருந்தது.

பெரம்பலூர் தொகுதியில் இருந்த ஜெயங்கொண்டம் (சட்டமன்றத் தொகுதி) , அரியலூர் (சட்டமன்றத் தொகுதி) ஆகியவை சிதம்பரம் தொகுதியில் இணைக்கப்பட்டன. திருச்சி பாராளுமன்றத் தொகுதியில் இருந்த லால்குடி, முசிறி ஆகியவை பெரம்பலூர் தொகுதியில் சேர்க்கப்பட்டன. கரூர் பாராளுமன்றத் தொகுதியில் இருந்த குளித்தலை,பெரம்பலூர் தொகுதியில் இணைக்கப்பட்டது. முசிறி தொகுதியிலிருந்து மண்ணச்சநல்லூர் சட்டசபை தொகுதி புதிதாக உருவாக்கப்பட்டு அதுவும் பெரம்பலூர் தொகுதியில் சேர்க்கப்பட்டன .துறையூர்(தனி) தொகுதியும் பெரம்பலூர் தொகுதியில் சேர்க்கப்பட்டன.

முன்பு தனித்தொகுதியாக இருந்து மறுசீரமைப்புக்குப் பின் பொதுத் தொகுதியாக உள்ளது.

மக்களவை உறுப்பினர்கள்

[தொகு]

இதுவரை இந்த தொகுதியில் மக்களவை உறுப்பினர்களாக இருந்தவர்களின் பட்டியல்

வென்றவர்கள்

[தொகு]
ஆண்டு வென்ற வேட்பாளர் கட்சி வாக்கு சதவீதம் இரண்டாம் இடம் கட்சி
1951 பூவராகசாமி படையாச்சி தமிழ்நாடு உழைப்பாளர் கட்சி 37.34 % கிருஷ்ணசாமி ரெட்டியார் காங்கிரசு
1957 எம். பழனியாண்டி காங்கிரசு 48.75 % பூவராகசாமி படையாச்சி சுயேட்சை
1962 இரா. செழியன் திமுக 55.90 % எம். பழனியாண்டி காங்கிரசு
1967 அ. துரைராசு திமுக 53.97 % பி.கே.ராமசாமி காங்கிரசு
1971 அ. துரைராசு திமுக 56.75 % எம். அய்யாக்கண்ணு நிறுவன காங்கிரசு
1977 அ. அசோக்ராஜ் அதிமுக 68.62 % ஜே.எஸ்.ராஜூ திமுக
1980 கே. பி. எஸ். மணி காங்கிரசு 58.89 % எஸ். தங்கராசு அதிமுக
1984 எஸ். தங்கராசு அதிமுக 63.57 % சி.தியாகராஜன் திமுக
1989 எஸ். தங்கராசு அதிமுக 53.41 % பனோவை கருத்தாழன் திமுக
1991 அ. அசோக்ராஜ் அதிமுக 58.92 % எஸ்.வி.ராமசாமி திமுக
1996 ஆ. ராசா திமுக 59.19 % பி.வி.சுப்ரமணியன் காங்கிரசு
1998 கபி. ராஜரத்தினம் அதிமுக 53.37 % ஆ. ராசா திமுக
1999 ஆ. ராசா திமுக 48.58 % கபி. ராஜரத்தினம் அதிமுக
2004 ஆ. ராசா திமுக 55.11 % எம்.சுந்தரம் அதிமுக
2009 நெப்போலியன் திமுக 47.91 % கே.கே.பாலசுப்ரமணியன் அதிமுக
2014 ஆர். பி. மருதராஜா அதிமுக 44.85 % சீமானூர் பிரபு திமுக
2019 தாண்டவராயபுரம் ராமசாமி பச்சமுத்து - இந்திய ஜனநாயகக் கட்சி (தி���ுக) 62 % என். ஆர். சிவபதி அதிமுக
2024 அருண் நேரு - திமுக 62 % என். டி. சந்திரமோகன் அதிமுக

18வது மக்களவைத் தேர்தல்(2024)

[தொகு]
2024 இந்தியப் பொதுத் தேர்தல் : பெரம்பலூர்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக அருண் நேரு 6,03,209 53.42% 9.02
அஇஅதிமுக என். டி. சந்திரமோகன் 214,102 18.96% 6.63
பா.ஜ.க தாண்டவராயபுரம் ராமசாமி பச்சமுத்து 161,866 14.33%
நாதக இரா தேன்மொழி 113,092 10.02% Increase5.13
நோட்டா நோட்டா 10,322 0.91% 0.08
வெற்றி விளிம்பு 389,107 34.46% -
பதிவான வாக்குகள் 1,129,226
பதிவு செய்த வாக்காளர்கள்
திமுக கைப்பற்றியது மாற்றம்

17வது மக்களவைத் தேர்தல்(2019)

[தொகு]

வாக்காளர் புள்ளி விவரம்

[தொகு]
ஆண் பெண் இதர பிரிவினர் மொத்தம் வாக்களித்தோர் %
11,02,767[2]

முக்கிய வேட்பாளர்கள்

[தொகு]

இந்த தேர்தலில் மொத்தம் 19 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் 7 வேட்பாளர்கள் கட்சிகள் சார்பாகவும், 12 வேட்பாளர்கள் சுயேட்சையாகவும் போட்டியிடுகின்றனர்.

சின்னம் வேட்பாளர்[3] கட்சி பெற்ற வாக்குகள் % பெரும்பான்மை
சிவபதி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் 2,80,179 25.41%
பாரிவேந்தர் திராவிட முன்னேற்றக் கழகம் 6,83,697 62% 4,03,518
Bahujan Samaj party symbol முத்துலெட்சுமி பகுஜன் சமாஜ் கட்சி 4,586 0.42%
சாந்தி நாம் தமிழர் கட்சி 53,545 4.86%


செந்தில்வேல் உழைப்பாளி மக்கள் கட்சி 1,147 0.1%


ராஜசேகரன் எழுச்சி தமிழர்கள் முன்னேற்றக் கழகம் 960 0.09%
வினோத் குமார் தமிழ்நாடு இளைஞர் கட்சி 1,617 0.15%


16வது மக்களவைத் தேர்தல்

[தொகு]

முக்கிய வேட்பாளர்கள்

[தொகு]
வேட்பாளர் கட்சி பெற்ற வாக்குகள்
ஆர். பி. மருதராஜா அ.தி.மு.க 4,62,693
சீமானூர் பிரபு தி.மு.க., 2,49,645
பாரிவேந்தர் ஐ.ஜே.கே 2,38,887
ராஜசேகரன் காங் 31,998

வாக்குப்பதிவு

[தொகு]
2009 வாக்குப்பதிவு சதவீதம்[4] 2014 வாக்குப்பதிவு சதவீதம் [5] வித்தியாசம்
79.35% 80.02% 0.67%


15வது மக்களவைத் தேர்தல் முடிவுகள்

[தொகு]

21 வேட்பாளர்கள் போட்டியிட்டதில் திமுகவின் டி. நெப்போலியன் அதிமுகவின் கே. கே. பாலசுப்பரமணியனை 77,604 வாக்குகள் வேறுபாட்டில் வென்றார்.

வேட்பாளர் கட்சி பெற்ற வாக்குகள்
டி. நெப்போலியன் திமுக 3,98,742
கே. கே. பாலசுப்பரமணியன் அதிமுக 3,21,138
துரை காமராஜ் தேமுதிக 74,317
ஜி. செல்வராஜ் பகுஜன் சமாஜ் கட்சி 5,014

மேற்கோள்கள்

[தொகு]
  1. GE 2009 Statistical Report: Constituency Wise Detailed Result
  2. "General Election 2019 - Election Commission of India". results.eci.gov.in. Archived from the original on 22 ஜூன் 2019. பார்க்கப்பட்ட நாள் 13 August 2019. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "List of candidate of perambalur Parliamentary Constituencies". Tamil Nadu. Election Commission of India. Archived from the original on 2019-04-28. பார்க்கப்பட்ட நாள் 2019-04-28.
  4. "DETAILED RESULTS OF LATEST ELECTIONS ( XLS FORMAT ) - GENERAL ELECTIONS 2009". இந்தியத் தேர்தல் ஆணையம். Archived from the original on 2012-12-07. பார்க்கப்பட்ட நாள் 30 ஏப்ரல் 2014. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  5. "Poll Percentage - GELS2014" (PDF). முதன்மை தேர்தல் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு. 2014. பார்க்கப்பட்ட நாள் 29 செப்டம்பர் 2018. {{cite web}}: Check date values in: |accessdate= (help)

வெளியிணைப்புகள்

[தொகு]