பெங்காலான் செப்பா மக்களவைத் தொகுதி
பெங்காலான் செப்பா (P020) மலேசிய மக்களவைத் தொகுதி கிளாந்தான் | |
---|---|
Pengkalan Chepa (P020) Federal Constituency in Kelantan | |
பெங்காலான் செப்பா மக்களவைத் தொகுதி (P020 Pengkalan Chepa) | |
மாவட்டம் | கோத்தா பாரு மாவட்டம் கிளாந்தான் |
வாக்காளர்களின் எண்ணிக்கை | 107,814 (2023)[1] |
வாக்காளர் தொகுதி | பெங்காலான் செப்பா தொகுதி[2] |
முக்கிய நகரங்கள் | கோத்தா பாரு மாவட்டம், பெங்காலான் செப்பா, கோத்தா பாரு, கெத்தேரே |
பரப்பளவு | 85 ச.கி.மீ |
முன்னாள் தொகுதி | |
உருவாக்கப்பட்ட காலம் | 1974 |
கட்சி | பெரிக்காத்தான் நேசனல் |
மக்களவை உறுப்பினர் | அகமத் மர்சுக் சாரி (Ahmad Marzuk Shaary) |
மக்கள் தொகை | 159,674 (2020) [3] |
முதல் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 1974 |
இறுதித் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 2022[4] |
பெங்காலான் செப்பா மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Pengkalan Chepa; ஆங்கிலம்: Pengkalan Chepa Federal Constituency; சீனம்: 彭加兰芝柏国会议席) என்பது மலேசியா, கிளாந்தான், கோத்தா பாரு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P020) ஆகும்.[6]
பெங்காலான் செப்பா மக்களவைத் தொகுதி 1974-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1974-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது.
1974-ஆம் ஆண்டில் இருந்து பெங்காலான் செப்பா மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின் மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.
பெங்காலான் செப்பா
[தொகு]பெங்காலான் செப்பா நகரம் கிளாந்தான் மாநிலத்தில்; கோத்தா பாரு மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம். இந்த நகரத்தில்தான், கிளாந்தான் மாநிலத்தின் வானூர்தி நிலையமான சுல்தான் இசுமாயில் பெட்ரா வானூர்தி நிலையம் (Sultan Ismail Petra Airport) உள்ளது.
இந்த நகரம் கிளாந்தான் மாநிலத் தலைநகர் கோத்தா பாருவில் இருந்து 8 கி.மீ.; கோலாலம்பூர் மாநகரில் இருந்து 452 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
2020-ஆம் ஆண்டு நிலவரப்படி, கோத்தா பாரு மாவட்டத்தின் மக்கள் தொகை 159,674 என மதிப்பிடப்பட்டு உள்ளது. இந்த மாவட்டம் மாநிலத் தலைநகரான கோத்தா பாரு; பெங்காலான் செப்பா; கெத்தேரே ஆகிய நகரங்களைக் கொண்டுள்ளது.
பெங்காலான் செப்பா வானூர்தி நிலையம்
[தொகு]சுல்தான் இசுமாயில் பெட்ரா வானூர்தி நிலையத்தை பொதுவாக, பெங்காலான் செப்பா வானூர்தி நிலையம் அல்லது கோத்தா பாரு வானூர்தி நிலையம் என்று அழைப்பது வழக்கம். இந்த வானூர்தி நிலையம், கிளாந்தான், திராங்கானு மாநிலங்களின் மக்களுக்கு வானூர்திச் சேவையை வழங்கும் நிலையமாக விளங்குகிறது.
1980-ஆம் ஆண்டுகளில் கிளாந்தான் மாநிலத்தை ஆட்சி செய்த சுல்தான் இசுமாயில் பெட்ராவின் (Ismail Petra of Kelantan) நினைவாக இந்த வானூர்தி நிலையத்திற்குப் பெயரிடப்பட்டது.[7]
இந்த வானூர்தி நிலையம் முன்னாள் பிரித்தானிய மலாயா இராணுவத்தின் வானூர்தி நிலையமாகும். இரண்டாம் உலகப் போரின் போது மலாயா மீதான சப்பானியர் படையெடுப்பில் இந்த நிலையம் சப்பானியர்களின் தரையிறங்கும் தளமாகப் பயன்படுத்தப்பட்டது.
பெங்காலான் செப்பா மக்களவைத் தொகுதி
[தொகு]பெங்காலான் செப்பா மக்களவைத் தொகுதியின் உறுப்பினர்கள் (1974 - 2022) | ||||
---|---|---|---|---|
மக்களவை | தொகுதி | ஆண்டுகள் | உறுப்பினர் | கட்சி |
1974-ஆம் ஆண்டில் கிளாந்தான் ஈலிர் தொகுதியில் இருந்து பெங்காலான் செப்பா தொகுதி உருவாக்கப்பட்டது | ||||
4-ஆவது மக்களவை | P017 | 1974–1978 | நிக் அப்துல் அசிஸ் நிக் மாட் (Nik Abdul Aziz Nik Mat) |
பாரிசான் நேசனல் (மலேசிய இசுலாமிய கட்சி) |
5-ஆவது மக்களவை | 1978–1982 | மலேசிய இசுலாமிய கட்சி | ||
6-ஆவது மக்களவை | 1982–1986 | |||
7-ஆவது மக்களவை | P018 | 1986–1990 | நிக் அப்துல்லா அர்சத் (Nik Abdullah Arshad) | |
8-ஆவது மக்களவை | 1990–1995 | |||
9-ஆவது மக்களவை | P020 | 1995–1999 | நிக் முகமது அமர் நிக் அப்துல்லா (Nik Mohd. Amar Nik Abdullah) | |
10-ஆவது மக்களவை | 1999–2004 | மாற்று முன்னணி (மலேசிய இசுலாமிய கட்சி) | ||
11-ஆவது மக்களவை | 2004–2008 | அப்துல் அலீம் அப்துல் ரகுமான் (Abdul Halim Abdul Rahman) |
மலேசிய இசுலாமிய கட்சி | |
12-ஆவது மக்களவை | 2008–2013 | பாக்காத்தான் ராக்யாட் (மலேசிய இசுலாமிய கட்சி) | ||
13-ஆவது மக்களவை | 2013–2018 | இசானி உசின் (Izani Husin) | ||
14-ஆவது மக்களவை | 2018–2020 | அகமத் மர்சுக் சாரி (Ahmad Marzuk Shaary) |
மலேசிய இசுலாமிய கட்சி | |
2020–2022 | பெரிக்காத்தான் நேசனல் (மலேசிய இசுலாமிய கட்சி) | |||
15-ஆவது மக்களவை | 2022–தற்போது வரையில் |
பெங்காலான் செப்பா மக்களவைத் தேர்தல் முடிவுகள் 2022
[தொகு]பொது | வாக்குகள் | % | ∆% |
---|---|---|---|
பதிவு பெற்ற வாக்காளர்கள் (Registered Electors) |
106,982 | ||
வாக்களித்தவர்கள் (Turnout) |
78,659 | 72.69% | ▼ - 8.05% |
செல்லுபடி வாக்குகள் (Total Valid Votes) |
77,761 | 100.00% | |
கிடைக்காத அஞ்சல் வாக்குகள் (Unreturned Ballots) |
238 | ||
செல்லாத வாக்குகள் (Total Rejected Ballots) |
630 | ||
பெரும்பான்மை (Majority) |
38,270 | 49.22% | + 26.94 |
வெற்றி பெற்ற கட்சி | மலேசிய இசுலாமிய கட்சி | ||
சான்றுகள்: மலேசிய தேர்தல் ஆணையம்[8] |
பெங்காலான் செப்பா வேட்பாளர் விவரங்கள்
[தொகு]கட்சி | வேட்பாளர் | செல்லுபடி வாக்குகள் |
பெற்ற வாக்குகள் |
% | ∆% | |
---|---|---|---|---|---|---|
மலேசிய இசுலாமிய கட்சி | அகமத் மர்சுக் சாரி (Ahmad Marzuk Shaary) |
77,761 | 53,933 | 69.36% | + 14.48% | |
பாரிசான் நேசனல் | முகமது அபீசுல்னீசம் முகமட் அசுதீன் (Mohd Hafiezulniezam Mohd Hasdin) |
- | 15,633 | 20.14% | - 12.46% ▼ | |
பாக்காத்தான் அரப்பான் | நிக் பைசா நிக் ஒசுமான் (Nik Faizah Nik Othman) |
- | 7,356 | 9.46% | - 3.06 % ▼ | |
சுயேச்சை | முகமது ரிட்சுவான் ரசாலி (Mohamad Redzuan Razali) |
- | 451 | 0.58% | + 0.58% | |
தாயக இயக்கம் | வான் அகமத் நசுரி வான் இசுமாயில் (Wan Ahmad Nasri Wan Ismail) |
- | 358 | 0.46% | + 0.46% |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Semakan Keputusan Pilihan Raya". Semakan Keputusan Pilihan Raya. பார்க்கப்பட்ட நாள் 16 June 2024.
- ↑ "MySPRSemak". mysprsemak.spr.gov.my. பார்க்கப்பட்ட நாள் 16 June 2024.
- ↑ "Kawasanku" (in ஆங்கிலம்). Department of Statistics Malaysia. 2023-09-24. பார்க்கப்பட்ட நாள் 2023-09-24.
- ↑ "Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018" (PDF). Election Commission of Malaysia. 10 April 2018. p. 21. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
- ↑ "15th General Election Malaysia (GE15 / PRU15) - Results Overview". oriantaldaily.com.my. பார்க்கப்பட்ட நாள் 2022-11-10.
- ↑ Demarcation Review Report on Proposed Recommendations for Federal and State Electoral Divisions in the States of Malaya Sixth Year 2018 Volume 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
- ↑ Sultan Ismail Petra Airport, Kota Bharu at Malaysia Airports Holdings Berhad
- ↑ "MySPRSemak". mysprsemak.spr.gov.my. பார்க்கப்பட்ட நாள் 1 June 2024.