பூபதியின் கேழல்மூக்கன்
பூபதியின் கேழல்மூக்கன் | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | நாசிகாபட்ராச்சுடே
|
பேரினம்: | நாசிகாபட்டிராச்சசு பிஜீ & போசியூத், 2003
|
இனம்: | நா. பூபதி
|
இருசொற் பெயரீடு | |
நாசிகாபட்டிராச்சசு பூபதி ஜனனி, வாசுதேவன், பிரெந்தினி, தத்தா & அகர்வால், 2017[2] | |
உத்தேச பரம்பல்
பரம்பல்
|
நாசிக்காபாட்ராக்கசு பூபதி அல்லது பூபதியின் கேழல்மூக்கன்[3] என்பது நாசிகாபட்ராச்சுடே குடும்பத்தைச் சேர்ந்த தவளையாகும். இது மேற்குத் தொடர்ச்சி மலைகளில் மட்டும் காணப்படும் அகணிய உயிரி வகைத் தவளை. இத்தவளை முதன்முதலில் திருவில்லிப்புத்தூரில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் வனவிலங்கு சரணாலயத்தில் கண்டறியப்பட்டது. இது ஒரு அரிய கண்டுபிடிப்பு. ஏனெனில் இத்தவளை ஆண்டிற்கு சில ந��ட்கள் மட்டுமே நிலத்திற்கடியில் இருந்து வெளிவருகிறது.[4] இதன் சிறப்புப் பெயரானது அகத்தியமலையில் 2014-ஆம் களப்பணியில் ஈடுபட்டிருந்த போது உயிரிழந்த சுப்பிரமணியன் பூபதி (1963-2014) என்னும் ஊர்வனவியல் ஆய்வாளரின் நினைவாக இடப்பட்டது.[2][5]
தோற்றக்குறிப்பு
[தொகு]ஊதாநிறத்தோலும் நீலக் கண்களும் கொண்ட இத்தவளை நிலத்திற்கு அடியில் வாழ்கிறது. இதற்கு நெருங்கிய இனமான கேழல்மூக்கனும் இதுவும் மரபணு வகையிலும் தோற்றத்திலும் ஒலி எழுப்புவதிலும் வேறுபட்டுள்ளன. சூழலின் காரணமாக இந்த மாறுபாடுகள் ஏற்பட்டிருக்கலாம். பருவமழைக் காலம் மேற்கு மலைத்தொடரின் இருபக்கமும் வேறுபட்டுள்ளது போல இவற்றின் இனப்பெருக்க காலமும் வேறுபட்டுள்ளது. கேழல் மூக்கனுக்கு மே முதல் ஆகத்து மாதம் வரையும் பூபதியின் கேழல்மூக்கனுக்கு அக்டோபர் முதல் திசம்பர் வரையும் இனப்பெருக்கக் காலமாகும்.[2]
வகைப்பாடு மற்றும் தொகுப்பியல்
[தொகு]இத்தவளையின் இருசொற்பெயர்(scientific name) சமசுகிருதம் மற்றும் கிரேக்க மொழியிலிருந்து பெறப்பட்டுள்ளது. சமசுகிருதத்தில் "நாசிகா" என்றால் மூக்கு என்றும், கிரேக்கத்தில் "பாட்டிராக்கஸ்" என்பது தவளையை குறிக்கும், இது இருசொற்பெயரில் பேரினத்தின் பெயர் (நாசிகாபட்ராகஸ்) ஆகும். இத்தவளையின் குடும்பத்தை சார்ந்த தவளைகள் சேசல்சு தீவுகளில் காணப்படுவதால், சுமார் 100 மில்லியன் வருடங்களுக்கு முன் இந்தியா, சேசல்சு மற்றும் மடகாஸ்கர் தீவுகள் ஒன்றாக இருந்தபொழுது இத்தவளை தோன்றியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.[6] கண்டப்பெயர்ச்சியினால் இந்நிலப்பகுதிகள் பிற்காலத்தில் பிளவுபட்டது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Nasikabatrachus bhupathi". IUCN Red List of Threatened Species. 2017. Archived from the original on 29 September 2017. பார்க்கப்பட்ட நாள் 29 September 2017.
This taxon has not yet been assessed for the IUCN Red List, and also is not in the Catalogue of Life.
- ↑ 2.0 2.1 2.2 Janani, S. Jegath; Vasudevan, Karthikeyan; Prendini, Elizabeth; Dutta, Sushil Kumar; Aggarwal, Ramesh K. (13 August 2017). "A new species of the genus Nasikabatrachus (Anura, Nasikabatrachidae) from the eastern slopes of the Western Ghats, India" (PDF). Alytes 34 (1–4): 1–19. https://www.researchgate.net/publication/319203867. பார்த்த நாள்: 30 August 2017.
- ↑ Bittel, Jason (2017-08-24). "New Purple Pig-Nose Frog Found in Remote Mountains". National Geographic. Weird & Wild. Washington, DC. Archived from the original on 1 September 2017. பார்க்கப்பட்ட நாள் 1 September 2017.
- ↑ "The afterlife of Subramaniam Bhupathy". Live Mint. பார்க்கப்பட்ட நாள் 5 May 2020.
- ↑ "New Purple Pig-Nose Frog Found in Remote Mountains". National Geographic. பார்க்கப்பட்ட நாள் 5 May 2020.
- ↑ Perinchery, Aathira (23 August 2017). "'N. bhupathi', a frog with the face of a pig". The Hindu இம் மூலத்தில் இருந்து 10 December 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20191210213650/https://www.thehindu.com/sci-tech/energy-and-environment/introducing-n-bhupathi-a-frog-with-the-face-of-a-pig/article19541223.ece. பார்த்த நாள்: 18 January 2020.