புவனேசுவர் குமார்
தனிப்பட்ட தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முழுப்பெயர் | புவனேசுவர் குமார் சிங் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பிறப்பு | 5 பெப்ரவரி 1990 மீரட், உத்தரப் பிரதேசம், இந்தியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பட்டப்பெயர் | புவி | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உயரம் | 5 அடி 10 அங் (1.78 m) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | வலது-கை | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | வலது-கை மித-வேகம் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பங்கு | பந்துவீச்சு | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பன்னாட்டுத் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நாட்டு அணி | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தேர்வு அறிமுகம் (தொப்பி 275) | 22 பெப்ரவரி 2013 எ. ஆத்திரேலியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசித் தேர்வு | 24 சனவரி 2018 எ. தென்னாப்பிரிக்கா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒநாப அறிமுகம் (தொப்பி 194) | 30 டிசம்பர் 2012 எ. பாக்கித்தான் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசி ஒநாப | 14 ஆகத்து 2019 எ. மேற்கிந்தியத் தீவுகள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒநாப சட்டை எண் | 5 | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
இ20ப அறிமுகம் (தொப்பி 45) | 25 டிசம்பர் 2012 எ. பாக்கித்தான் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசி இ20ப | 11 டிசம்பர் 2019 2014 எ. மேற்கிந்தியத் தீவுகள் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உள்ளூர் அணித் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஆண்டுகள் | அணி | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2007/08–இன்று | உத்தரப் பிரதேசம் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2009–2010 | பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2011–2013 | புனே வாரியர்சு இந்தியா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2014–தற்போது | சன்ரைசர்ஸ் ஐதராபாத் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: ESPNcricinfo, 11 டிசம்பர் 2019 |
புவனேசுவர் குமார் (Bhuvneshwar Kumar, பிறப்பு: 5 பெப்ரவரி 1990) என்பவர் இந்தியப் பன்னாட்டுத் துடுப்பாட்ட வீரர். இவர் உள்நாட்டில் உத்தரப் பிரதேச அணிக்க்காகவும், இந்தியன் பிரீமியர் லீக்கில் சன்ரைசர்ஸ் ��தராபாத் அணிக்காகவும் விளையாடுகிறார். இவர் வலது-கை நடுத்தர-வேகப்பந்து வீச்சாளரும், வலது-கை துடுப்பாட்ட வீரரும் ஆவார். பாக்கித்தான் அணிக்கு எதிரான இ20ப போட்டி ஒன்றில் மூன்று மட்டையாளர்களை வீழ்த்திய போது இவரது திறமைகள் வெளிப்பட்டன. இதற்குப் பின்னர் ஒருநாள் போட்டிகளிலும் திறமையாக விளையாடி இந்தியத் துடுப்பாட்ட அணியில் இடம் பிடித்தார்.
உத்தரப் பிரதேசத்தின் குர்சார் குடும்பம் ஒன்றில் மீரட் நகரில் புவனேசுவர் பிறந்தார்.[1] இவரது தந்தை கிரன் பால் சிங் ஒரு காவல்துறை அதிகாரியாக இருந்தார்.[2]
ஆரம்ப கால வாழ்க்கை
[தொகு]புவனேசுவர் குமார் பெப்ரவரி 5, 1990-ல் மீரட்டில் பிறந்தார்.[3] இவரின் தந்தை கிரன் பால் சிங் மவி, உத்திரப்பிரதேச காவல் அதிகாரியாக பணிபுரிந்துவருகிறார். இவரின் தாய் இந்திரேசு மவி குடும்பத் தலைவி ஆவார்.[4] இவரின் சகோதரி ரேகா ஆதனா, தான் புவனேசுவர் குமாருக்கு வயதாக இருக்கும் போது அவரை ஊக்கப்படுத்தி துடுப்பாட்ட பயிற்சிக்கு அனுப்பினார்.[5]
உள்ளூர்ப் போட்டிகள்
[தொகு]குமார் உள்ளூர்ப் போட்டிகளில் உத்தரப் பிரதேசம் அணிக்காகவிளையாடினார். துலீப் கோப்பை போட்டிகளிலும் விளையடியுள்ளார்[6]. வங்காளம் துடுப்பாட்ட அணிக்கு எதிராக தனது 17 ஆம் வயதில் முதல் தரத் துடுப்பாட்டத்தில் அறிமுகம் ஆனார்.[7]
அதன் இரண்டாவது போட்டியில் 3.03 என்ற பந்துவீச்சு விகிதத்தில் 1 மட்டையாளரை வீழ்த்தினார். அதே போட்டியில் 312 பந்துகளில் 128 ஓட்டங்கள் எடுத்தார். அந்தத் தொடரின் தொடர் நாயகன் விருது பெற்றார். 2008-2009 ஆம் ஆண்டின் ரஞ்சிக் கோப்பை போட்டியின் இறுதில் சச்சின் டெண்டுல்கரை சுழியத்தில் வீழ்த்தினார். முதல் தரப் போட்டிகளில் சச்சின் ஓட்டங்கள் எடுக்காது சுழியத்தில் ஆட்டமிழப்பது இதுவே முதல்முறையாகும்.[8]
பன்னாட்டுப் போட்டிகள்
[தொகு]பெங்களூரில் நடைபெற்ற பன்னாட்டு இருபது20 போட்டியில் பாக்கித்தான் துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் அறிமுகம் ஆனார். இங்கிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிராக, பர்விந்தர் அவனாவின் மோசமான செயல்பாட்டினால் இவருக்கு விளையாட வாய்ப்பு கிடைத்தது. இந்தத் தொடரின் ஒரு போட்டியில் நான்கு ஓவர்களில் 9 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 3 மட்டையாளர்களை வீழ்த்தினார். இவர்கள் நசீர் ஜம்சீட், அகமது செசாத் மற்றும் உமர் அக்மல் ஆகிய மூன்று முக்கிய வீரர்களாவர்.
இவர் முதன்முதலாக விளையாடிய ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியின் முதல் பந்திலேயே முகம்மது அபீசை வீழ்த்தினார். இவரின் முதல் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம், பன்னாட்டு இருபது20, தேர்வுத் துடுப்பாட்டம் ஆகிய மூன்று போட்டிகளிலும் இவரது முதல் வீழ்த்தல் இலக்கு வீச்சு முறையில் அமைந்தது.
முதல் தேர்வுத் துடுப்பாட்டம்
[தொகு]இவர் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான 2013 ஆலன் பார்டர்- கவாஸ்கர் கோப்பையில் அறிமுகம் ஆனார். இந்தப் போட்டியில் 6 மட்டையாளர்களை வீழ்த்தினார். இவரும் , மகேந்திரசிங் தோனியும் ஒன்பதாவது இழப்புக்கு இணைந்து புதிய சாதனை படைத்தனர். இவர் 10ஆவது வீரராக கள்மிறங்கி 38 ஓட்டங்கள் எடுத்தார்.
இவரின் முதல் தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் அறிமுக தொப்பியை இஷாந்த் ஷர்மா இவருக்கு வழங்கினார். இவரின் முதல் ஆட்டப்பகுதியில் எந்தவொரு மட்டையாளரையும் வீழ்த்த இயலவில்லை. ஏனெனில் அந்த மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்தது. மட்டையாட்டத்தின் போது இவரும் மகேந்திர சிங் தோனியும் இணைந்து 9ஆவது விக்கெட்டுக்கு 140 ஓட்டங்கள் எடுத்து சாதனை படைத்தனர். இதன் மூலம் இந்திய அணி 266 ஓட்டங்கள் எடுத்தது. இரண்டாவது ஆட்டப்பகுதியில் இவருக்கு பந்து வீச வாய்ப்பு கிடைக்கவில்லை. எனவே அறிமுக தேர்வுத் துடுப்பாட்டத்தில் இவர் வீழ்த்தல்களின்றி இருந்தார். பிறகு தொரின் இரண்டாவது போட்டியில் டேவிட் வார்னர், ஷேன் வாட்சன், எட் கோவன் ஆகிய மூன்று மட்டையாளர்களை வீழ்த்தினார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Pacers take parallel tracks to success". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 27 டிசம்பர் 2012 இம் மூலத்தில் இருந்து 2013-10-04 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131004234206/http://articles.timesofindia.indiatimes.com/2012-12-27/top-stories/36022509_1_ranji-team-rp-singh-praveen-kumar. பார்த்த நாள்: 17 சூலை 2013.
- ↑ "Behind Bhuvneshwar Kumar's success, a sister act". Express India. 11 டிசம்பர் 2012. http://expressindia.indianexpress.com/latest-news/behind-bhuvneshwar-kumars-success-a-sister-act/1056515/. பார்த்த நாள்: 17 சூலை 2013.
- ↑ கிரிக்இன்ஃபோ
- ↑ "Pacers take parallel tracks to success". The Times of India. 27 December 2010 இம் மூலத்தில் இருந்து 4 அக்டோபர் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131004234206/http://articles.timesofindia.indiatimes.com/2012-12-27/top-stories/36022509_1_ranji-team-rp-singh-praveen-kumar. பார்த்த நாள்: 17 July 2013.
- ↑ "Behind Bhuvneshwar Kumar's success, a sister act". Express India. 11 December 2012 இம் மூலத்தில் இருந்து 17 July 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130717145628/http://expressindia.indianexpress.com/latest-news/behind-bhuvneshwar-kumars-success-a-sister-act/1056515/. பார்த்த நாள்: 17 July 2013.
- ↑ "Bhuvneshwar leads Central Zone fightback". ESPNcricinfo. 16 October 2012. http://www.espncricinfo.com/duleep-trophy-2012-13/content/story/586900.html. பார்த்த நாள்: 17 July 2013.
- ↑ "Bowlers put UP on top". இஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ. 17 December 2007. http://www.espncricinfo.com/ranjisuperleague/content/story/326070.html. பார்த்த நாள்: 17 July 2013.
- ↑ "Bhuvneshwar lives his dream". ESPNcricinfo. 12 January 2009. http://www.espncricinfo.com/ranjisuperleague2008/content/story/386179.html. பார்த்த நாள்: 17 July 2013.
வெளி இணைப்புகள்
[தொகு]- Bhuvneshwar Kumar - ESPN Cricinfo
- Bhuvneshwar Kumar பரணிடப்பட்டது 2014-07-27 at the வந்தவழி இயந்திரம்'s profile page on Wisden
- Bhuvneshwar Kumar - CricBuzz