உள்ளடக்கத்துக்குச் செல்

புத்ராஜெயா ஏரி

ஆள்கூறுகள்: 2°56′31″N 101°41′21″E / 2.941942°N 101.68911°E / 2.941942; 101.68911
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புத்ராஜெயா ஏரி
Putrajaya Lake
புத்ராஜெயா ஏரி Putrajaya Lake is located in மலேசியா
புத்ராஜெயா ஏரி Putrajaya Lake
புத்ராஜெயா ஏரி
Putrajaya Lake
அமைவிடம்புத்ராஜெயா, மலேசியா
ஆள்கூறுகள்2°56′31″N 101°41′21″E / 2.941942°N 101.68911°E / 2.941942; 101.68911
ஏரி வகைசெயற்கை ஏரி
வடிநில நாடுகள்மலேசியா
மேற்பரப்பளவு650 ha (1,600 ஏக்கர்கள்)

புத்ராஜெயா ஏரி (மலாய்: Tasik Putrajaya; ஆங்கிலம்: Putrajaya Lake); என்பது மலேசியா, புத்ராஜெயாவில் அமைக்கப்பட்டு உள்ள ஒரு செயற்கை ஏரியாகும். கோலாலம்பூருக்கு தெற்கே 33 கி.மீ. தொலைவில் உள்ளது.

இந்த ஏரி 650 ஹெக்டேர் பரப்பளவில் உருவாக்கப்பட்டது. எரியைச் சுற்றி உள்ள புத்ராஜெயா நகரத்திற்கு இயற்கையான குளிரூட்டும் அமைப்பிற்காக உருவாக்கப்பட்டது.

தவிர, பொழுதுபோக்கு, மீன்பிடித்தல், நீர் விளையாட்டு மற்றும் நீர் போக்குவரத்துக்காகவும் திட்டமிட்டு வடிவமைக்கப்பட்டது.

பொது

[தொகு]

ஏறக்குறைய 50.9 சதுர கி.மீ. நீர்ப்பிடிப்புப் பகுதி (catchment area) கொண்ட இந்த ஏரியின் சராசரி ஆழம் 6.60 மீட்டர்.[1]

புத்ரா மசூதி (Putra Mosque); (இளஞ்சிவப்பு மசூதி); துவாங்கு மிசான் சைனல் அபிதீன் மசூதி (இரும்பு மசூதி) (Tuanku Mizan Zainal Abidin Mosque), மற்றும் ஆயிரமாண்டுக் கால நினைவுச் சின்னம் (மலேசியா) (Millennium Monument (Malaysia) போன்ற பிரபலமான நினைவுச் சின்னங்களும் இந்தப் புத்ராஜெயா ஏரிக் கரையில்தான் உள்ளன.

கட்டுமானம்

[தொகு]

சுங்கை சுவாவ் (Sungai Chuau) மற்றும் சுங்கை பிசா (Sungai Bisa) பள்ளத்தாக்குகளுக்கு இடைப்பட்ட தாழ்ந்த நிலப்பரப்பில் புத்ராஜெயா ஏரி உருவாக்கப்பட்டது. 1998-ஆம் ஆண்டில் கட்டுமானம் தொடங்கப்பட்டு 2002-ஆம் ஆண்டில் முழுமையாக நிறைவு அடைந்தது.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Putrajaya Lake and Wetland Management and Operational System (PLWMOS)". plwmos.ppj.gov.my. Archived from the original on 2019-10-22. பார்க்கப்பட்ட நாள் 2019-10-30.
  2. "The 400 hectares Putrajaya Lake was created by inundating the valleys of Sungai Chuau and Sungai Bisa. The construction was started in 1998 and fully completed in 2002". smart.putrajaya.my. பார்க்கப்பட்ட நாள் 10 May 2022.

மேலும் காண்க

[தொகு]

மலேசிய ஏரிகளின் பட்டியல்

"https://ta.wikipedia.org/w/index.php?title=புத்ராஜெயா_ஏரி&oldid=4097290" இலிருந்து மீள்விக்கப்பட்டது