உள்ளடக்கத்துக்குச் செல்

பி. என். இரவீந்திரன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Hon'ble Justice
பி. என். இரவீந்திரன்
நீதிபதி-கேரள உயர் நீதிமன்றம்
பதவியில்
13 திசம்பர் 2008 – 28 மே 2018
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு29 மே 1956 (1956-05-29) (அகவை 68)
ஆலத்தூர், பாலக்காடு மாவட்டம், பாலக்காடு மாவட்டம், கேரளம், இந்தியா
குடியுரிமைஇந்தியா
தேசியம் இந்தியா
அரசியல் கட்சிபாஜக
முன்னாள் கல்லூரிபாலக்காடு அரசு விக்டோரியா கல்லூரி
இணையத்தளம்High Court of Kerala

பி. என். இரவீந்திரன் (P. N. Ravindran)(பிறப்பு 29 மே 1956) என்பவர் கேரள உயர்நீதிமன்றத்தின் மேனாள் நீதிபதி ஆவார். கேரள உயர் நீதிமன்றம் என்பது இந்திய மாநிலமான கேரளா, ஒன்றிய பிரதேசமான இலட்சத்தீவிலும் உள்ள மிக உயர் நீதிமன்றமாகும். கேரள உயர்நீதிமன்றம் கொச்சி எர்ணாகுளத்தைத் தலைமையிடமாகக் கொண்டுள்ளது.[1] நீதிபதி ரவீந்திரன் 2018 மே 28 அன்று பணியிலிருந்து ஓய்வு பெற்றார்.

மார்ச் 2021-இல் கொச்சியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் முன்னிலையில் பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தார்.[2]

தொழில் வாழ்க்கை

[தொகு]

இரவீந்திரன் 1979ஆம் ஆண்டில் எர்ணாகுளம் அரசு சட்டக் கல்லூரியில் சட்டத்தில் பட்டம் பெற்றார், 1979 திசம்பர் 16 அன்று கேரள வழக்கறிஞர் குழுமத்தில் சேர்ந்து கேரள உயர்நீதிமன்றத்தில் பயிற்சியினைத் தொடங்கினார்.   சட்டத்தின் பல்வேறு பிரிவுகளில் பயிற்சி பெற்றபோது, குருவாயூர் தேவஸ்வம் சட்ட ஆலோசகராக பணியாற்றினார்.[1]

12 திசம்பர் 2007 அன்று கேரள உயர்நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்ட இவர், 9 திசம்பர் 2009 முதல் நிரந்தர நீதிபதியாகப் பதவி உயர்வு பெற்றார்.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 "Justice P.N.Ravindran". highcourtofkerala.nic.in.
  2. "Former Kerala High Court Judge PN Ravindran joins BJP". aninews.in. 1 Mar 2021. பார்க்கப்பட்ட நாள் 12 Nov 2021 – via ANI News.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._என்._இரவீந்திரன்&oldid=4177286" இலிருந்து மீள்விக்கப்பட்டது