உள்ளடக்கத்துக்குச் செல்

பிரதேச பாதுகாப்புப் படை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரதேச பாதுகாப்புப் படை
Territorial Army
Territorial Army India Logo.gif
பிரதேச பாதுக்காப்பு படையின் முகட்டுச்சி
செயற் காலம்1949 – தற்போது வரை
நாடுஇந்தியா
பற்றிணைப்புஇந்தியத் தரைப்படை
பொறுப்புஇந்தியத் தரைப்படைக்கு உதவியாக பணி செய்தல்
அளவு40,000+[1]
பிரதேச பாதுகாப்பு படைகளின் கட்டளை அதிகாரிகளின் தலைமையிடம்மேற்கு கட்டளையகம் சண்டிகர்
தெற்கு கட்டளையகம், புனே
கிழக்கு கட்டளையகம் கொல்கத்தா
வடக்கு கட்டளையகம் உதம்பூர்
மத்திய கட்டளைகம் லக்னோ
குறிக்கோள்(கள்)விழிப்புணர்வு மற்றும் வீரம்
ஆண்டு விழாக்கள்9 அக்டோபர் (TA Day)
சண்டைகள்1962 இந்திய-சீனா போர்
இந்திய பாகிஸ்தான் போர், 1965
1971 இந்திய பாகிஸ்தான் போர்
1987 பவான் நடவடிக்கை
1999 கார்கில் போர்
இணையதளம்jointerritorialarmy.gov.in
தளபதிகள்
தலைமை இயக்குநர்லெப். ஜெனரல் ராஜேஷ் புஷ்கர்
தலைமைப் பாதுககாப்பு படைத் தலைவர்ஜெனரல் அனில் சவுகான்
படைத்துறைச் சின்னங்கள்
Insigniaதாமரைச் சங்கிலி மற்றும் அசோகச் சிங்கச் சின்னம்
கொடி
பிரதேச பாதுகாப்பு படையின் 25வது ஆண்டு விழா நினைவை ஒட்டி 1974ஆம் ஆண்டில் அஞ்சல் தலை

பிரதேச பாதுகாப்புப் படை (Territorial Army (TA) என்பதை இராணுவ இருப்புப் படை என்றும் அழைப்பர். 1949ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இப்படை, இந்தியத் தரைப்படைகளுக்கு உதவி செய்யும் தன்னார்வலர்களைக் கொண்டது. போரின் போது பன்னாட்டு எல்லையோர பிரதேசங்களில் இந்தியத் தரைப்படையினருக்கு அனைத்து வகைகளில் உதவுவதே பிரதேச பாதுகாப்புப் படையின் நோக்கமாகும். 2019ஆம் ஆண்டில் இப்படையில் 43,000 முதல் வரிசை துருப்புகளும் மற்றும் 160,000 இரண்டாம் வரிசை துருப்புகளும் இருந்தனர்.[2]

இப்படைகள் போர்க் காலங்களில் இந்தியத் தரைப்படை]களுக்கு உதவுவதுடன், வெள்ளம், நிலநடுக்கம் போன்ற இயற்கைப் பேரிடர் காலங்களில் பொது மக்களை காக்கிறது.[3]

இப்படைகள் 1962 இந்திய-சீனா போர், இந்திய பாகிஸ்தான் போர், 1965, 1971 இந்திய பாகிஸ்தான் போர், 1987 பவான் நடவடிக்கை மற்றும் 1999 கார்கில் போர்களில் பங்கெடுத்துள்ளது.

கட்டளையகங்கள்

[தொகு]

லெப்டினண்ட் அதிகாரியே இப்படைகளின் தலைமை இயக்குநர் ஆவார். இப்படையில் 40,000 மேற்பட்டோர் பணியில் உள்ளனர். கட்டளையகங்கள் மேஜர் ஜெனரல் தலைமையில் இயங்கும். மேற்கு கட்டளையகத்தின் தலைமையிடம் சண்டிகரிலும், தெற்கு கட்டளையகத்தின் தலைமையிடம், புனேவிலும், கிழக்கு கட்டளையகத்தின் தலைமையிடம் கொல்கத்தாவிலும், வடக்கு கட்டளையகத்தின் தலைமையிடம் உதபூரிலும், மத்திய கட்டளைகம் லக்னோவிலும் உள்ளது.

மண்டலங்கள் மற்றும் படைக்கு இளைஞர்களை சேர்த்தல்

[தொகு]

பிரதேச பாதுகாப்பு படையின் 4 மண்டல அலுவலகங்கள் பிரிகேடியர் தலைமையில் இயங்கும். மண்டல தலைமையகத்தில் இப்படைகளுக்கு ஆட்சேர்ப்பு நடைபெறும். மேலும் பிரதேசப் பாதுகாப்புப் படைகளில் இணைந்த தன்னார்வலர்களுக்கு இராணுவப் பயிற்சி வழங்குகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "History". indianarmy.nic.in. பார்க்கப்பட்ட நாள் 27 July 2021.
  2. Staff reporter (1 August 2022). "Mohan Vaghnani's 'Our Territorial Army' screened at Shaurya Smarak". The Pioneer. https://www.dailypioneer.com/2022/state-editions/mohan-vaghnani---s----our-territorial-army--screened-at-shaurya-smarak.html. 
  3. Singh, Sushant (8 August 2016). "TA, a back-up for the Army". இந்தியன் எக்சுபிரசு. https://indianexpress.com/article/explained/territorial-ta-act-a-back-up-for-the-army-2960412/. 

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரதேச_பாதுகாப்புப்_படை&oldid=4098990" இலிருந்து மீள்விக்கப்பட்டது