பால வர்மன்
பால வர்மன் (Bala Varman) என்பவர் வர்மன் அரசமரபைச் சார்ந்த சமுத்ர வர்மனின் மகன் ஆவார். காமரூப பேரரசை இவர் தனது தந்தைக்குப் பின்னர் 398 முதல் 422 வரையிலும் ஆட்சிபுரிந்தார்.
ஆட்சிச் செல்வாக்கு
[தொகு]பெயருக்கு ஏற்பவே அவர் உடல் வலிமையும் வீரமும் பிரதிபலித்தன. அவரது படைவீரர்கள் போர்களில் எப்போதும் முன்னேறிப் போரிட்டனர். உறவு முறையைக்கூட கருதாமல் பாலவர்மன், தனது அரசமரபைச் சார்ந்த சமுத்திரகுப்தருடன் பல போர்களில் எதிர்கொண்டு போரிட்டுள்ளார்.[1]
குடும்பம்
[தொகு]பாலவர்மனின் மனைவியின் பெயர் ரத்னாவதி ஆகும். இவர்களுக்கு கல்யாணவர்மன் என்று ஒரு மகனும் அமிர்தபிரபா என்று ஒரு மகளும் இருந்தனர். பாலவர்மன் தன்மகள் அமிர்தபிரபாவுக்கு திருமணம் செய்யும் பொருட்டு சுயம்வரம் நடத்தினார். இச்சுயவர நிகழ்ச்சியில் ஆர்யவர்த்தம் எனப்படும் வட இந்திய நாடுகளில் இருந்து பல்வேறு நாட்டு அரச குமாரர்கள் கலந்து கொண்டனர். இச்சுயவரம் தொடர்பான விரிவான செய்திகள் கல்கனரின் இராசதரங்கினி நூலில் இடம்பெற்றுள்ளன. காசுமீர் இளவரசன் மேகவாணனை மணந்து கொண்ட அமிர்தபிரபா காசுமீரில் எண்ணற்ற பௌத்த மடங்களை நிறுவினார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Nagendranath Vasu (1922), The Social History of Kamarupa, P.141