உள்ளடக்கத்துக்குச் செல்

பாக்ரி மொழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாக்ரி மொழி
மொழிக் குறியீடுகள்
ISO 639-2bgq
ISO 639-3bgq


பாக்ரி மொழி, ராஜஸ்தானி மொழியின் ஒரு கிளை மொழி ஆகும். இந்திய-ஆரிய மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த இம் மொழியைச் சுமார் ஐந்து மில்லியன் பேர் வரை பேசிவருகின்றனர். இம் மொழி பேசுவோர், ராஜஸ்தானின் ஹனுமன்கர், ஸ்ரீகங்காநகர் ஆகிய மாவட்டங்களிலும், ஹரியானாவின், சிர்சா, ஹிசார் ஆகிய மாவட்டங்களிலும், இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஃபைரோஸ்பூர், முக்த்சார் மாவட்டங்களிலும், பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப்பின் பகவல்பூர், பகவல்நகர் ஆகிய இடங்களிலும் கூடுதலாக வாழ்கின்றனர். இம் மொழி எழுவாய், செயப்படுபொருள், பயனிலை என்னும் ஒழுங்கிலமைந்த சொற்றொடர்களைக் கொண்ட இந்தோ-ஆரிய மொழியாகும்.

மொழியியல் அம்சங்கள்

[தொகு]
  • பாக்ரியில், 31 மெய்களும், 10 உயிர்களும், 2 கூட்டொலிகளும், 3 தொனிகளும் உள்ளன.
  • நாவளை ஒலிப்பு ஒரு முக்கியமான அம்சம்.
  • ஒருமை, பன்மை என இரண்டு எண்களும், ஆண்பால், பெண்பால் என இரண்டு பால் வேறுபாடுகளும், மூன்று வேற்றுமைகளும் உள்ளன.

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாக்ரி_மொழி&oldid=2962825" இலிருந்து மீள்விக்கப்பட்டது