உள்ளடக்கத்துக்குச் செல்

பயிர் பாதுகாப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பயிர் பாதுகாப்பு (Crop protection) என்பது நாம்  பயிரிடும் பயிர்களை, அவற்றைத் தாக்கும் பூச்சிகள், பயிர் நோய்கள், களைகள், தீங்குயிர்கள் ( முதுகெலும்புள்ளவை மற்றும் முதுகெலும்பற்றவை ) ஆகியவற்றிடமிருந்து பாதுகாத்து நிர்வாகம் செய்யும் அறிவியல் ஆகும். வேளாண்மை பயிர்கள் என்பது வயலில் பயிரிடப்படும் தானியப்பயிா்கள் ( நெல், மக்காச்சோளம் , கோதுமை........ ) பயிறு வகைகள் ( அவரை, துவரை , உளுந்து....... ) எண்ணைவித்துக்கள் ( நிலக்கடலை , எள் .............. ) நாா்பயிர் ( பருத்தி , சணல் ....... ) சக்கரைப்பயிர் ( கரும்பு, பீட்ரூட் ....... _) தீவனப்பயிா் ஆகியவற்றை உள்ளடக்கியது. தோட்டக்கலைப்பயிர்கள் என்பவை காய்கறிப்பயிர்கள் ( கேரட், முள்ளங்கி,உருளை, முட்டைகோஸ்.......) பழப்பயிர்கள் ( மா, கொய்யா.........) மலர்பயிா்கள் , மூலிகைப்பயிர்கள் ஆகியவற்றை உள்ளடக்கியது. நாம் பயிரிடப்படும் பயிர்கள் பல்வேறு காரணிகளுக்கு ஆட்படுத்தப்படுகிறது. பயிர்கள் ,  பூச்சிகள், நோய்கள், விலங்குகள், எலிகள், பறவைகள் போன்ற பல்வேறு காரணிகளால் சேதப்படுத்தப்படுகின்றன. பயிர்பாதுகாப்பு என்பது பின்வரும் முறைகளை உள்ளடக்கியது. 

  • இரசாயன முறை: உயிர்கொல்லிகளான  பூச்சிகொல்லிகள்களைக்கொல்லிகள்  பூசணக்கொல்லிகள், பேன் கொல்லிகள், எலிக் கொல்லிகள் , நூற்புழுக்கொல்லிகள் ஆகியவற்றைப் பயன்படுத்தி பயிா்களை பாதுகாக்கும் முறை.
  • உயிரியல் முறை நோய், பூச்சி கட்டுப்பாடு: கவசப்பயிர், கவர்ச்சிபயிர் ( பொறி பயிர்) கண்காணிப்பு, பொறிகள், ஒட்டுண்ணிகள் போன்றவற்றை பயன்படுத்துதல்.
  • தடைகளை ஏற்படுத்தி பாதுகாத்தல் : எடுத்துக்காட்டு பறவை வலைகளை பயன்படுத்துதல்
  • விலங்குளின் மனவியலை பயன்படுத்தி பயிர்களைப் பாதுகாத்தல். எடுத்துக்காட்டு பறவை விரட்டிகள், விலங்கு விரட்டிகள்.
  • உயிரித் தொழில் நுட்ப முறையைப் பயன்படுத்துதல்: எடுத்துக்காட்டு தாவரப் பெருக்கம் , மரபணுப் பொறியியல் ��ோன்ற முறைகளைப் பயன்படுத்துதல்

மேற்கோள்கள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பயிர்_பாதுகாப்பு&oldid=2748792" இலிருந்து மீள்விக்கப்பட்டது