பன்னாட்டு வடக்கு-தெற்கு போக்குவரத்து வழித்தடம்
இக்கட்டுரையோ இக்கட்டுரையின் பகுதியோ துப்புரவு செய்ய வேண்டியுள்ளது. இதை விக்கிப்பீடியாவின் நடைக்கேற்ப மாற்ற வேண்டியுள்ளது. தொகுத்தலுக்கான உதவிப் பக்கம், நடைக் கையேடு ஆகியவற்றைப் படித்தறிந்து, இந்தக் கட்டுரையை துப்புரவு செய்து உதவலாம். |
வார்ப்புரு:Infobox road/shieldmain/ஆசியா சர்வதேச வடக்கு-தெற்கு போக்குவரத்து வழித்தடம்International North–South Transport Corridor (INSTC) | |
---|---|
இந்தியா, ஈரான், அசர்பைஜான் மற்றும் உருசியாவை இணைக்கும் பன்னாட்டு வடக்கு-தெற்கு போக்குவரத்து வழித்தடம் | |
வழித்தடத் தகவல்கள் | |
நீளம்: | 4,500 mi (7,200 km) |
முக்கிய சந்திப்புகள் | |
வடக்கு முடிவு: | மாஸ்கோ, உருசியா |
தெற்கு முடிவு: | மும்பை, இந்தியா |
நெடுஞ்சாலை அமைப்பு | |
வார்ப்புரு:Infobox road/browselinks/ஆசியா |
பன்னாட்டு வடக்கு-தெற்கு போக்குவரத்து வழித்தடம் (International North–South Transport Corridor (INSTC), இந்தியாவின் மும்பை துறைமுகத்திலிருந்து ஈரான், அசர்பைஜான் வழியாக கடல் மற்றும் நிலம் வழியாக உருசியா நாட்டின் மாஸ்கோ நகரத்துடன் இணைக்கும் 7,200 கிலோ மீட்டர் (4500 மைல்) கொண்ட வழித்தடமாகும். இவ்வழித்தடத்தில் கப்பல், இரயில் மற்றும் சரக்குந்துகள் மூலம் போக்குவரத்து நடைபெறுகிறது.[1]இந்த வழித்தடத்தின் நோக்கம் மும்பை துறைமுகம், பந்தர் அப்பாஸ் துறைமுகம் மற்றும் தெகுரான், பந்தர் அன்சைல், பக்கூ, அஸ்டராகான், மாஸ்கோ இடையே வணிகச் சரக்குப் போக்குவரத்தை மேம்படுத்துவதே ஆகும். [2]
வழித்தடத்தின் நோக்கம்
[தொகு]முன்னர் இந்தியாவிற்கும், உருசியாவிற்கும் இடையே சுயஸ் கால்வாய் வழியாக வணிகப் போக்குவர்த்து நடைபெற்றது. இப்புதிய வழித்தடத்தினால் பயண நேரம் மற்றும் எரிபொருள் செலவு வெகுவாக குறைகிறது. இவ்வழித்தடத்தில் அரபுக் கடல், பாரசீக வளைகுடா மற்றும் காஸ்பியன் கடல்கள் வழியாக கப்பல் போக்குவரத்தும், நிலப்பகுதிகளில் இரயில்வே மற்றும் நெடுஞ்சாலைகள் பயன்படுத்தப்படவுள்ளது.
பன்னாட்டு வடக்கு-தெற்கு போக்குவரத்து வழித்தடத்தில் மும்பை-மாஸ்கோ இடையே, பந்தர் அப்பாஸ், பக்கூ வழியாக முதல் சோதனை ஓட்டம் 2014ல் நடைபெற்றது. இரண்டாவது சோதனை ஓட்டம் மும்பை-அஸ்டராகான் இடையே, பந்தர் அப்பாஸ், தெகுரான் மற்றும் பந்தர் அஞ்சலி வழியாக நடைபெற்றது. [3][4] இச்சோதனை ஓட்டங்கள் மூலம் போக்குவரத்துச் செலவு 15 டன்னுக்கு 2,500 அமெரிக்க டாலர் குறைவதாக மதிப்பிடப்பட்டது.[4]
இவ்வழித்தடத் திட்டத்திற்கு 16 மே 2002 அன்று உருசியா, ஈரான் மற்றும் இந்தியா 16 மே 2002 அன்று ஒப்பந்தம் செய்து கொண்டது.[5]
பன்னாட்டு வடக்கு-தெற்கு போக்குவரத்து வழித்தடத்தை வளைகுடா நாடுகள் மற்றும் நடு ஆசியா நாடுகளிடையே நடைமுறைப்படுத்த அசுகாபாத் ஒப்பந்ததம் ஏற்பட்டது.. இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நாடுகள் உருசியா, இந்தியா (2018), இரான் (2011), ஓமன் (2018), துருக்மெனிஸ்தான் (2011), உஸ்பெகிஸ்தான் (2011), கசக்ஸ்தான் (2015). இவ்வழித்தடம் இந்தியா, பாரசீக வளைகுடா வழியாக நடு ஆசியா நாடுகள் மற்றும் ஐரோப்பா, குறிப்பாக உருசியா இடையே சரக்குப் போக்குவரத்து நடைபெறும்.[6]
இவ்வழித்தடத்தில் முதன் முறையாக உருசியாவின் புனித பீட்டர்ஸ்பர்க் நகரத்திலிருந்து, ஈரானின் பந்தர் அப்பாஸ் துறைமுகம் வழியாக இந்தியாவின் மும்பை துறைமுகத்திற்கு சூன், 2024 இறுதியில் நிலக்கரி கொண்டுவரப்பட்டது.[7]
வழித்தடத்தின் உறுப்பு நாடுகள்
[தொகு]- 'உறுப்பினர்கள்' — இந்தியா, ஈரான், உருசியா, துருக்கி, அசர்பைஜான், கசக்கஸ்தான், ஆர்மீனியா, பெலருஸ் , தஜிகிஸ்தான் , கிர்கிசுத்தான் , ஓமான் , உக்ரைன், சிரியா.
- பார்வையாளர்கள் — பல்கேரியா.[8]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Despite U.S. opposition, Iran to be transport hub for North-South Corridor". The Hindu. 31 May 2015. http://www.thehindu.com/news/national/despite-us-opposition-iran-to-be-transport-hub-for-northsouth-corridor/article3473943.ece.
- ↑ "Transport Corridor offers many opportunities for Indo-Russian trade". Russia & India Report. 29 November 2012 இம் மூலத்தில் இருந்து 23 September 2020 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200923102104/https://www.rbth.com/articles/2012/11/29/north-south_transport_corridor_offers_many_opportunities_for_indo-ru_19421.
- ↑ "Dry Run Study of INSTC Trade Route". Business Standard. 20 March 2015. http://www.business-standard.com/article/government-press-release/dry-run-study-of-instc-trade-route-115032000589_1.html.
- ↑ 4.0 4.1 "Iran deal spells good tidings for India". The Hindu. 10 April 2015. http://www.thehindu.com/opinion/lead/lead-article-iran-deal-spells-good-tidings-for-india/article7085906.ece.
- ↑ Tembarai Krishnamachari, Rajesh. "Entente Tri-parti : Triangular Alliances Involving India", South Asia Analysis Group, Paper 829, Nov 2003.
- ↑ "Ashgabat Agreement". The Hans India. 2016-03-24. பார்க்கப்பட்ட நாள் 1 November 2018.
- ↑ First-Ever: Russian Coal To Reach India In Train Via International North-South Transport Corridor
- ↑ "About International North South Transport Corridor". International North South Transport Corridor இம் மூலத்தில் இருந்து 1 August 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150801192143/http://www.instc-org.ir/Pages/Home_Page.aspx.
வெளி இணைப்புகள்
[தொகு]- BBC Monitoring (April 2, 2009). "Russia wants to boost transport cooperation with Caspian states – minister".
- BBC Monitoring (December 9, 2008). "Russia may take part in Kazakh–Turkmen–Iran railway project".
- BBC Monitoring (November 5, 2006). "Iranian, Russian railway officials sign cooperation accord".
- BBC Monitoring (December 15, 2005). "Armenia to join North–South transport corridor".
- Contessi, Nicola P. (March 2, 2020). "The Great Railway Game. Eurasian Corridors on the North-South Axis". Reconnecting Asia.
- Feller, Gordon (April 21, 2003). "Trade route of the future? India, Iran and Russia are pushing a North–South Transportation Corridor to reach Northern Europe". The Journal of Commerce: p. 26.
- Thai Press Reports (October 27, 2009). "Iran/India: Iran, India Consult on North–South Corridor".
- Nitin Jain, Rising IAS Academy (October 27, 2009). "Connectivity between Central & South Asia: Vision to catalyze peace and warm relations by bridging trade relations".