பன்னாட்டுக் கதிரியல் காப்புக் கழகம்
பன்னாட்டுக் கதிரியல் காப்புக் கழகம் (International commision on radiation protection- ICRP ) என்பது அரசு சரா தனித்த வல்லுநர் கழகமாகும். இக்கழகம் 1928-ல் நிறுவப்பட்டது. இவ்வமைப்பு, தொடக்கத்தில் பன்னாட்டு எக்சு-ரே மற்றும் கதிர்வீச்சுப் பாதுகாப்புக் குழு (IXRPC) எனப் பெயரிடப்பட்டிருந்தது.[1] பின்னர் மேலும் சீரமைக்கப்பட்டு 1950 இல் இப்பெயரிடப்பட்டது. இலாப நோக்கற்ற இக்கழகத்தின் அறிவியல் செயலகம் தற்போது கனடாவின் ஒட்டாவாவில் செயற்பட்டுவருகிறது. இதன் முக்கிய பணி, பாதுகாப்பாக எந்த உச்சளவு கதிர் வீச்சிற்கு மக்கள் ஆட்படலாம் என்பதனைப் பரிந்துரைப்பதாகும். இக்கழகத்தின் உறுப்பினர்கள் அவர்களது மருத்துவ கதிரியல், உடல்நல இயற்பியல், பரம்பரை நோய் மற்றும் தொடர்புடைய துறை பங்களிப்பு சிறப்புக் கருதி தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். எந்த நாட்டைச் சார்ந்தவர் என்பதைவிட அவர்களின் துறைசார்ந்த அறிவுக்காகவே உறுப்பினராக ஏற்கப்படுகிறார்கள். இக்கழகத்தின் பரிந்துரைகள் கடந்த ஆண்டுகளில் எல்லா உறுப்பு நாடுகளாலும் ஏ���்றுக் கொள்ளப்பட்டுள்ளன.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Clarke, R.H.; and J. Valentin (2009). "The History of ICRP and the Evolution of its Policies". Annals of the ICRP. ICRP Publication 109 39 (1): pp. 75–110. doi:10.1016/j.icrp.2009.07.009. http://www.icrp.org/docs/The%20History%20of%20ICRP%20and%20the%20Evolution%20of%20its%20Policies.pdf. பார்த்த நாள்: 12 May 2012.