பனியோடை
பனியோடை (Ice stream) என அழைக்கப்படுவது, தன்னைச் சுற்றியுள்ள பனியை விட குறிப்பிடத்தக்க அளவில் வேகமாக நகரும் பனிவிரிப்பைக் கொண்ட இடங்களாகும். இவையும் ஒருவகை பனியாறுகளே[2].
பனியின் மொத்தக் கனவளவின் 10% பனியோடைகளேயாகும். இவையே பனிவிரிப்புகளை விட்டு நீங்கும் பனித் திணிவின் முக்கிய பகுதியைக் கொண்டிருப்பதுடன், 50 கி.மீ அகலம், 2 கி.மீ தடிப்பத்தை எட்டக் கூடியதாகவும், பல 100 கி.மீ க்கு பரவக்கூடியதாகவும் இருக்கின்றது. பனியோடையின் வேகமானது ஆண்டொன்றுக்கு 1000 மீட்டர் வரை இருக்கலாம். பனியோடைகளின் அடிப்பகுதியில் பொதுவாகக் காணப்படும் நீரானது உராய்வைக் குறைத்து, பனித்திணிவு இலகுவாக நகர உதவும். அத்துடன் பனியின் அடியில் காணப்படும் பாறைகளின் இயல்பும் பனியாற்றின் அசைவில் முக்கிய இடம் வகிக்கும். கடினமான பாறைகளைவிட, வடிவம் மாறக்கூடிய அடையல்களில் பனியாற்றின் வேகம் அதிகமாக இருக்கும்[3].
அன்டார்டிக்காவில் இவை மிகவும் குறிப்பிடத்தக்க இயல்புகளைக் கொண்டிருக்கின்றன. அங்கிருக்கும் பனிவிரிப்பில் இருந்து, பல பனியோடைகளாக பனித்திணிவானது கடலில் சென்று சேர்கின்றது. 2006 இல் எடுத்த கணக்கீட்டின்படி, பனியோடைகளினால், பனித்திணிவில் ஏற்படும் இழப்பு ஆண்டுக்கு 85 கிகா தொன்களாக உள்ளது[4]. அதேபோல் கிரீன்லாந்து பனிவிரிப்பில் இருந்தும், சில பனியோடைகள் ஏற்பட்டு கடலில் பனித்திணிவைக் கொண்டு சேர்க்கின்றன.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Bamber J.L., Vaughan D.G., Joughin I. (2000). "Widespread complex flow in the interior of the Antarctic Ice Sheet". Science 287 (5456): 1248–1250. doi:10.1126/science.287.5456.1248. பப்மெட்:10678828.
- ↑ National Snow and Ice Data Centre. "Types of Glacier". Archived from the original on 2010-04-17. பார்க்கப்பட்ட நாள் 2012-08-30.
- ↑ British Antarctic Survey. "Description of Ice Streams". Archived from the original on 2009-02-11. பார்க்கப்பட்ட நாள் 2009-01-26.
- ↑
எஆசு:10.1038/ngeo102
This citation will be automatically completed in the next few minutes. You can jump the queue or expand by hand