உள்ளடக்கத்துக்குச் செல்

பதினாறாம் நாள் போர் (குருச்சேத்திரப் போர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பதினாறாம் நாள் போர் பீஷ்மரின் பத்து நாட்கள் போர், துரோணரின் 5 நாட்கள் போர் என குருச்சேத்திரப் போரை நடத்திய பின் பதினாறாம் நாள் கர்ணன் கௌரவப்படைக்கு தலைமை ஏற்றான். பதினெட்டு நாட்கள் நடந்த குருச்சேத்திரப் போரில் பதினாறு, பதினேழு ஆகிய இருநாட்களும் கர்ணன் தலைமையில் நடந்த போரில் பதினாறாம் நாள் நடந்த போரை விவரிக்கிறது.இதனை வில்லிபுத்தூரார் கர்ண பருவம் என பதிவு செய்துள்ளார்.[1]

குந்தியின் குழப்பம்

[தொகு]

துர்வாச முனிவருக்கு குந்தி சிறு வயதில் செய்த பணிவிடைக்காக அவர் தந்த வரத்தால் அறியாத பருவத்தில் பிறந்த கர்ணனுக்கும், குந்தியின் திருமணத்திற்குப் பிறகு பிறந்த பாண்டவருக்கும் நடக்கும் போர். பதினைந்தாம் நாள் போர் முடியும் போது துரோணரின் மரணத்திற்குப் பின் கர்ணனை கௌரவப்படைக்கு தலைமைப் படைத்தலைவர் எனதுரியோதனன் அறிவித்த போது குந்தி மிகுந்த வேதனைப்பட்டாள்.கர்ணனை போரிலிருந்து விலகி இருக்கச் செய்ய வேண்டும்,அல்லது பாண்டவரோடு இணையச்செய்ய வேண்டும் எவ்வாறு இதை செய்வது என யோசனையில் ஆழ்ந்து போயிருந்தாள். கர்ணனிடம் இதைப்பற்றி கேட்காமலே இருப்பது என முடிவேடுத்தாள்,ஒருவேளை கேட்டு அதற்கு உடன்பட்டால் சகோதரர்களுக்குள் நாம் சமாதானம் செய்யலாம், பாண்டவர் ஏற்க வாய்ப்பு உள்ளது. பின்னாளில் கர்ணன் அம்மா என்னிடம் கேட்டால் தம்பிகளுக்காக நான் உடன்படமாட்டேனா எனக்கேட்டால் என்ன செய்வது என குழம்பிப்போய் இறுதியில் கர்ணனிடம் செல்வது என முடிவெடுத்தாள்.[2]

குந்தி பெற்ற வரம்

[தொகு]

குந்தி விடியும் முன்னமே கௌரவர் படை முகாமை அடைந்திருந்தாள்,கர்ணன் போருக்கு ஆயத்தப்பட்டுக் கொண்டிருப்பதைப் பார்த்தாள்,அவளுடைய மூத்த மகன் பிறந்த உடனேயே பிரிந்துவிட்டவன்,இதயத்தில் அன்பு நிறைந்திருக்க, தயக்கத்துடன், முதன்முதலாக மகனேஎன்று அழைத்தாள்.கர்ணன் திரும்பி பார்த்தான் குந்தியை அடையாளம் கண்டுகொண்டு "தேரோட்டி மகன் பாண்டவர்களின் தாயை வணங்குகிறேன்" என்றான். குந்தி தனது சிறுவயது தவறுகளைக் கூறி மன்னிப்புக் கேட்பதுபோல், கண்களில் கண்ணீர் துளிக்க "என்னை மன்னித்துவிடு" என்றாள். உண்மை தெரிந்த அவனும் தனது கேளிப் பேச்சுக்காக "மன்னியுங்கள்" என்றான். "உங்களுக்கு நான் என்ன செய்ய வேண்டும்,இப்போதுதான் பொழுது விடிந்திருக்கிறது,இந்த சமயத்தில் நான் எதைக்கேட்டாலும் கொடுத்துவிடுவேன்" என்றான்."இத்தனை காலத்திற்குப் பிறகு தன்னை மகனே என்று கூப்பிடுவதால் ஒரு வேளை வரம் கேட்கத்தான் வந்திருக்கிறீர்களோ? அது தானே உங்களுக்கு வேண்டும்? தர்மவானான தேரோட்டி மகனிடம் யாசகம் கேட்டு வந்தீர்கள் அப்படித்தானே"? ஆமாம் என்பதைப்போல் தலையை அசைத்து "சகோதரர்களுக்குள் சண்டையிடாமல் நீ கௌரவர்களை விட்டுவிட்டு வந்துவிடு பாண்டவர் குடும்பத்தில் உனக்கு உரிய இடத்தில் இருக்கலாம்.அமைதி திரும்பட்டும்" என்றாள்.

"யாருக்கு அமைதி அவர்களுக்கா? எனக்கா? நான் ஒருநாளும் துரியோதனன்|துரியோதன்னை விட்டு வரமாட்டேன்,அதைத் தவிர வேறு எதை வேண்டுமானாலும் கேளுங்கள்" என்றான் கர்ணன்."என் மகன்கள் யாரும் சாகக் கூடாது"."யாரைச்சொல்கிறீர்கள் திருமணத்திற்குப் பிறகு பிறந்தவர்களையா? அல்லது அதற்கு முன் பிறந்தவனையா?"-கர்ணன். "எல்லோருமே" என்று உரக்க சத்தமிட விரும்மினாள்.

பிறகு கர்ணனிடம் பாண்டவர்களை போரில் கொல்வதில்லை என வரம் கேட்டாள்,கர்ணன் புண்ணகைத்தான்,குந்தி உடல் கூனிப்போனாள்.ஆனால் கர்ணன் அருச்சுன்னைத் தவிர மற்றவரைக் கொல்வதில்லை என்றான்."உன்னிடமுள்ள பிரம்ம ஆயுதத்தை ஒருமுறைதான் உபயோகிக்க வேண்டும்" என இரு வரங்களை கிருட்டிணனின் தூண்டுகோலின் படி பெற்றுக்கொண்டு திரும்மினாள்.[2]

பாண்டவருடன் யுத்தம்

[தொகு]

வரத்தைப் பெற்றுக்கொண்ட குந்தி கர்ணனை வாழ்த்த நினைத்தாள்,ஆசைகளைக் கட்டுப்படுத்திக்கொண்டாள். பாண்டுவின் பிள்ளைகளுக்கு எதிராக எவ்வாறு வெற்றி வாழ்த்துச் சொல்லுவாள்.யாரும் கவனிக்காத சமயமாய் நலுவி போய்விட்டாள் குந்தி.துரியோதனன் வந்தான் கௌரவப்படை ஆரவாரம் செய்த சப்தத்திற்கு இடையே கர்ணனை படைத்தளபதி என அறிவித்தான். சல்லியன் கர்ணனுக்குத் தேரோட்டியாக நியமித்தான், கர்ணனை நோக்கி "உன் வாழ்நாள் முழுவதும் நீ தேரோட்டியின் மகன் என்று குறிப்பிட்டார்கள். இப்போது போர்களத்தில் நீ போர் வீரனாகப் போ, உனக்கு ஒரு மன்னன் தேரோட்டுவான்" என்றான்.

கிருட்டிணன் அருச்சுன்னின் தேரை தன்னை விட்டு ஒதுக்கியே ஓட்டிக்கொண்டிருந்ததை கவனித்தான், மற்ற பாண்டவர்களின் பக்கம் தனது கவனத்தை செலுத்தி முதலில் நகுலனையும், சகாதேவனையும் தோற்கடித்தான், பிறகு பீமனை கதையுத்தத்தில் வென்று இறுதியில் தருமரையும் தோற்கடித்தான்.அவர்கள் ஒவ்வொருவரையும் கொன்றிருக்க முடியும் ஆனால் ஒருவரையும் கொல்லவில்லை,குந்திக்கு கொடுத்த வரத்தால் அவர்களை உயிரோடு விட்டுவைத்தான்,தன்னிடம் தோற்ற பாண்டவர்களை கட்டித் தழுவிக்கொள்ள ஆசைப்பட்டான்,"நீங்கள் என் தம்பிகள், ஒரு தாயின் வயிற்றில் பிறந்தவர்கள்" என்று கூற ஆசைப்பட்டான், ஆனால் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டான். மாறாக "உங்கள் உயிரை உங்களுக்கு தானமாக வழங்கியிருக்கிறேன் போங்கள்" என்றான். கர்ணனைப் பார்த்த தருமர் யுத்தம் செய்யவே மனமின்றி சோர்ந்து போயிருந்தார். அவரை நகுலனும்,சகாதேவனும் தாங்கி தூக்கிச் சென்றனர்.இதை பார்த்த அருச்சுனன் கிருட்டிணனிடம்தன்னை தருமரிடம் அழைத்துச் செல்ல கூறினான். "இல்லை அவரைப்பற்றி கவலைப்படாதே நாம் கர்ணன் மீது கவனம் செலுத்த வேண்டும்" என்றார்.அருச்சுனன் பிடிவாதமாய் தருமரிடம் தேரை கொண்டு போகச்சொன்னான்.கிருட்டிணனும் அவ்வாற�� செய்தார்.[2]

சகோதர சண்டை

[தொகு]

அருச்சுன்னைக் கண்டதும் தருமர் மகிழ்ச்சி பொங்க "சூரியன் மறைவுக்கு முன் நீ உயிருடன் வந்துவிட்டாய், அப்படியானால் கர்ணன் இறந்துபோயிருப்பான்,எப்படி அந்த தேரோட்டியின் மகனைக் கொன்றாய்,அந்த துரியோதன்னின் கொடிய நண்பனை எப்படிக் கொன்றாய்". "இல்லை கர்ணன் இன்னமும் இறக்கவில்லை,இங்கே எல்லாம் சரியாக உள்ளதா? என பார்க்க வந்தேன்" என்றான் பார்த்தன்.தருமர் கொபங்கொண்டு "கோழைப்பயலே கர்ணனைக் கொல்லாமல் என்னைப் பார்க்கவா வந்தாய்?அங்கே பீமன் தனியாக சமாளித்துக் கொண்டிருக்க போலிக் கவலையுடன் வருகிறாயா? உன்னைவிட மகத்தான வில்வீரனான இறந்து இருப்பான், நீ கர்ணனைக் கண்டு அஞ்சுகிறாய், இத்தனைக்கும் உன்னிடம் காண்டீபம் உள்ளது,கிருட்டிணன் உனக்குத் தேரோட்டி,கர்ணனைக் கொல்லாமல் வந்து நிற்கிறாய் எனக்கு வெட்கமாக இருக்கிறது. உன் காண்டீபத்தை வேறு யாருக்காவது கொடு" என்றார். அருச்சுன்னுக்கு ரத்தம் கொதிக்க "என்னை எவ்வாறு இப்படி பேசலாம்" என்று கூறி வாளை எடுத்துக் கொண்டு தருமரை தாக்க முற்பட்டான்,நகுலனும்,சகாதேவனும் இடையே மறித்து தருமரை காத்து நின்றனர்.கிருட்டிணன் இருவரையும் பார்த்து "என்ன செய்கிறீர்கள் நல்ல புத்தியை போர் கொண்டு போய்விட்டதா?" என கடிந்து கொண்டார். "என் காண்டீபத்தை அவமதிப்பவரை கொல்வேன் என சபதம் செய்துள்ளேன்" என்றான்,"ஒருவனை கொல்வது இரண்டு வகையில் செய்யலாம்,ஒன்று உடலைக் காயப்படுத்தி,மற்றொன்று உணர்ச்சி பூர்வமாக அவமானப் படுத்துவதன் மூலமாக நீ ஏன் இரண்டாவது வகையை தேர்ந்தெடுக்கக் கூடாது" என்றார் கிருட்டிணன்.அருச்சுனன் தருமரை "பலவீனமானவன்,சூதாட்டத்தில் இராச்சியத்தையும்,மனைவியையும் தோற்றவன்" எனக் கூறி அவமானப் படுத்தினான்.மூத்தவனை இளையவன் அவமதித்தால் அவன் உயிர்வாழ தகுதியில்லாதவன்,எனவே "தற்கொலை செய்து கொல்ல வேண்டும் போல் தோன்றுகிறது" என்றான்.கிருட்டிணன் "தற்கொலை இரண்டுவகையாக உள்ளது,ஒன்று உடலளவில் தன்னைத்தானே தாக்கிக்கொள்வது,மற்றொன்று தன்னைத் தானே புகழ்ந்து கொள்வது,தற்புகழ்ச்சி தற்கொலைக்குச் சமம்" என்றார்.அருச்சுனன் தான் மிகப் பெரிய "வில்வித்தைக்காரன்",தன்னை "வெல்ல ஒருவருமில்லை" என்று தன்னைப் புகழ்ந்து கொண்டான். இவ்வாறு நடந்த சகோதர சண்டைக்கு இருவரும் வெட்கி தலை குனிந்தனர்.பின்னர் ஒருவரையொருவர் தழுவிக்கொண்டு "இந்த அசிங்கமான நிகழ்வை மறந்துவிடுவோம்" என கட்டுத் தழுவிக்கொண்டனர்.சூரியன் மேற்கே மறையத்தொடங்கினான்,அன்றையப் போர் முடிந்ததாக கிருட்டிணன் தனது சங்கை ஊதினார்.[2]

Porin irudhiyil ivan paandavargaludan sernthu prasanthai vanangikondey uyirai vidugiran

சான்றாவணம்

[தொகு]
  1. வில்லிபுத்தூரார் எழுதிய வில்லி பாரதம்
  2. 2.0 2.1 2.2 2.3 Jaya-An Illustrated Retelling of the MAHABHARATA-DEVDUTT PATTANAIK