உள்ளடக்கத்துக்குச் செல்

நெட்டி இசுட்டீவன்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நெட்டி இசுட்டீவன்சு
Nettie Stevens
பிறப்புநெட்டி மரியா இசுட்டீவன்சு
சூலை 7, 1861
கேவண்டிசு, வெர்மாண்டு, ஐக்கிய அமெரிக்கா
இறப்புமே 4, 1912(1912-05-04) (அகவை 50)
பால்டிமோர், மேரிலாந்து, ஐக்கிய அமெரிக்கா
துறைமரபணுவியல்
கல்விவெசுட்டுஃபோர்டு அகதெமி
Westford Academy
கல்வி கற்ற இடங்கள்வெசுட்டுஃபோர்டு மாநிலப் பல்கலைக்கழகம்
இசுட்டான்ஃபோர்டு பல்கலைக்கழகம்
பிரையன் மாவர் கல்லூரி
முனைவர் பட்ட 
மாணவர்கள்
ஆலிசு மிடில்டன் போரிங்கு
அறியப்படுவதுXY பால்வேறுபடு அமைப்பு
தாக்கம் 
செலுத்தியோர்
எட்மண்டு பீச்சர் வில்சன்
தாமசு கண்டு மோர்கன்

நெட்டி மரியா இசுட்டீவன்சு (Nettie Maria Stevens, சூலை 7, 1861 – மே 4, 1912) அமெரிக்காவைச் சேர்ந்த மரபணுவியல் முன்னோடி. 1905 ஆம் ஆண்டு இவரும் எட்மண்டு பீச்சர் வில்சன் (1856–1939) என்பவருந்தான் முதன்முதலாக தாங்கள் தனித்தனியாக[1]) ஆண்-பெண் வேறுபாட்டை நிறப்புரி (குரோமோசோம்) அடிப்படையில் நிறுவியவர்கள். இதுவே நிறப்புரியில் XY வேறுபாடுவழியாக பால்வேறுபாட்டை நிறுவிய முதலாய்வு[2][3]

தொடக்கநிலை வாழ்க்கை

[தொகு]

நெட்டி மரியா இசுட்டீவன்சு சூலை 7, 1861 இல் அமெரிக்காவில் உள்ள வெர்மாண்டு மாநிலத்தில் இருக்கும் கேவண்டிசு என்னும் ஊரில் பிறந்தார். இவருடைய பெற்றோர்கள் சூலியா இசுட்டீவன்சு, எஃபிரெயிம் இசுட்டீவன்சு. இவருடைய தாயார் இயற்கை எய்தியபிற்கு, இவருடைய தந்தையார் மறுமணம் செய்துகொண்டு மாசாச்சுசெட்சு மாநிலத்தில் உள்ள வெசுட்டுஃபோர்டு என்னும் இடத்துக்கு இடம்பெயர்ந்தனர். அங்கே இவர் 1880 இல் வெசுட்டுஃபோர்டு அகாதெமியில் பட்டம் பெற்றார்.

நெட்டி இசுட்டீவன்சு அங்கே பள்ளியில் ஆசிரியராகவும் நூலகராகவும் பணிபுரிந்தார். படிப்பிப்பதில் உடற்கூற்றியல், விலங்கியல் போன்றவையும் கணிதம், இலத்தீன்மொழி, ஆங்கிலமொழிப்பாடங்களும் இருந்தன. அருகே இருந்த மார்த்தா திராட்சைத்தோட்டத்தில் (வினியார்டு) 1890 இல் நிகழ்ந்த கோடைக்கால பயிற்சிப்பாடங்கள் கற்பதில் பங்குகொண்டமையால் விலங்கியலில் ஆர்வம் ஏற்பட்டிருக்கலாம் எனக் கருதுகின்றார்கள்[4]

கல்வி

[தொகு]

மூன்று பருவங்கள் பயிற்றுவித்தப்பின்னர் அவர் தன்னுடைய கல்வியை அப்பொழுது வெசுட்டுஃபோர்டில் நார்மல் பள்ளி என அறியப்பட்டு இன்று வெசுட்டுஃபோர்டு மாநிலப்பல்கலைக்கழகம் என அறியப்படும் நிறுவனத்தில் தொடர்ந்தார். நான்காண்டுக் கல்வியை இரண்டாண்டிலேயே நிறைவுசெய்தார். வகுப்பிலேயே அதிகமதிப்பெண்கள் பெற்று முதலாவதாகத் தேறினார்[2][5]

வகுப்பில் முதலாவதாகத் தேறியபின்னர் இசுட்டான்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் சேர்ந்து 1899 இல் இளங்கலைப் பட்டமும் 1900 இல் முதுகலைப்பட்டமும் பெற்றார். அதன்பின்னர் மேலும் தொடர்ந்து ஓராண்டு மேற்பட்டப்படிப்பில் இவர் பேராசிரியர் சென்கின்சு (Jenkins) அவர்களிடம் உடற்கூற்றியலில் பயிற்சி பெற்றார். பேராசிரியர் மெக்ஃபார்லாந்திடம் (McFarland) உயிரணு அல்லது செல்லியலில் பயிற்சிபெற்றார்[6] Stevens continued her studies in உயிரணுவியல் at Bryn Mawr, where she obtained her Ph.D. and was influenced by the work of the previous head of the biology department, Edmund Beecher Wilson, and by that of his successor, Thomas Hunt Morgan.[5].

பிரையன் மாவர் (Bryn Mawr) கல்லூரியில் முதலாண்டிலேயே உயிரியலில் மேற்படிப்பைப் பெற கல்வியுதவித்தொகை பெற்றார். அடுத்த ஆண்டு தலைவரின் ஐரோப்பிய சிறப்பாளராகத் தேர்வுபெற்று இடாய்ச்சுலாந்தில் வூர்ட்சுபெர்கு பல்கலைக்கழகத்தில் படிக்கச்சென்றார்[2]. அங்கே அவர் கடல்வாழ் உயிரினங்களைப் பற்றி ஃகெல்கோலாந்திலும் (Helgoland) நேப்பில்சு விலங்கியல் நிலையத்திலும் (Naples Zoological Station) படித்துவந்தார்.[6][7]. பிரையன் மாவர் கல்லூரியில் முனைவர் பட்டம் பெற்றபின்னர் வாசிங்கடன் கார்ணிகி கழகத்தில் 1904–1905 ஆண்டுகளில் ஆய்வு உதவித்தொகை பெற்றார். 1905 ஆம் ஆண்டு சிறந்த் ஆய்வுக்கட்டுரை எழுதிய பெண்ணுக்கான பரிசாக 1000 அமெரிக்க வெள்ளி பெற்றார். இன்னொரு ஆய்வான விந்துத்தோற்றவியல் ("Spermatogenesis") பற்றிய அவருடைய ஆய்வே நிறப்புரியில் ஆண்-பெண் வேற்றுமைகாணும் புகழ்மிக்கத் துறையில் நுழைவு ஏற்பட உதவியது.[2] இந்த நிறுவனத்தில்தான் நெட்டி இசுட்டீவன்சின் 1905 ஆண்டின் ஆய்வுத்தாள் வெளியிடப்பெற்றது[3].

இறப்பு

[தொகு]

தன் 50 ஆவது அகவையிலேயே, அதுவும் முனைவர்ப்பட்டம் பெற்ற 9 ஆண்டுகளிலேயே மார்பகப் புற்றுநோயால் மே மாதம் 4 ஆம் நாள் 1912 ஆம் ஆண்டு மேரிலாந்தில் உள்ள பால்ட்டிமோர் நகரத்தில் இயற்கை எய்தினார். குறுகிய காலத்தில் இவர் 40 ஆய்வுக்கட்டுரைகள் எழுதினார் என்பது குறிப்பிடத்தகுந்தது[8] Nettie Maria Stevens was buried in the Westfield, Massachusetts, cemetery alongside the graves of her father, Ephraim, and her sister, Emma.[6]

சிறப்பு நிகழ்வு

[தொகு]

நெட்டி இசுட்டீவன்சை கூகுள் தேடுபொறி முகப்பில் சூலை 7, 2016 இல் படமிட்டு சிறப்பு செய்தது

அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும்

[தொகு]
  1. Brush, Stephen G. (1978-01-01). "Nettie M. Stevens and the Discovery of Sex Determination by Chromosomes". Isis 69 (2): 163–172. http://www.jstor.org/stable/230427. 
  2. 2.0 2.1 2.2 2.3 MSU Authentication | Michigan State University. doi:10.1093/acref/97801996%20666.001.0001/acref-9780199766666-e-465. http://www.oxfordreference.com.proxy2.cl.msu.edu/view/10.1093/acref/97801996%20666.001.0001/acref-9780199766666-e-465. வார்ப்புரு:Huh[தொடர்பிழந்த இணைப்பு]
  3. 3.0 3.1 "Nettie Maria Stevens :: DNA from the Beginning". www.dnaftb.org. பார்க்கப்பட்ட நாள் 2016-07-07.
  4. Hagen, Joel. Nettie Stevens and the Problem of Sex Determination. Minneapolis: University of Minnesota Press. pp. 37–47.
  5. 5.0 5.1 "Nettie Maria Stevens (1861–1912)". The Marine Biological Laboratory. Archived from the original on March 31, 2013. பார்க்கப்பட்ட நாள் August 18, 2013.
  6. 6.0 6.1 6.2 "Nettie Maria Stevens – Turn-of-the-century Stanford alumna paved path for women in biology" (PDF). Stanford Historical Society. Archived from the original (PDF) on July 5, 2010. பார்க்கப்பட்ட நாள் August 18, 2013.
  7. Gilgenkrantz, Simone (October 15, 2008). "Nettie Maria Stevens (1861–1912)" (in French). Clérey-sur-Brénon, France: Médecine/Sciences. Archived from the original on August 17, 2013. பார்க்கப்பட்ட நாள் August 18, 2013.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  8. "Nettie Stevens: A Discoverer of Sex Chromosomes". Nature. Archived from the original on மார்ச் 14, 2016. பார்க்கப்பட்ட நாள் July 6, 2016. {{cite web}}: Check date values in: |archivedate= (help)

மேலும் படிக்க

[தொகு]

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=நெட்டி_இசுட்டீவன்சு&oldid=3802697" இலிருந்து மீள்விக்கப்பட்டது