உள்ளடக்கத்துக்குச் செல்

நில தயாக்கு மொழிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நில தயாக்கு மொழிகள்
Land Dayak Languages
Bidayuh
Bahasa-bahasa Dayak Darat
இனம் பிடாயூ
புவியியல்
பரம்பல்:
போர்னியோ சுமத்திரா
மொழி வகைப்பாடு: அவுஸ்திரேலிய
 மலாய-பொலினீசியம்
  வடக்கு போர்னியோ மொழிகள்
   நில தயாக்கு மொழிகள்
Land Dayak Languages
Bidayuh
துணைப்பிரிவு:
பிடா மொழி
ISO 639-2 639-5: Dayak

நில தயாக்கு மொழிகள் (மலாய்: Bahasa-bahasa Dayak Darat; ஆங்கிலம்: Land Dayak Languages; சீனம்: 兰德达雅克语) என்பது ஆஸ்திரோனீசிய மொழிகள் குடும்பத்தில் ஒரு மொழிக்குழு ஆகும்.

போர்னியோவில் நில தயாக்குகள் எனும் பிடாயூ மக்கள் வாழ்கிறார்கள். அந்த பிடாயூ மக்களாலும்; மற்றும் சில இனததவராலும் பேசப்படும் இந்த நில தயாக்கு மொழிகள் 10-க்கும் மேற்பட்ட மொழிகளின் குழுமம் என அறியப்படுகிறது. மேலும் இந்த மொழிகளைத் தென்மேற்கு சுமத்திராவின் ரெஜாங் மக்களும் பேசுகிறார்கள்.

பொது

[தொகு]

தயாக்கு எனும் சொல், புரூணை மலாய் மொழி - மெலனாவு மொழியில் இருந்து உருவானது என்று பொதுவாகக் கருதப்படுகிறது. தயாக்கு என்றால் "உள்நாட்டு மக்கள்" என்று பொருள்படும்.

தயாக்கு மக்கள் ஒரு மொழியை மட்டும் பேசுவது இல்லை. இவர்களின் பூர்வீக ம���ழிகள்; நில தயாக்கு மொழிகள், மலாய் மொழி, சபகான் மொழி மற்றும் பாரிட்டோ மொழிகள் போன்ற மலாயா-பாலினேசிய மொழிகளின் வெவ்வேறு துணைக் குழுக்களைச் சேர்ந்தவையாக உள்ளன.[1][2]

உள்ளூர் மொழிகள்

[தொகு]

தயாக்கு மக்களில் பெரும்பாலோர், அவர்களின் தாய்மொழிக்கும் கூடுதலாக, இருமொழி பேசுபவர்களாக உள்ளனர். அவர்கள் பிறந்த நாட்டைப் பொருத்து இந்தோனேசிய மொழி அல்லது மலாய் மொழிகளில் நன்றாகப் பேசக் கூடியவர்களாக உள்ளனர்.[3]

அத்துடன் போர்னியோவின் பல உள்ளூர் மொழிகள் வேறு எங்கும் பேசப்படவில்லை. போர்னியோ தீவில் சுமார் 170 உள்ளூர் மொழிகள் பேசப்படுகின்றன. அந்த உள்ளூர் மொழிகளில் சிலவற்றை சில நூறு பேர் மட்டுமே பேசுவதாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Tillotson (1994). Who invented the Dayaks? : historical case studies in art, material culture and ethnic identity from Borneo. Australian National University. doi:10.25911/5d70f0cb47d77. https://openresearch-repository.anu.edu.au/handle/1885/116158. பார்த்த நாள்: 13 May 2022. 
  2. "Dayak". Britanicca. Encyclopædia Britannica. பார்க்கப்பட்ட நாள் 13 May 2022.
  3. Avé, J. B. (1972). "Kalimantan Dyaks". In LeBar, Frank M. (ed.). Ethnic Groups of Insular Southeast Asia, Volume 1: Indonesia, Andaman Islands, and Madagascar. New Haven: Human Relations Area Files Press. pp. 185–187. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-87536-403-2.

நூல்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=நில_தயாக்கு_மொழிகள்&oldid=4090356" இலிருந்து மீள்விக்கப்பட்டது