உள்ளடக்கத்துக்குச் செல்

நாணற்குச்சி பவளப் பாம்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நாணற்குச்சி பவளப்பாம்பு
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
எலாப்பிடே
பேரினம்:
கல்லியோபிசு
இனம்:
க. மெலனுரசு
இருசொற் பெயரீடு
கல்லியோபிசு மெலனுரசு
(சா, 1802)[2]
வேறு பெயர்கள்
  • கொலுபர் மெலனுரசு
    சா, 1802
  • வைப்பரா திரிமாகுலட்டா
    தவுடின், 1803
  • எலாப்சு திரிமாகுலடசு
    — மெர்ரெம், 1820
  • எலாப்சு மெலனுரசு
    — ஜெர்டன், 1856
  • கல்லியோபிசு திரிமாகுலேடசு
    — குந்தர், 1859
  • கல்லியோபிசு மெலனுரசு
    — சுமித், 1943
  • கல்லியோபிசு மெலனுரசு
    — சுலோவின்சுகி, பவுண்டி & லாவ்சன், 2001[3][4]

நாணற்குச்சி பவளப் பாம்பு (Calliophis melanurus) என்பது இந்திய துணைக்கண்டத்தில் உள்ள நஞ்சுள்ள எலாப்பிட் பாம்பு [4][2] அகணிய உயிரி இனமாகும். [1][4] இதில் பெயரிடப்பட்ட துணை இனங்கள் உட்பட இரண்டு துணையினங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.[4] [2] இரவாடியான இப்பாம்பு பகலில் தரையின் அடியிலு மறைந்திருந்து, இரவில் வெளிவரும் என்பதால் இதன் பண்பு குறித்து அதிகம் அறியப்படவில்லை.

விளக்கம்

[தொகு]

இது நஞ்சுள்ள பாம்பு என்றாலும் தனிதரைக் கொல்லும் அளவுக்கு வீரிம் இல்லை. ஆனால் இது கடித்தால் இதன் நஞ்சு நரம்பைத் தாக்கும் தன்மைக் கொண்டது. இது கடித்த இடத்தில் வீக்கம், வலி, அரிப்பு போன்றவை உண்டாக்கூடும். இந்தப் பாம்பின் உடல் ஒரு அடியைவிட சற்று நீண்டும், கரிக்கோல் பருமனுக்குச் சற்று குறைவாக உருளையாகவும் இருக்கும். இதன் உடல் பருமனில் இருந்து வால் சற்றுச் சிறுத்தும், நுணி கூம்பியும் இருக்கும். இதன் உடலில் மென்மையான செதில்கள் இருக்கும். இதன் உடல் சாம்பல்-பழுப்பு நிறத்திலும், அடிவயிறு வெளிறிய இளஞ்சிவப்பு நிறத்திலும் இருக்கும். பிடரியில் உடல் நிறத்தில் இரு புள்ளிகளும் இருக்கும். தலைமுதல் கழுத்து வரை இலேசான கருப்பு நிறமும், அதேபோல வாலில் இலேசான கருப்பு நிறத்திலான இரு வளையங்கள் இருக்கும். இதற்கு மறுபுறமாக வாலின் அடிப்பகுதியில் கரிய நிறத்தையும் அதற்கிடையில் நீல நிறத்தையும் கொண்டிருக்கும். இப்பாம்பு தனக்கு அச்சுறுத்தல் நேறும்போது தன் வாலை உயர்த்தி, அதன் அடி நிறம் தெரியுமாறு நன்கு காட்டுகிறத��. இது எதிரிகளுக்கு அச்சமூட்டவும், திசை திருப்பவும் செய்யும் ஒரு உத்தியாகும்.[5]

புவியியல் எல்லை

[தொகு]

இது இந்தியா, வங்காளதேசம், இலங்கை ஆகிய நாடுகளில் காணப்படுகிறது.[4]

இதில் Calliophis melanurus sinhaleyus என்ற துணை இனம் இலங்கையில் காணப்படுகிறது [4].

குறிப்புகள்

[தொகு]
  1. 1.0 1.1 de Silva, A.; Ukuwela, K.; Kannishka, S. (2021). "Calliophis melanurus". IUCN Red List of Threatened Species 2021: e.T172698A1369132. doi:10.2305/IUCN.UK.2021-3.RLTS.T172698A1369132.en. https://www.iucnredlist.org/species/172698/1369132. பார்த்த நாள்: 30 October 2022. 
  2. 2.0 2.1 2.2 ITIS
  3. Boulenger GA (1896). Catalogue of the Snakes in the British Museum (Natural History). Vol. III., Containing the ... Viperidæ. London: Trustees of the British Museum (Natural History). (Taylor and Francis, printers). xiv + 727 pp. + Plates I.- XXV. (Callophis [sic] trimaculatus, p. 397).
  4. 4.0 4.1 4.2 4.3 4.4 4.5 Calliophis melanurus at the Reptarium.cz Reptile Database
  5. "நல்ல பாம்பு -21: அரிய பாம்புகள் இரண்டு". Hindu Tamil Thisai. பார்க்கப்பட்ட நாள் 2023-01-20.

வெளி இணைப்புகள்

[தொகு]