நவல்பராசி மேற்கு மாவட்டம்
நவல்பராசி மேற்கு மாவட்டம்
नवलपरासी (बर्दघाट सुस्ता पश्चिम) | |
---|---|
நேபாளத்தின் லும்பின் மாநிலத்தில் நவல்பராசி மேற்கு மாவட்டத்தின் அமைவிடம் (அடர் மஞ்சள் நிறத்தில்) | |
நவல்பராசி மேற்கு மாவட்டத்தின் பிரிவுகள் | |
ஆள்கூறுகள்: Lua error in package.lua at line 80: module 'Module:ISO 3166/data/NP' not found. | |
நாடு | நேபாளம் |
மாநிலம் | லும்பினி |
நிறுவிய ஆண்டு | 2015 |
தலைமையிடம் | இராமகிராமம் |
அரசு | |
• வகை | மாவட்ட ஒருங்கிணைப்பு குழு |
• நிர்வாகம் | நவல்பராசி மேற்கு மாவட்டம் ஒருங்கிணைப்பு குழு |
பரப்பளவு | |
• மொத்தம் | 634.88 km2 (245.13 sq mi) |
மக்கள்தொகை | |
• மொத்தம் | 3,21,058 |
• அடர்த்தி | 510/km2 (1,300/sq mi) |
நேர வலயம் | ஒசநே+05:45 (நேபாள சீர் நேரம்) |
இணையதளம் | dccnawalparasiwest |
நவல்பராசி மேற்கு மாவட்டம் (Nawalparasi (West of Bardaghat Susta), நேபாள நாட்டின் 77 மாவட்டங்களில் ஒன்றாகும். இது லும்பினி மாநிலத்தின் 12 மாவட்டங்களில் ஒன்றாகும். இதன் தலைமையிடம் இராமகிராமம் நகராட்சி ஆகும்.[1]
முன்னர் இந்த மாவட்டம் நவல்பராசி மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தது. 20 செப்டம்பர் 2015ம் ஆண்டில் நவல்பராசி மாவட்டத்தின் மேற்கு பகுதிகளைக் கொண்டு நவல்பராசி மேற்கு மாவட்டம் நிறுவப்பட்டது.
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]இம்மாவட்டத்தின் மொத்த பரப்பளவு 634.88 சதுர கிலோமீட்டர்கள் (245.13 sq mi) மற்றும் மக்கள் தொகை 3,21,058 ஆகும். போச்புரி மொழி 55.7%, [2] நேபாளி மொழி 26.8% மற்றும் தாரு மொழி, மைதிலி மொழி, குரூங் மொழிகள் பேசப்படுகிறது. இம்மாவட்ட மக்கள் தொகை இந்து சமயத்தவர்கள் 88.5%, இசுலாமியர்கள் 6.8%, பௌத்தர்கள் 3.4%, கிறித்தவர்கள் 0.8% மற்றும் பிறர் 0.3% ஆக உள்ளனர்.[3]இதன் சராசரி எழுத்தறிவு 66.6% ஆக உள்ளது. [4]
மாவட்ட நிர்வாகம்
[தொகு]இம்மாவட்டம் 7 நகர்புற நகராட்சிகள் மற்றும் கிராமப்புற நகராட்சிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.[5]அதில் 3 நகர்புற நகராட்சிகளாகவும்; 4 கிராமிய நகராட்சிகளாகவும் உள்ளது.[6]
நகர்புற நகராட்சிகள்
[தொகு]- பர்தாகாட் நகராட்சி
- இராமகிராமம் நகராட்சி
- சன்வால் நகராட்சி
கிராமிய நகராட்சிகள்
[தொகு]- சுஸ்தா கிராமைய நகராட்சி
- பல்கிநந்தன் கிராமிய நகராட்சி
- பிரதா��்பூர் கிராமிய நகராட்சி
- சராவல் கிராமிய நகராட்சி
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "पूर्वी नवलपरासीको नाम 'नवलपुर जिल्ला' र सदरमुकाम कावासोतीमा राख्ने निर्णय" [Decision to named Nawalpur of the East Nawalparasi and fix Headquarter at Kawasoti]. www.kantipurdaily.com (in நேபாளி). KMG. 22 September 2017. Archived from the original on 22 March 2018. பார்க்கப்பட்ட நாள் 22 March 2018.
- ↑ Gopal Thakur Lohar (2006-06-04). A Sociolinguistic Survey of the Bhojpuri Language in Nepal.
- ↑ NepalMap Religion [1]
- ↑ NepalMap Literacy [2]
- ↑ "CITY POPULATION– statistics, maps & charts". www.citypopulation.de. 8 October 2017. பார்க்கப்பட்ட நாள் 22 March 2018.
- ↑ "District Corrected Last for RAJAPATRA (page no. 261)" (PDF). www.mofald.gov.np. பார்க்கப்பட்ட நாள் 2 March 2018.