நடராசன் சந்திரசேகரன்
நடராசா சந்திரசேகரன் | |
---|---|
பிறப்பு | 1963 மோகனூர், நாமக்கல், தமிழ் நாடு, இந்தியா |
கல்வி | BSc.Applied Science.,MCA |
படித்த கல்வி நிறுவனங்கள் | கோவை தொழில்நுட்பக் கல்லூரி, தேசிய தொழில்நுட்பக் கழகம், திருச்சி |
பணி | டாட்டா குழுமத்தின் புதிய தலைவர் |
வாழ்க்கைத் துணை | லலிதா |
பிள்ளைகள் | பிரணவ் (மகன்) |
நடராசன் சந்திரசேகரன் (பிறப்பு: 2 யூன் 1963) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்திலுள்ள நாமக்கல் மாவட்டதிற்குட்பட்ட மோகனூரில் பிறந்தார். இவர் டாட்டா குழுமத்தின் புதிய தலைவராக சனவரி 12, 2017இல் தேர்ந்தெடுக்கப்பட்டார். [1] இவர் முன்பு டாட்டா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தின் செயல் தலைவராகச் செயல்பட்டார்.[2] இவரது தந்தை எசு. நடராசன், தாய் மீனாட்சி [3]. இவரின் நடு அண்ணன் கணபதி சுப்பிரமணியம் டாட்டா கன்சல்டன்சி சர்வீசில் தலைமை செயல் அதிகாரியாக அறிவிக்கப்பட்டுள்ளார். மூத்த அண்ணன் சீனிவாசன் முருகப்பா குழுமத்தில் நிதித்துறை இயக்குநராக உள்ளார்.[4] கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் இளங்கலைப் பட்டத்தை பெற்றார் (பொறியியல் அல்ல). இவர் திருச்சி மண்டல பொறியியல் கல்லூரியில் கணினிப் பிரிவில் முதுகலையில் பட்டம் பெற்று உடனே 1987 ஆம் ஆண்டு டாட்டா கன்சல்டன்சி சர்வீசசு நிறுவனத்தில் சேர்ந்தார்[5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ TCS' Chandrasekaran named Tata Sons Chairman
- ↑ Lee, K.P. (29 September 2008). "TCS: Eyeing Strategic Acquisitions". தி வால் ஸ்டீர்ட் ஜர்னல். http://online.wsj.com/article/SB125420515330748579.html. பார்த்த நாள்: 4 October 2009.
- ↑ "டாடா சன்ஸ் குழுமத்தின் தலைவர் சொந்த கிராம கோவிலில் வழிபாடு". தினமலர். பார்க்கப்பட்ட நாள் சனவரி 16, 2017.
- ↑ "Three brothers from TN dominate corporate India: In top positions at Tata, TCS, Murugappa". திநியூசுமினிட். பார்க்கப்பட்ட நாள் சனவரி 13, 2017.
- ↑ "N Chandrasekaran Appointed Additional Director On Tata Steel Board". என்டிடிவி. பார்க்கப்பட்ட நாள் சனவரி 13, 2017.