உள்ளடக்கத்துக்குச் செல்

நஞ்சுக்கொடி தகர்வு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நஞ்சுக்கொடி தகர்வு
Placental abruption
ஒத்தசொற்கள்சூல்வித்தகச் சீர்குலைவு
நஞ்சுக்கொடி சீர்குலைவினால் தோன்றும் உள் மற்றும் வெளிப்புற இரத்தப்போக்கு ஓவியம்
சிறப்புமகப்பேறியல்
அறிகுறிகள்யோனி இரத்தப்போக்கு, அடி வயிற்று வலி, குறைவு இரத்த அழுத்தம்[1]
சிக்கல்கள்த��யின் உடல் முழுவதும் இரத்தம் உறைதல் , சிறுநீரகச் செயலிழப்பு[2]
Baby: low birthweight, குறைப்பிரசவம், செத்துப் பிறப்பு[2]
வழமையான தொடக்கம்24 முதல் 26 வார கர்ப்பம்[2]
காரணங்கள்வயிற்றுப்புண்[2]
சூழிடர் காரணிகள்புகைப்பிடித்தல், இளம்பேற்றுக் குளிர்காய்ச்சல், ��ுன் தகர்வு[2]
நோயறிதல்அறிகுறிகளின் அடிப்படையில், மீயொலி சோதனை[1]
ஒத்த நிலைமைகள்நஞ்சுக்கொடி கருப்பை வாயின் கீழ்பகுதியில் பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ உட்புகுந்து விடுதல், கருப்பை சுவர் முறிவு ஏற்படுதல்
சிகிச்சைஓய்வு, குழந்தை பிறப்பு[1]
மருந்துஇயக்க ஊக்கிகள்[1]
நிகழும் வீதம்~0.7% கர்ப்பங்கள்[2]

நஞ்சுக்கொடி தகர்வு (Placental abruption) என்பது குழந்தை பிறப்பதற்கு முன்பே நஞ்சுக் கொடி தாயின் கருப்பையிலிருந்து பிரிந்து விடும் நிலையை குறிக்கிறது. இந்நிலையை சூல்வித்தகச் சீர்குலைவு என்ற பெயராலும் அழைப்பர்[2]. பொதுவாகப் பெண்களின் கர்ப்ப காலத்தில் கிட்டத்தட்ட 25 வாரங்களில் இச்சீர்குலைவு நிகழ்கிறது.[2]. யோனியில் இரத்தப்போக்கு, அடி வயிற்றில் வலி மற்றும் ஆபத்தான குறைந்த இரத்த அழுத்தம் போன்றவை இந்த நோயின் அறிகுறிகளாகக் கருதப்படுகின்றன[1]. இதனால் குழந்தையை சுமக்கும் தாயின் உடலில் இரத்தக்குழாய்களில் உறைந்துவிடுதல் மற்றும் சிறுநீரக செயலிழப்பு முதலியன உண்டாகும்.[2]. தாயின் வயிற்றிலிருக்கும் குழந்தைக்கும் இதனால் சிக்கல்கள் தோன்றுகின்றன. கரு வளர்ச்சியில் பிரச்சனை, குறைந்த எடை கொண்ட குழந்தையாகப் பிறத்தல், குறைப்பிரசவம் மற்றும் செத்துப் பிறப்பு போன்றவை இச்சிக்கல்களில் அடங்கும்.[2][3].

நஞ்சுக்கொடி சீர்குலைவுக்கான காரணம் முற்றிலும் தெளிவாகத் தெரியவில்லை[2]. புகைபிடித்தல், முன்சூல் வலிப்ப,,முன் சீர்குலைவு, கர்ப்ப காலத்தில் ஏற்படும் அதிர்ச்சி, உணர்ச்சி இழக்கச் செய்யும் கோகோயின் போன்ற மருந்து வகைப்பயன்பாடு மற்றும் முந்தைய அறுவைசிகிச்சை பிரசவம் ஆகியவை நஞ்சுக்கொடி தகர்வுக்கான ஆபத்துக் காரணிகளாகும்[2][1]. மீயொலி பரிசோதனை மூலமாகவும் அறிகுறிகளை அடிப்படையாகக் கொண்டும் இந்நோயை கண்டறியமுடியும்[1]. கர்ப்பகால சிக்கல் என்று இந்நோயை வகைப்படுத்துகிறார்கள்[1]

நஞ்சுக்கொடி தகர்வு சிறிய அளவில் இருந்தால் படுக்கையில் ஓய்வு எடுக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. [1][4]. மேலும் குறிப்பிடத்தக்க அளவுக்கு அதிகமான இடையூறுகளுக்கும் பிரசவ காலத்திற்கு நெருக்கமாய் நிகழும் நிகழ்வுகளுக்கும் பிரசவமே பரிந்துரைக்கப்படுகிறது[1]. தோன்றும் அறிகுறிகள் எல்லாம் நிலையானதாக இருந்தால் யோனிவழி பிரசவத்திற்கு முயற்சி செய்யலாம். இல்லையென்றால் அறுவை சிகிச்சை முறை பிரசவம் சிறந்ததாகக் கருதப்பட்டுகிறது[1]. 36 வாரங்களுக்கு குறைவாக உள்ள கர்ப்பிணிகளுக்கு இந்நோய் கண்டால் அவர்களின் வயிற்றிலுள்ள குழந்தைகளுக்கு நுரையீரலின் வேகமான வளர்ச்சிக்கு இயக்க ஊக்கி மருந்துகள் வழங்கப்படுகின்றன[1]. சில நேரங்களில் இந்நிகழ்வுகளுக்கு இரத்தமாற்றச் சிகிச்சை அல்லது அவசரகால கருப்பை நீக்கம் போன்ற அவசரகால சிகிச்சைகள் தேவைப்படுகின்றன. [2]. நஞ்சுக்கொடி சீர்குலைவு நோயானது 200 கர்பிணிப்பெண்களில் ஒரு பெண்ணிற்கு உண்டாகிறது.[5]. இதனால் நஞ்சுக்கொடி கருப்பை வாயின் கீழ்பகுதியில் பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ உட்புகுந்து விடுதல், கருப்பை சுவர் முறிவு ஏற்படுதல் போன்ற சிக்கல்கள் தோன்றுகின்றன. கர்ப்பக் காலத்தில் யோனியில் இரத்தப்போக்கு அதிகமாக ஏற்படுவதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணமாகும்.[6]. பிறக்கும் குழந்தைகளில் சுமார் 15% சதவீத குழந்தைகளின் இறப்புகளுக்கு நஞ்சுக்கொடி சீர்குலைவு முக்கியமான காரணியாகும்.[2] நஞ்சுக்கொடி சீர்குலைவு பற்றிய தகவல்கள் சுமார் 1664 ஆம் ஆண்டிலேயே விவரிக்கப் பட்டுள்ளன.[7].

அறிகுறிகள்

[தொகு]

நஞ்சுக்கொடி தகர்வு நோயின் ஆரம்ப நிலைகளில் அறிகுறிகள் என ஏதும் இல்லாமல் இருக்கலாம்.[1] ஆனால் நோயின் அறிகுறிகள் திடீரென்று உருவாகும். திடீரென வயிற்று வலி, தொடர்ச்சியாகத் தோன்றும். யோனியில் அதிகமான இரத்தப்போக்கு இருக்கும். கருவின் கர்ப்பகால வயதிற்கு ஏற்றவாறு கருப்பை விரிவடையாமல் இருக்கும். கருவின் இயக்கம் குறைதலும் கருவின் இதயத் துடிப்பு குறைதலும் முக்கியமான அறிகுறிகளில் அடங்கும்.[5]

யோனியில் வெளியேறும் இரத்தப்போக்கு பிரகாசமான சிவப்பு நிறத்திலும் அடர்த்தியாகவும் இருக்கும்.[1].

நஞ்சுக்கொடியின் மையத்தில் தமனி இரத்தப்போக்கு காரணமாக ஏற்படும் நஞ்சுக்கொடி சீர்குலைவு கடுமையான அறிகுறிகளின் திடீர் வளர்ச்சிக்கு வழிவகுக்கிறது. கருவின் இதய துடிப்பில் அசாதாரணமான மாற்றங்கள், தாயின் உடலில் இரத்தக்கசிவு, உடலின் அனைத்து பகுதிகளிலும் இரத்தம் உறைதல் போன்ற உயிருக்கு ஆபத்தான நிலைமைகள் தோன்றுகின்றன. மேலும் நஞ்சுக்கொடியின் சுற்றளவில் அமைந்துள்ள சிரையில் இடையூறுகள் மெதுவாக உருவாகி இரத்தப்போக்கு சிறிய அளவில் இருக்கும். கருப்பையக வளர்ச்சி மட்டுப்படும். குழந்தைக்குத் தேவையான ஊட்டச்சத்தையும், பாதுகாப்பையும் வழங்குவதற்காக அதனைச் சுற்றியிருக்கும் பனிக்குடத் திரவம் குறைந்து குழந்தைக்கு சுவாசப் பிரச்சினைகள் உண்டாகும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 1.10 1.11 1.12 1.13 "Abruptio Placentae - Gynecology and Obstetrics". Merck Manuals Professional Edition (in கனடிய ஆங்கிலம்). October 2017. பார்க்கப்பட்ட நாள் 9 December 2017.
  2. 2.00 2.01 2.02 2.03 2.04 2.05 2.06 2.07 2.08 2.09 2.10 2.11 2.12 2.13 Tikkanen, M (February 2011). "Placental abruption: epidemiology, risk factors and consequences". Acta Obstetricia et Gynecologica Scandinavica 90 (2): 140–9. doi:10.1111/j.1600-0412.2010.01030.x. பப்மெட்:21241259. 
  3. Saxena, Richa (2014). Bedside Obstetrics & Gynecology (in ஆங்கிலம்). JP Medical Ltd. pp. 205–209. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9789351521037.
  4. Gibbs, Ronald S. (2008). Danforth's Obstetrics and Gynecology (in ஆங்கிலம்). Lippincott Williams & Wilkins. p. 385. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780781769372.
  5. 5.0 5.1 Sheffield, [edited by] F. Gary Cunningham, Kenneth J. Leveno, Steven L. Bloom, Catherine Y. Spong, Jodi S. Dashe, Barbara L. Hoffman, Brian M. Casey, Jeanne S. (2014). Williams obstetrics (24th ed.). பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0071798938. {{cite book}}: |first1= has generic name (help)CS1 maint: multiple names: authors list (link)
  6. Hofmeyr, GJ; Qureshi, Z (October 2016). "Preventing deaths due to haemorrhage". Best Practice & Research. Clinical Obstetrics & Gynaecology 36: 68–82. doi:10.1016/j.bpobgyn.2016.05.004. பப்மெட்:27450867. 
  7. The Journal of the Indiana State Medical Association (in ஆங்கிலம்). The Association. 1956. p. 1564.

புற இணைப்புகள்

[தொகு]
வகைப்பாடு
வெளி இணைப்புகள்
"https://ta.wikipedia.org/w/index.php?title=நஞ்சுக்கொடி_தகர்வு&oldid=3580723" இலிருந்து மீள்விக்கப்பட்டது