உள்ளடக்கத்துக்குச் செல்

தோலிசைக் கருவிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(தோல் கருவிகள் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

தோலிசைக் கருவி என்பது ஒரு வகையான இசைக் கருவி ஆகும். இது முதன்மையாக ஒரு நீட்டிக்கப்பட்ட சவ்வு மூலம் ஒலியை உருவாக்குகிறது. இசைக் கருவி வகைப்பாடு திட்டத்தில் உள்ள கருவிகளின் நான்கு முக்கியப் பிரிவுகளில் இதுவும் ஒன்றாகும். ஒரு திறப்பின் மீது நீட்டிக்கப்பட்ட தோலை அடிப்பதினால் ஒலி உருவாக்கப்படுகிறது. இந்த கருவிகள் வடிவம், கருவி செய்யப்படும் பொருள், தோல் வகை மற்றும் வாசிப்பு முறைகள் என பல வகைகளில் பிரிக்கப்படுகின்றன. இவை பெரும்பாலும் விலங்குகளின் தோல்களால் ஆன இசைக் கருவிகள் ஆகும்.

அமைப்பு

[தொகு]

ஒரு மரம் அல்லது உலோகம் போன்ற வலிமையான பொருளில் இருந்து உருவாக்கப்பட்ட ஒரு உருளை வட்ட வளையம் போல இருக்கும் இந்தக்கருவிகள். இது ஒரு புறம் திறந்திருக்கும் மற்றும் மறுபுறம் ஒரு மரத்தாலான அல்லது உலோக வளையத்தின் மீது ஒரு சவ்வு அல்லது விலங்கு தோலை நீட்டி இறுக்கமாக இணைக்கப்பட்டு இருக்கும்.[1]

வாசிப்பு முறைகள்

[தொகு]

இசைக்கருவி வாசிப்பு முறைகள் ஒலி எவ்வாறு உற்பத்தி செய்யப்படுகிறது என்பதன் அடிப்படையில் பிரிக்கிறது:[2]

  • ஒரு கை அல்லது பொருளால் தோலை அடிப்பதன் மூலம் (மிகவும் பொதுவான வடிவம்)
  • தோலுடன் இணைக்கப்பட்ட முடிச்சு சரத்தை இழுப்பதன் மூலம்
  • தோலை கை அல்லது பொருளால் தேய்ப்பதன் மூலம்
  • அதிர்வுறும் சவ்வு மூலம் ஒலிகளை மாற்றுவதன் மூலம்

வகைகள்

[தொகு]

இந்த கருவிகள் வடிவம், கருவி செய்யப்படும் பொருள், தோல் வகை மற்றும் வாசிப்பு முறைகள் என பல வகைகளில் பிரிக்கப்படுகின்றன.[3] இந்தக் கருவிகளை ஒலி உற்பத்தியின் நீளம் மற்றும் அகலத்தின் அடிப்படையில் சிறிய பிரிவுகளாகப் பிரிக்கலாம்:[4] மேலும் வடிவத்தை கொண்டு எட்டு விதங்களாக இந்த கருவிகளை பிரிக்கலாம்: உருளை, பீப்பாய், இரட்டைக் கூம்பு, மணிநேரக் கண்ணாடி, கூம்பு, கோப்பை, உருளை-கூம்பு மற்றும் குவளை.[5][6]

  • உருளைக் கருவிகள் நேராகப், பொதுவாக இரு தலைகளை கொண்டு இருக்கும்.
  • கூம்புக் கருவிகள் பக்கவாட்டில் சாய்வாகவும், பொதுவாக ஒரு தலை கொண்டதாகவும் இருக்கும்.
  • பீப்பாய்க் கருவிகள் பொதுவாக ஒரு தலை கொண்டு இருக்கும் மற்றும் கீழே திறந்திருக்கும். அவை நடுவில் வீங்கி காணப்படும்.
  • மணிநேரக் கண்ணாடிக்கு கருவிகள் மணிநேரக் கண்ணாடி போன்ற வடிவமாகவும் பொதுவாக இரு-தலைகளைக் கொண்டதாகவும் இருக்கும்.
  • கோப்பைக் கருவிகள் ஒரு தலை கொண்டு மற்றும் கோப்பை வடிவத்தில் இருக்கும், மேலும் அவை பொதுவாக கீழே திறந்திருக்கும்.
  • இரட்டைக் கூம்பு கருவிகள் ஜோடியாக இசைக்கப்படுகிறது. ஒரு பாத்திரம் அல்லது பானை உடல் போன்று, ஒரு தலை கொண்டு இருக்கும்.
  • உருளை-கூம்புக் கருவிகள் ஒரு நீளமான உருளையில் தலைப்பகுதியில் கூம்புக் குழி போல் இருக்கும்.
  • குவளைக் கருவிகள் ஒரு தலை கொண்டு மற்றும் குவளை வடிவத்தில் இருக்கும், மேலும் அவை பொதுவாக கீழே திறந்திருக்கும்.

தோலிசைக் கருவிகளில், இந்துக் கோயில் விழாக்களில் உடுக்கை, முரசு, மிருதங்கம், தவில் மற்றும் மத்தளம் ஆகியவை பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்றன.[7] பன்னெடுங்காலமாக இருந்து வரும் ஓர் தோலிசைக் கருவி பறை.[8][9] பிற தோலிசைக் கருவிகள்: செண்டை, இடக்கை, உறுமி மேளம், ஆகுளி, கொடுகொட்டி, கோடங்கி, டமாரம், நகரா, டிஜெம்பே, தமுக்கு, பேரிமத்தளம், தபேலா, டோலக் மற்றும் கஞ்சிரா.[10]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Jayaram, N (2022). From Indians in Trinidad to Indo-Trinidadians: The Making of a Girmitiya Diaspora. Springer Nature Singapore. p. 172. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-9-811-93367-7.
  2. "Glossary#Membranophone". Essentials of Music. Archived from the original on January 19, 2007. பார்க்கப்பட்ட நாள் 22 January 2007.
  3. Sachs, Curt (1940). The History of Musical Instruments, p.459. W. W. Nortan & Company, Inc. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-393-02068-1
  4. Catherine Schmidt-Jones. "Classifying Musical Instruments: Membranophones". Connexions. Archived from the original on July 23, 2011. பார்க்கப்பட்ட நாள் January 22, 2007.
  5. "Revision of the Hornbostel-Sachs Classification of Musical Instruments by the MIMO Consortium" (PDF). July 8, 2011. pp. 8–10.
  6. "534m Membranophones". SIL. Archived from the original on July 10, 2006. பார்க்கப்பட்ட நாள் January 4, 2007.
  7. The Indian Factories Journal. Vol. 99. Cornell University. 2002. p. 217. such as Melam, Nathaswaram, Thavil, Parai, Thaarai, Thappattai, Urimi Melam, Naiyandi Melam and Band etc.
  8. Joseph, Jose; Stanislaus, L. (2007). Communication as Mission. Indian Society for Promoting Christian Knowledge. p. 124. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-8-184-58006-8.
  9. Singh, K. S. (2001). People of India: Tamil Nadu. Anthropological Survey of India. tharai, thappattai and kaithalam. They perform folk dances.
  10. David Courtney (2006). "Indian Musical Instruments". Chandra and David's Indian Musical Instruments. பார்க்கப்பட்ட நாள் February 4, 2007.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தோலிசைக்_கருவிகள்&oldid=3893979" இலிருந்து மீள்விக்கப்பட்டது