உள்ளடக்கத்துக்குச் செல்

கோடங்கி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கோடங்கி (Kodangi) என்பது ஒரு தாள தோற் இசைக்கருவியாகும். இது தமிழர் நாட்டுப்புற இசையிலும், சமயர் சார்ந்த நிகழ்சிகளிலும் பயன்படுத்தப்படுகின்றது. இந்த கோடங்கி இசைக்கருவியை அடித்தபடி பாடுவதே கோடங்கிப் பாட்டு. இது பேச்ச மொழியில் கோடாங்கிப் பாட்டு என்று அழைக்கப்படுகிறது. இதை இசைப்பவரும் கோடாங்கி என்றே அழைக்கப்படுகிறார்.[1]

கோடங்கியை இசைத்தபடி குறிசோல்லுதல், நோய் தீர்த்தல்,[2] பேய் ஓட்டுதல் போன்றவை செய்யப்படுகின்றன. கோடங்கியை அடித்தபடி அருள் சோல்லும் கோடங்கியின் உடலில் தெய்வம் இறங்கி அவர் வழியாக அருள் வாக்கு சொல்வதாக நம்பிக்கை உள்ளது.[1]

அமைப்பு

[தொகு]

கோடங்கியானது இடையில் சிறுத்து இருபுறமும் வட்ட வடிவில் இருக்கும். இது வேங்கை, பலா போன்ற மரங்களாலும், வெண்கலத்தாலும் செய்யப்படுகின்றது. இரு பக்கங்களும் மாட்டுத் தோலால் இறுக்கித் தைக்கப்டுகின்றன. இது இருக்கமாக இருந்தால்தான் ஓசையும் பலமாக எழும். கோடங்கியை இடது கையால் ஏந்திப் பிடித்து, வலக்கை விரல்களால் இசைக்கப்படுகிறது.[1]

சாமக்கோடாங்கி

[தொகு]

இரவில் வீட்டு வாசலுக்கு வந்து குறி சொல்லும் குடுகுடுப்பைக்காரர்கள் கோடாங்கிகலில் ஒரு பிரிவாக சொல்லப்படுகிறது.[1] இந்த சாமக் கோடாங்கிகள் கையில் உள்ள குடுகுடுப்பை கருவி சிறியதாகவும் ஒற்றைக் கையில் ஆட்டி இசைப்பதாவும் இருக்கும்.

குறிப்புகள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 முருகு (2018). தி இந்து பொங்கல் மலர் 2018. சென்னை: இந்து தமிழ். p. 187.
  2. இரா.மோகன். "குறி சொன்ன கோடங்கிக்குக் கோயில் கட்டிய சேதுபதி மன்னர்! வரலாற்றைப் பாதுகாக்குமா அரசு?!". https://www.vikatan.com/. பார்க்கப்பட்ட நாள் 2021-09-15. {{cite web}}: External link in |website= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோடங்கி&oldid=3280480" இலிருந்து மீள்விக்கப்பட்டது