தெற்கு மாவட்டம் (இசுரேல்)
Appearance
தெற்கு மாவட்டம் | |
---|---|
- transcription(s) | |
• எபிரேயம் | מחוז הדרום |
• அரபு | لواء الجنوب |
நகரங்கள் | 12 |
உள்ளூர் சபைகள் | 11 |
பிராந்திய சபைகள் | 15 |
தலைநகர் | பீர்சேபா |
பரப்பளவு | |
• மொத்தம் | 14,185 km2 (5,477 sq mi) |
மக்கள்தொகை (2016) | |
• மொத்தம் | 12,44,200 |
ஐஎசுஓ 3166 குறியீடு | IL-D |
தெற்கு மாவட்டம் (எபிரேயம்: מחוז הדרום, Meḥoz HaDarom; அரபு மொழி: لواء الجنوب) இசுரேல் நாட்டின் ஆறு நிர்வாக மாவட்டங்களில் ஒன்று. இங்கு மக்கள் அடர்த்தி மிக குறைவு மேலும் இதுவே பரப்பளவில் நாட்டின் பெரிய மாவட்டம் ஆகும். இந்த மாவட்டம் பெரும்பாலும் நெகேவ் பாலைவன பகுதியையும், அரவா பள்ளத்தாக்கு பகுதியையும் உள்ளடக்கியது. இதன் தலைமையிடம் பீர்சேபா நகரம் ஆகும்.
இம்மாவட்டத்தின் வடக்கில் நெவாட்டிம் வான்படைத் தளம் உள்ளது.
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]தெற்கு மாவட்ட மக்கள்தொகை 1,086,240 ஆகும். மேலும் இதன் பரப்பளவு 14,185 km2 ஆகும்.[1] மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகையில் 79.66% யூதர்களும் 12.72% அரபு (இஸ்லாம்) மதத்தவர்களும், 7.62% மற்ற மத மக்களும் உள்ளனர். மாவட்டத்தின் தலைநகரம் பீர்சேபா ஆகும்.அஸ்தோது பெருநகரமாக உள்ளது.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Area of Districts, Sub-Districts, Natural Regions and Lakes. Israel Central Bureau of Statistics
- ↑ Current Plans for Developing the Negev: A Critical Perspective Adva Center