திருவாரூர் மும்மணிக்கோவை
Appearance
திருவாரூர் மும்மணிக்கோவை பதினோராம் திருமுறையில் இடம் பெற்றுள்ள நூல்களில் ஒன்று. 96 வகையான சிற்றிலக்கியங்களில் ஒன்றான மும்மணிக்கோவை வகையைச் சேர்ந்தது.
நூலின் காலம் 650-710. இது சேரமான் பெருமாள் நாயனார் பாடிய நூல்களில் ஒன்று. திருவாரூர் சிவபெருமான்மீது பாடப்பட்டது. வெண்பா, கட்டளைக்கலித்துறை, ஆசிரியம் ஆகிய மூவகைப்பாடல்கள் மாறி மாறி வரும்படி பாடப்பட்டுள்ள 30 பாடல்களைக் கொண்டது. பாடல்கள் அகத்திணைச் செய்திகளாக உள்ளன.
- ஒரு பாடல்
- பொழுது கழிந்தாலும் பூம்புனம் காத்தெள்கி
- எழுதும் கொடியிடையாய் ஏகான் – தொழுதமரர்
- முன்னஞ்சேர் மொய்கழலான் முக்கண்ணான் நான்மறையான்
- மன்னும்சேய் போலொருவன் வந்து. (பாடல் 12)
”எழுதும் கொடி போன்ற இடையையுடைய தோழியே! பொழுதோ போய்விட்டது. தினைப்புனம் காத்துக் களைத்துப்போயிருக்கிறேன். முக்கண்ணான், நான்மறையான் முருகவேள் போல என் கண்முன் நிற்கிறானே, என்செய்வேன்!” என்கிறாள் ஒரு தலைவி. இப்படி எல்லாப் பாடல்களும் அகத்திணைப் பாடல்களாக உள்ளன.
காலம் கணித்த கருவிநூல்
[தொகு]- மு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, பதினோராம் நூற்றாண்டு, (முதல் பதிப்பு 1971), திருத்தப்பட்ட பதிப்பு 2005