உள்ளடக்கத்துக்குச் செல்

திருநெல்வேலி வெள்ளைப் பிள்ளையார் கோவில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திருநெல்வேலி வெள்ளைப் பிள்ளையார் கோவில் இலங்கை யாழ்ப்பாணம் திருநெல்வேலி செங்குந்த வீதியில் அமைந்துள்ள பிள்ளையார் கோயில் ஆகும்.

வரலாறு

[தொகு]

கோவிலின் வரலாறு பற்றி பலரும் பல்வேறு விதமான கருத்துக்களை முன்வைக்கின்றனர். அதில் பலராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு வந்த கருத்து இப்பொழுது உள்ள மூல விக்கிரகமாகிய உருவ வடிவில் அமைந்த விநாயகனுக்கு அருகே வைத்து வழிபாடும் அருவுருவ வடிவமாகிய விநாயகனையே ஆரம்பத்தில் வைத்து வழிபட்டு வந்தனர் எனவும் நூற்றாண்டு காலத்துக்கு முன் இவ் ஆலய அயலைச் சேர்ந்த அடியவரொருவர் நல்லூர் இராஜதானிப் பகுதியில் தொழில் நிமித்தம் சென்ற போது வீட்டின் அருகே மூலமூர்த்தியாக உள்ள விநாயகர் விக்கிரகம் கிடக்கக் கண்டு அதுபற்றி அவ்வீட்டாரிடம் விசாரித்த போது தாம் நிலத்தில் கிணறு வெட்டிய பொழுது கிணற்றுக்குள் இருந்து கிடைத்தது எனவும் அதை எடுத்து வைத்து வழிபட்ட்தாகவும் கூறினார்கள். எனவே பெரியவர் அவ்விக்கிரகத்தை அவர்களிடம் இருந்து பெற்றுவந்து மூலஸ்தானத்தில் வைத்து வழிபட்டு வந்தார் எனக் கூறப்படுகிறது.

மறுபுறம் செம்மணிப்பகுதியை அண்டிய நாயன்மார் குளத்தை ஆழமாக்கும் போது கிடைத்ததாகவும் அதையே அவ்வீட்டார் வைத்திருக்க அதனைப் பெற்று வந்ததாகவும் கூறப்படுகின்றது.

இவ் விக்கிரக அமைப்பானது நல்லூர் இராசதானி கோவிலில் ஒன்றான சட்டநாதர் ஆலய விநாயகர் உருவினை ஒத்ததாக உள்ளதால் அக்காலத்துக்குரியது என உறுதியாக கூறப்படுகின்றது.

பெயர்க் காரணம்

[தொகு]

வெள்ளைப் பிள்ளையார் எனும் பெயர் காரணப் பெயராக இருக்கலாம் எனக் கருதப்படுகின்றது. வெள்ளத்துள் கிடந்தபடியால் அல்லது வெள்ளைக்கல்லினால் ஆனமையால் இப்பெயர் வந்திருக்கலாம் என கருதப்படுகின்றது.

அமைப்பு

[தொகு]

தற்போதைய ஆலயமானது சுந்தர விமானம்  உடைய  மூலஸ்தானம், அலங்கார மண்டபம், தாமரைத் தடாக வசந்த மண்டபம், சபா மண்டபங்கள் வைரவ மூர்த்தி ஆலயம், 25 அடி உயர மணிக் கோபுரம், 63 அடி நீள  சடையம்மா மடம், என்பன அமைக்கப்பட்டு அழகொளிரும் எழில் மிகு ஆலயமாக காட்சியளிக்கின்றது.

பூசைகள்

[தொகு]

இவ்  ஆலயத்தில் சுமங்கலி பூசை, நவராத்திரி பஜனை, பிள்ளையார்  கதைப் படிப்பு, கந்த, பெரியபுராணப் படிப்பு, திருவெம்பாவை, சித்திரைக்கதைப் படிப்பு என்பன சிறப்பாக நடைபெறுகின்றன

உசாத்துணை நூல்கள்

[தொகு]
  • சின்னத்தம்பி பத்மராசா, கார்த்திகேசு சண்முகதாசன், வெள்ளைப் பிள்ளையார் கும்பாபிஷேக மலர், 2013
  • திருநெல்வேலி கிழக்கு வெள்ளைப் பிள்ளையார் ஆலய மஹா கும்பாபிஷேக மலர் 2000