தா. சிவசிதம்பரம்
தா. சிவசிதம்பரம் T. Sivasithamparam | |
---|---|
பதவியில் 1960–1970 | |
இலங்கை நாடாளுமன்றம் வவுனியா தேர்தல் தொகுதி | |
முன்னையவர் | செ. சுந்தரலிங்கம், சுயேட்சை |
பின்னவர் | எக்ஸ். எம். செல்லத்தம்பு, இலங்கைத் தமிழரசுக் கட்சி |
பதவியில் 1977–1983 | |
முன்னையவர் | எக்ஸ். எம். செல்லத்தம்பு, இலங்கைத் தமிழரசுக் கட்சி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 26 மார்ச்சு 1926 |
இறப்பு | 9 நவம்பர் 1992 | (அகவை 66)
அரசியல் கட்சி | அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் |
பிற அரசியல் தொடர்புகள் | தமிழர் விடுதலைக் கூட்டணி |
முன்னாள் கல்லூரி | திருகோணமலை இந்துக் கல்லூரி |
Ethnicity | இலங்கைத் தமிழர் |
தாமோதரம்பிள்ளை சிவசிதம்பரம் (Thamotharampillai Sivasithamparam, மார்ச் 26, 1926 - நவம்பர் 9, 1992) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார்.
ஆரம்ப வாழ்க்கை
[தொகு]சிவசிதம்பரம் இலங்கையின் வடக்கே முல்லைத்தீவில் பிறந்தவர். இவரது தந்தை தாமோதரம்பிள்ளை முல்லைத்தீவு கிராம சேவையாளராகப் பணியாற்றியவர். திருகோணமலை இந்துக் கல்லூரியில் கல்வி கற்று பின்னர் கிராம அபிவிருத்தி அதிகாரியாகப் பணியாற்றினார்.
அரசியல் வாழ்க்கை
[தொகு]சிவசிதம்பரம் 1960 மார்ச்சு நாடாளுமன்றத் தேர்தலில் வவுனியா தேர்தல் தொகுதியில் சுயேட்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்றம் சென்றார்.[1] அதே ஆண்டு இடம்பெற்ற 1960 சூலை தேர்தலிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[2] பின்னர் அவர் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சியில் இணைந்து அக்கட்சியின் சார்பில் 1965 தேர்தலில் வவுனியாவில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[3] ஆனாலும் 1970 தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சி வேட்பாளர் எக்ஸ். எம். செல்லத்தம்புவிடம் 273 வாக்குகளால் தோற்றார்.[4]
1972 ஆம் ஆண்டில் தமிழ்க் காங்கிரஸ், இலங்கைத் தமிழரசுக் கட்சி இணைந்து தமிழர் விடுதலைக் கூட்டணி என்ற பெயரில் கூட்டமைப்பு ஒன்றை அமைத்தனர். கூட்டணியின் சார்பில் சிவசிதம்பரம் வவுனியா வேட்பாளராகத் தெரிவு செய்யப்பட்டு 1977 தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் நாடாளுமன்றம் சென்றார்.[5] இலங்கைத் தமிழ்ப் போராளிகளின் அழுத்தத்தாலும், தமிழ் ஈழத்துக்கு ஆதரவளிப்பதில்லை என நாடாளுமன்றத்தில் சத்தியப்பிரமாணம் எடுப்பதற்கான ஆறாம் திருத்தச் சட்டமூலத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், கருப்பு சூலை வன்முறைகளில் சிங்கள காடையர்களினால் 3,000 தமிழ் மக்கள் கொல்லப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், சிவசிதம்பரம் உட்பட அனைத்து தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர்களும் 1983 முதல் நாடாளுமன்றத்தை ஒன்றியொதுக்கல் செய்தார்கள். மூன்று மாதங்கள் நாடாளுமன்றத்துக்குச் சமூகமளிக்காத நிலையில், 1983 அக்டோபர் 22 இல் அவர்கள் அனைவரும் நாடாளுமன்ற இருக்கைகளை இழந்தார்கள்[6].
மறைவு
[தொகு]1983 இனக்கலவரத்தின் பின்னர் சிவசிதம்பரம் கனடாவுக்குக் குடிபெயர்ந்தார். அங்கு அவர் 1992 நவம்பர் 9 இல் இறந்தார்.
மேற்கோள்கள்
[தொகு]- ஆறுமுகம், எஸ். (1997). Dictionary of Biography of the Tamils of Ceylon. p. 205.
- ↑ 1960 03 19%20GENERAL%20ELECTION.PDF "Result of Parliamentary General Election 1960-03-19" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம்.
{{cite web}}
: Check|url=
value (help)[தொடர்பிழந்த இணைப்பு] - ↑ 1960 07 20%20GENERAL%20ELECTION.PDF "Result of Parliamentary General Election 1960-07-20" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம்.
{{cite web}}
: Check|url=
value (help)[தொடர்பிழந்த இணைப்பு] - ↑ 1965%20GENERAL%20ELECTION.PDF "Result of Parliamentary General Election 1965" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம்.
{{cite web}}
: Check|url=
value (help)[தொடர்பிழந்த இணைப்பு] - ↑ 1970%20GENERAL%20ELECTION.PDF "Result of Parliamentary General Election 1970" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம்.
{{cite web}}
: Check|url=
value (help)[தொடர்பிழந்த இணைப்பு] - ↑ "Result of Parliamentary General Election 1977" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2011-07-17. பார்க்கப்பட்ட நாள் 2012-12-08.
- ↑ Wickramasinghe, Wimal (18 சனவரி 2008). "Saga of crossovers, expulsions and resignations etc. Referendum for extention of Parliament". தி ஐலண்டு இம் மூலத்தில் இருந்து 2011-06-17 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110617063609/http://www.island.lk/2008/01/18/features11.html.
- CS1 errors: URL
- 1926 பிறப்புகள்
- 1992 இறப்புகள்
- இலங்கையின் 4வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்
- இலங்கையின் 5வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்
- இலங்கையின் 6வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்
- இலங்கையின் 8வது நாடாளுமன்ற உறுப்பினர்கள்
- இலங்கைத் தமிழ் அரசியல்வாதிகள்
- முல்லைத்தீவு மாவட்ட நபர்கள்
- இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் அரசியல்வாதிகள்
- தமிழர் விடுதலைக் கூட்டணி அரசியல்வாதிகள்
- இலங்கைத் தமிழ்க் காங்கிரசுக் கட்சி அரசியல்வாதிகள்
- இருபதாம் நூற்றாண்டு இலங்கை அரசியல்வாதிகள்