தாங்க் மாவட்டம்
தாங்க் மாவட்டம்
ضلع ٹانک | |
---|---|
மாவட்டம் | |
பாகிஸ்தான் நாட்டின் கைபர் பக்துன்வா மாகாணத்தில் தாங்க் மாவட்டத்தின் அமைவிடம் (சிவப்பு நிறத்தில்) | |
நாடு | பாக்கித்தான் |
மாகாணம் | கைபர் பக்துன்வா மாகாணம் |
தலைமையிடம் | தாங்க் நகரம் |
அரசு | |
• வகை | மாவட்ட நிர்வாகம் |
பரப்பளவு | |
• மொத்தம் | 2,900 km2 (1,100 sq mi) |
மக்கள்தொகை (2017)[1] | |
• மொத்தம் | 4,27,044 |
• அடர்த்தி | 150/km2 (380/sq mi) |
நேர வலயம் | ஒசநே+5 (பாகிஸ்தான் சீர் நேரம்) |
தாலுகா | 1 |
ஒன்றியக் குழுக்கள் | 16 |
இணையதளம் | tank |
தாங்க் மாவட்டம் (Tank District) (பஷ்தூ: ټانک ولسوالۍ, உருது: ضلع ٹانک, பாகிஸ்தான் நாட்டின் வடக்கில் உள்ள கைபர் பக்துன்வா மாகாணத்தின் 36 மாவட்டங்களில் ஒன்றாகும். இதன் நிர்வாகத் தலைமையிடம் தாங்க் நகரம் ஆகும். கைபர் பக்துன்வா மாகாணத்தின் தெற்கில் அமைந்த இம்மாவட்டம் 1 தாலுகாவும், 16 ஒன்றியக் குழுக்களும் கொண்டது.
அமைவிடம்
[தொகு]தாங்க் மாவட்டத்தின் வடகிழக்கில் லக்கி மார்வாத் மாவட்டம், கிழக்கிலும், தென்கிழக்கிலும் தேரா இஸ்மாயில் கான் மாவட்டம், மேற்கில் தெற்கு வசீரிஸ்தான் மாவட்டம் எல்லைகளாக உள்ளது.
தட்ப வெப்பம்
[தொகு]கோடக்காலத்தில் இதன் வெப்பம் 110–120 °F ஆக இருக்கும்.
மாவட்ட நிர்வாகம்
[தொகு]இம்மாவட்டம் ஒரு தாலுகாவும், 16 ஒன்றியக் குழுக்களையும் கொண்டது.[2] [3]கைபர் மாகாணச் சட்டமன்றத்திற்கு இம்மாவட்டம் ஒரு சட்டமன்றத் தொகுதியை கொண்டுள்ளது.
மக்கள் தொகை பரம்பல்
[தொகு]2017 பாகிஸ்தான் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி இம்மாவட்ட மக்கள் தொகை 4,27,044 ஆகும். அதில் ஆண்கள் 218,883 மற்றும் பெண்கள் 208,131 உள்ளனர். எழுத்தறிவு 40.98% கொண்டுள்ளது. இம்மாவட்டத்தில் மதச்சிறுபான்மையோர் 503 பேர் மட்டுமே உள்ளனர்.[1]இம்மாவட்ட மக்களில் பஷ்தூ மொழி 81.87%, சராய்கி மொழி 16.05, இண்டிக்கோ மொழி 0.75% பேசுகின்றனர்.
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "District Wise Results / Tables (Census - 2017)". www.pbscensus.gov.pk. Pakistan Bureau of Statistics.
- ↑ "LIST OF TEHSILS/TALUKAS WITH RESPECT TO THEIR DISTRICTS – Government of Pakistan". Archived from the original on 2010-03-05. பார்க்கப்பட்ட நாள் 2022-11-28.
- ↑ Constituencies and MPAs – Website of the Provincial Assembly of the NWFP பரணிடப்பட்டது 2008-03-27 at the வந்தவழி இயந்திரம்