உள்ளடக்கத்துக்குச் செல்

டோக் பெருமாட்டி கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லேடி டோக் கல்லூரி
வகைதன்னாட்சி, கலை அறிவியல், பெண்கள் கல்லூரி
உருவாக்கம்1948
முதல்வர்பியூலா ஜெயஸ்ரீ
அமைவிடம், ,
வளாகம்நாய்ஸ் வளாகம்
இணையதளம்[1]

லேடி டோக் கல்லூரி அல்லது டோக் பெருமாட்டி கல்லூரி (Lady Doak College ) என்பது தமிழ்நாட்டில் மதுரை மாநகரில் தொடங்கப்பட்ட முதல் பெண்கள் கல்லூரி ஆகும். 2022 ஆம் ஆண்டு வெளிவந்த தேசிய அளவிலான தரவரிசைப்பட்டியலில் இக்கல்லூரி 86 ஆவது இடத்தைப் பெற்றது.[1]

வரலாறு

[தொகு]

அமெரிக்க கிறித்துவ மிசனரியைச் சேர்ந்த கேத்தி வில்காக்ஸ் என்ற பெண்மணியால் 1948ஆம் ஆண்டு தல்லாகுளம் அருகே இக்கல்லூரி தொடங்கப்பட்டது. மதுரை மில் உரிமையாளர்கள் குடும்பத்தைச் சேர்ந்த சர். டோக் மற்றும் லேடி டோக் இருவரது உதவியையும் கேத்தி வில்காக்ஸ் அம்மையார் பெற்று இக்கல்லூரியை தொடங்கினார். கல்லூரி தொடங்கப் பெரும் உதவி செய்த டோக் பெருமாட்டி பெயராலேயே இக்கல்லூரி அழைக்கப்படுகிறது . 1978 ஆம் ஆண்டு தன்னாட்சி தகுதியினைப் பெற்றது.[2] தற்போது கேத்தி வில்காக்ஸ் கல்வி கூட்டமைப்பின் அங்கமாக இயங்கி வருகிறது.[3][4]

உள்கட்டமைப்பு

[தொகு]

2015 ஆம் ஆண்டு கணக்கின்படி இந்தக் கல்லூரியில் 5048 மாணவிகள், 255 ஆசிரியைகள், 170 ஆசிரியரல்லாத அலுவலர்களையும் கொண்டு செயல்பட்டுள்ளது. 26 இளநிலை படிப்புகள், 15 முதுநிலைப் படிப்புகள், 9 ஆய்வியல் நிறைஞர் படிப்புகள், 3 முதுகலை பட்டய படிப்புகள், 2 பட்டய படிப்புகள் மற்றும் 1 சான்றிதழ் படிப்புகளையும் கொண்டுள்ளது. இக்கல்லூரியின் ஜே. எக்ஸ். மில்லர் நூலகத்தில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான நூல்கள் உள்ளதாக கல்லூரி கையேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. அக்காலத்தில் பெண் கல்வியின் முன்னேற்றத்திற்க்கு லேடி டோக் கல்லூரி முதன்மையானது என்பதை உணர்ந்த வி. வி. சி. ஆர். முருகேச முதலி��ார் ஆறாயிரம் தங்கப் பொற்காசுகளை நன்கொடையாக இக்கல்லூரிக்கு வழங்கினார்.[5] 

துறைகள்

[தொகு]

இக்கல்லூரியில் உள்ள துறைகள்

  • தமிழ்
  • பிரஞ்சு
  • இந்தி
  • ஆங்கிலம்
  • பொருளியல்
  • சமூக அறிவியல்
  • வரலாறு
  • வணிகவியல்
  • வணிக நிர்வாகவியல்
  • கணினி அறிவியல்
  • கணிதம்
  • இயற்பியல்
  • வேதியியல்
  • தாவரவியல்
  • விலங்கியல்
  • உயிர்தொழில்நுட்பவியல்
  • உடற்கல்வி
  • ஆடை வடிவமைப்பு

தமிழ் உயராய்வு நடுவம்

[தொகு]

இக்கல்லூரியில் முதுகலை மற்றும் நிறைநிலைப் பிரிவுகளுடன் தமிழ்த்துறை 1957 இல் தொடங்கப்பட்டது.[6] 2010ஆம் ஆண்டில் முனைவர் பட்ட ஆய்வு மையம் உருவாக்கப்பட்டது. தமிழ்த்துறையாக இருந்த துறை 2019 பின்பு தமிழ் உயராய்வு நடுவமாகப் மாற்றப்பட்டது.

மேனாள் மாணவர்

[தொகு]
  • சாலினி இளந்திரையன், முதல்வர் - தமிழ்ப் பேராசிரியர், திருவேங்கடவன் கல்லூரி, புதுதில்லி.
  • முனைவர் மெர்ஸி புஷ்பலதா - முன்னாள் கல்லூரி முதல்வர்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "MoE, National Institute Ranking Framework (NIRF)". www.nirfindia.org. Retrieved 2023-11-06.
  2. "தன்விவரக் குறிப்பு". லேடி டோக் கல்லூரி. Retrieved 20 September 2024.
  3. தேவதாஸ், மனோகர். எனது மதுரை நினைவுகள். கண்ணதாசன் பதிப்பகம். {{cite book}}: |access-date= requires |url= (help)
  4. டோக்பெருமாட்டி கல்லூரி கையேடு 2015 - 2016. டோக்பெருமாட்டி கல்லூரி. {{cite book}}: |access-date= requires |url= (help)
  5. வித்தியா வாணி 2019 ஜூலை மலர். விவேகானந்தா வித்யாலயா பள்ளி, சென்னை. 2019.
  6. "தமிழ்த் துறை". தமிழ்த் துறை. Retrieved 20 September 2024.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=டோக்_பெருமாட்டி_கல்லூரி&oldid=4093022" இலிருந்து மீள்விக்கப்பட்டது