உள்ளடக்கத்துக்குச் செல்

ஜஸீரா ஏர்வேஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குவைதி ஏர்லைன்ஸின் ஜஸீரா ஏர்வேஸ் குவைத் சர்வதேச விமான நிலையத்தினை தனது தலைமையகமாகக் கொண்டுள்ளது. இந்த தலைமையகம் குவைத்தின், அல் ஃபர்வானியாஹ் கவெர்னோரட் பகுதியில் அமைந்துள்ளது.மத்திய கிழக்குப் பகுதியில் இது குறிப்பிடும்படியான விமானச் சேவையினை செயல்படுத்துகிறது. இதன் முக்கிய மையம் குவைத் சர்வதேச விமான நிலையம் ஆகும். குவைத்தின் இரண்டாவது தேசிய விமானச் சேவையாக ஜஸீரா ஏர்வேஸ் நிறுவப்பட்டதிலிருந்து, படிப்படியாக பலவகையான முன்னேற்றங்களைக் கண்டு வருகிறது. மத்திய கிழக்குப் பகுதியில் குறைந்த கட்டணத்துடன் செயல்படும் விமானச் சேவைகளில் இதுவும் ஒன்று. ஜூலை 2009 இன் படி, குவைத் விமான நிலையத்தினைப் பயன்படுத்தும் விமானங்கள் மற்றும் பயணிகளில் 25 சதவீதத்தினை தனது செயல்பாட்டில் கட்டுப்படுத்தி வருகின்றனர். குவைத் விமான நிலையத்தின் ஜ��லை 2009 ஆம் ஆண்டிற்கான அறிக்கையின்படி, ஜஸீரா ஏர்வேஸ் அதிகப்படியாக 1834 விமான ஏற்ற, இறக்கங்களை செய்துள்ளது. இது குவைத்தினைப் பொறுத்துவரையில் மிகப்பெரிய அளவிலான விமானச் செயல்பாடாகும்.

விமானக் குழு

[தொகு]

ஜஸீரா ஏர்வேஸ் பின்வரும் விமானங்களை தனது விமானக்குழுவில் கொண்டுள்ளது.

விமானம் மொத்தம் ஆர்டர்கள் பயணிகள் குறிப்புகள்
ஏர்பஸ்

ஏ320

8 2 12 147 159
0 165
மொத்தம் 8 2

ஏர்பஸ் நிறுவனத்தில் இருந்து இறுதியாக ஜனவரி 9, 2010 இல் ஏர்பஸ் ஏ320 ரக விமானத்தினை ஜஸீரா ஏர்வேஸ் பெற்றுள்ளது.

ஜஸீரா ஏர்வேஸ் விமானச் சேவை என்ற CFM56-5B இஞ்சின்களின் மூலம் செயல்படுத்தப்படுகிறது. ஜஸீரா விமானச்சேவை, விமானத்தினை பராமரிக்க லுஃப்தான்ஸா டெக்னிக் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. ஜஸீரா ஏர்வேஸின் அனைத்து விமானங்களும் 165 லெதர் இருக்கைகளையும், உள்விமான பொழுதுபோக்குகளையும் இரு வெவ்வேறு சிற்றறைகளையும் கொண்டுள்ளது. இந்த சிற்றறைகள் ஜஸீரா மற்றும் ஜஸீரா பிளஸ் என்று பிரிக்கப்பட்டுள்ளது. ஜஸீரா பிளஸ் சிற்றறை வழங்கப்படும்போது, ஆறு இருக்கைகள் ரத்து செய்யப்படும். இதற்குக் காரணம் 147 பொருளாதார இருக்கைகளுடன் 12 இருக்கைகள் அதிகமாக சேர்க்கப்படுவதே ஆகும்.[1][2]

ஏப்ரல் 2011 இல் ஜஸீரா ஏர்வேஸ் வாங்குவதாக இருந்த 40 ஏர்பஸ் ஏ320 ரக விமானங்களில், 25 விமானங்களை ரத்து செய்தது. இந்த 40 விமானங்கள் வாங்கும் திட்டம் 2007 ஆம் ஆண்டே வகுக்கப்பட்டது.

ஜஸீரா ஏர்வேஸ் உயர்தர வழித்தடங்கள்

[தொகு]

ஜஸீரா ஏர்வேஸ் துபாய் – குவைத், குவைத் – துபாய், கைரோ – குவைத் மற்றும் பெய்ரூட் – குவைத் ஆகிய வழித்தடங்களை உயர்தர வழித்தடங்களாகக் கொண்டுள்ளது. இந்த வழித்தடங்களுக்கு வாரத்திற்கு முறையே 30, 30, 23 மற்றும் 11 விமானங்களை ஜஸீரா ஏர்வேஸ் நிறுவனம் செயல்படுத்துகிறது. இவை தவிர குறிப்பிட்ட [3]

காரணங்களுக்காக செயல்படுத்தும் விமானங்களை குவைத் – இஸ்தான்புல் மற்றும் குவைத் – மாஷ்ஹாட் வழித்தடங்களில் இயக்குகிறது.[4]

இலக்குகள்

[தொகு]
நாடு நகரம் சர்வதேச

வான்வழிப் போக்குவரத்து அமைப்பு

சர்வதேச

பயணிகள் வான்வழிப் போக்குவரத்து ஒருங்கிணைப்பு

விமான

நிலையம்

பஹ்ரைன் பஹ்ரைன் BAH OBBI பஹ்ரைன்

சர்வதேச விமான நிலையம்

எகிப்து அலெக்சாண்ட்ரியா HBE HEBA போர்க்

எய் அரப் விமான நிலையம்

எகிப்து அஸியூட் ATZ HEAT அஸியூட்

விமான நிலையம்

எகிப்து கைரோ CAI HECA கைரோ

சர்வதேச விமான நிலையம்

எகிப்து லுக்ஸார் LXR HELX லுக்ஸார்

சர்வதேச விமான நிலையம்

எகிப்து ஷார்ம்

எய் ஷேக்

SSH HESH ஷார்ம்

எய் ஷேக் சர்வதேச விமான நிலையம்

எகிப்து சோஹாக் HMB HEMK சோஹாக்

சர்வதேச விமான நிலையம்

ஈரான் மாஷ்ஹாட் MHD OIMM மாஷ்ஹாட்

சர்வதேச விமான நிலையம்

ஈராக் நாஜாஃப் NJF ORNI அல்

நாஜாஃப் சர்வதேச விமான நிலையம்

ஜோர்டான் அம்மான் AMM OJAI க்யூன்

அலியா சர்வதேச விமான நிலையம்

குவைத் குவைத்

நகரம்

KWI OKBK குவைத்

சர்வதேச விமான நிலையம்

லெபனான் பெய்ரூட் BEY OLBA ரஃபிக்

ஹரிரி சர்வதேச விமான நிலையம்

சவுதி

அரேபியா

ஜெட்டாஹ் JED OEJN கிங்க்

அப்துல் அஸீஸ் சர்வதேச விமான நிலையம்

சவுதி

அரேபியா

ரியாத் RUH OERK கிங்க்

காலிட் சர்வதேச விமான நிலையம்

சிரியா அலேயப்பா ALP OSAP அலேயப்பா

சர்வதேச விமான நிலையம்

சிரியா டமாஸ்கஸ் DAM OSDI டமாஸ்கஸ்

சர்வதேச விமான நிலையம்

சிரியா டெயிர்

எஸ்-ஸார்

DEZ OSDZ டெயிர்

எஸ்-ஸார் விமான நிலையம்

துருக்கி இஸ்தான்புல் IST LTBA இஸ்தான்புல்

அடாடுர்க் விமான நிலையம்

யுனைடெட்

அரபு எமிரேட்ஸ்

துபாய் DXB OMDB துபாய்

சர்வதேச விமான நிலையம்

நிறுத்தப்பட்ட இலக்குகள்

[தொகு]

ஜஸீரா ஏர்வேஸ்[5] இதற்கு முன்பு செயல்பட்டு, தற்போது நிறுத்திய இலக்குகளின் பட்டியல் பின்வருமாறு:

ஆப்பிரிக்கா

[தொகு]

எகிப்து – ஹர்காடா, மார்சா அலாம்

சூடான் – கார்டௌம்

ஆசியா

[தொகு]

இந்தியா – டெல்லி, கொச்சி, மும்பை

ஈரான் – இஸ்ஃபாஹான், ஷிராஸ், டெஹ்ரான் மாலத்தீவுகள் – மேல் ஓமன் – மஸ்கட், சாலாலாஹ் பாகிஸ்தான் – லாகூர் கத்தார் – டோஹா சிரியா – அலேயப்போ, டாமாஸ்கஸ், டெயிர் எஸ்-ஸார் யுனைடெட் அரபு எமிரேட்ஸ் – அபுதாபி யெமன் – சனாஅ

ஐரோப்பா

[தொகு]

சிப்ரஸ் – லார்னாகா துருக்கி – அன்டால்யா

குறிப்புகள்

[தொகு]
  1. "Jazeera Airways Fleet Details and History". planespotters.net. பார்க்கப்பட்ட நாள் 10 October 2015.
  2. "Jazeera Airways Route Map". jazeeraairways.com. Archived from the original on 10 June 2015. பார்க்கப்பட்ட நாள் 10 October 2015.
  3. "Jazeera Airways Routes". cleartrip.com. Archived from the original on 20 பிப்ரவரி 2016. பார்க்கப்பட்ட நாள் 10 October 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. "Jazeera Airways cancels orders for 25 A320s". atwonline.com. 8 April 2011. பார்க்கப்பட்ட நாள் 10 October 2015.
  5. "Jazeera Airways targets cash-conscious corporate travel". businesstraveller.com. 8 May 2009. பார்க்கப்பட்ட நாள் 10 October 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜஸீரா_ஏர்வேஸ்&oldid=3632058" இலிருந்து மீள்விக்கப்பட்டது