உள்ளடக்கத்துக்குச் செல்

சோகி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சோகி
சோகிகளின் பல வகைகள்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
துணைவகுப்பு:
[Orthogastropoda]
வரிசை:
[Sorbeoconcha]
பெருங்குடும்பம்:
[Cypraeoidea]
குடும்பம்:
Cypraeidae
பேரினம்:
Cypraea

சோகி, சோவி அல்லது சோழி (Cowry) சிப்பிராய்டே குடும்ப பெருங்கடல் குடற்காலி மெல்லுடலிகளின் சிறியது முதல் பெரியது வரையிலான கடல் நத்தைகளின் பொதுப் பெயராகும். இது கௌரி எனவும் அழைக்கப்படுகிறது. சித்த மருத்துவத்தில் இது பலகறை என அழைக்கப்படுகிறது. பொதுவாக இவ்வகை நத்தைகளின் ஓட்டைக் குறிக்க மாத்திரம் சோகி எனும் சொல் புழக்கத்தில் உள்ளது. இவற்றின் ஓடு கிட்டத்தட்ட முட்டை வடிவில் அமைந்திருக்கும். ஆனாலும் அடிப்பாகம் தட்டையாக இருக்கும்.

பாவனை

[தொகு]
சோகி

சாதகம் கணிக்க, பல்லாங்குழி, தாயக் கட்டம் ஆகியவற்றிற்கு தொன்றுதொட்டுப் பயன்படுத்தப்பட்டுவரும் சோழிகளில் 190 இளங்களுக்கு மேல் உள்ளன. மான்சோழி, புலிச்சோழி, பல்சோழி, கரும்புள்ளிசோழி, ஒட்டகச்சோழி, ராவணன்சோழி எனப் பலவகையுன்டு.[1]

சோகி ஓடுகள் பல நூற்றாண்டுகளாக ஆப்பிரிக்காவில் நாணயமாகப் பயன்படுத்தப்பட்டது. 1500 ஆம் ஆண்டுகளுக்குப் பின் இது பொதுவாக வந்தது. மேற்குலக நாடுகள் அடிமை வர்த்��கத்திற்கு பெரியளவு மாலைத்தீவுகள் சோகியை ஆப்பிரிக்காவில் பயன்படுத்தின.[2] சித்த மருத்துவத்ததில் பற்பம் செய்ய பயன்படுத்தப்படுகிறது.

உசாத்துணை

[தொகு]
  1. அறிவுப் பேழை கவிஞா் நஞ்சுண்டன் முதற்பதிப்பு ஜுலை 1999 கலா பதிப்பபகம்
  2. Jan Hogendorn and Marion Johnson (1986). The Shell Money of the Slave Trade. கேம்பிரிட்ச்: கேம்பிறிட்ஜ் பல்கலைக்கழகப் பதிப்பகம். பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-521-54110-7. பார்க்கப்பட்ட நாள் 29 April 2015.

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Cowry money
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=சோகி&oldid=3847170" இலிருந்து மீள்விக்கப்பட்டது