உள்ளடக்கத்துக்குச் செல்

செப்-உன்-நிசா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
செப்-உன்-நிசா
முகலாயப் பேரரசின் ஷா
தனது உதவியாளர்களுடன் இளவரசி செப்-உன்-நிசா
பிறப்பு15 பிப்ரவரி 1638
தௌலதாபாத், முகலாயப் பேரரசு, தற்போதைய இந்தியா
இறப்பு26 மே 1702(1702-05-26) (அகவை 64)
தில்லி, முகலாயப் பேரரசு, தற்போதைய இந்தியா
புதைத்த இடம்
மரபுதைமூர் வம்சம்
தந்தைஔரங்கசீப்
தாய்தில்ராஸ் பானு பேகம்
மதம்சுன்னி இசுலாம்

செப்-உன்-நிசா (Zeb-un-Nissa;[1] 15 பிப்ரவரி 1638 - 26 மே 1702) முகலாய இளவரசியும், பேரரசர் ஔரங்கசீப்பிற்கும் அவரது மூத்த இராணியுமான தில்ராஸ் பானு பேகத்துக்கும் மூத்த குழந்தையாக பிறந்தார். இவர் ஒரு கவிஞரும் கூட. இவர் "மக்ஃபி" ("மறைக்கப்பட்ட ஒன்று") என்ற புனைப்பெயரில் கவிதைகளை எழுதினார்.

தில்லியின் சலிம்கர் கோட்டையில் தனது வாழ்க்கையின் கடைசி 20 ஆண்டுகளில் தனது தந்தையால் சிறையில் அடைக்கப்பட்ட இளவரசி செப்-அன்-நிசா ஒரு கவிஞராக நினைவுகூரப்படுகிறார். மேலும் இவரது எழுத்துக்கள் மரணத்திற்குப் பின் திவான்-இ-மக்ஃபி என்ற பெயரில் சேகரிக்கப்பட்டன. (மக்ஃபியின் முழுமையான (கவிதை) படைப்புகள் " ). [2]

ஆரம்ப ஆண்டுகளில்

[தொகு]

பிறப்பு

[தொகு]

செப்-உன்-நிசா ( "மணிமகுடம் / பெண்குலத்தின் அழகு"), இளவரசரும் முகி-உத்-தின்னின் (எதிர்கால பேரரசர் ஔரங்கசீப்) மூத்தக் குழந்தையாக 15 பிப்ரவரி 1638இல் தக்காணத்தின் தௌலதாபாத்தில் இவருடைய பெற்றோரின் திருமணம் முடிந்து சரியாக ஒன்பது மாதங்களுக்கு பிறகு பிறந்தார். இவரது தாயார், தில்ராஸ் பானு பேகம், ஔரங்கசீப்பின் முதல் மனைவியும், முக்கிய துணைவியாரும் ஆவார். மேலும் ஈரானின் ஆளும் வம்சமான (பெர்சியா) முக்கிய சபாவித்து வம்சத்தின் இளவரசியாக இருந்தார். [3] [4] செப்-உன்-நிசா ஔரங்கசீப்பின் விருப்பமான மகள், என்ற காரணமாக, தனது தந்தையை புண்படுத்தியவர்களை மன்னிக்கும்படி அவரை கட்டாயப்படுத்த்தினார்.

கல்வியும் சாதனைகளும்

[தொகு]
அபனிந்திரநாத் தாகூர் வரைந்த் செப்-உன்-நிசாவின் ஓவியம்.

ஔரங்கசீப் அவையின் பெண்களில் ஒருவரான அபீஸா மரியம் என்பவர் இவரது கல்விக்குப் பொறுப்பானார். இவர், மூன்று வருடங்களில் திருக்குர்ஆனை மனப்பாடம் செய்து தனது ஏழாவது வயதில் ஹபீஸ் ஆனர். இது இவரது தந்தையின் புத்திசாலித்தனத்திலிருந்தும் இலக்கிய ரசனை ஆகியவற்றிலிருந்தும் பெற்றதாக அறியப்படுகிறது. இந்த சந்தர்ப்பத்தை இவரது தந்தை ஒரு பெரிய விருந்துடனும், பொது விடுமுறையுடனும் கொண்டாடினார்.[3] இளவரசிக்கு அவரது தந்தையால் 30,000 தங்கக் காசுகள் பரிசாக வழங்கப்பட்டன.[5] தனது அன்புக்குரிய மகளுக்கு நன்கு கற்பித்ததற்காக இவரது ஆசிரியருக்கும் 30,000 தங்கக் காசுகளைக் கொடுத்தார்.[6]

இவர், அப்போதைய அறிவியலை முகமது சயீத் அஷ்ரப் மசந்தரானியிடம் கற்றார். அவர் ஒரு சிறந்த பாரசீக கவிஞரரும் கூட.[7] இவர் மெய்யியல் , கணிதம், வானியல், இலக்கியம் ஆகியவற்றைக் கற்றுக்கொண்டார்.[8] மேலும், பாரசீகம், அரபு , உருது ஆகியவற்றிலும் நிபுணத்துவம் பெற்றிருந்தார். வனப்பெழுத்திலும் இவருக்கு நல்ல புலமை இருந்தது.[9] இவருடைய நூலகம் மற்ற அனைத்து தனியார் சேகரிப்புகளையும் விஞ்சியிருந்தது. மேலும் இலக்கியப் படைப்புகளைத் தயாரிக்க அல்லது தனக்காக கையெழுத்துப் பிரதிகளை நகலெடுக்க தாராளமான சம்பளத்தில் பல அறிஞர்களைப் பயன்படுத்தினார்.[10] இவரது நூலகம் சட்டம், இலக்கியம், வரலாறு, இறையியல் போன்ற ஒவ்வொரு விஷயத்திலும் இலக்கியப் படைப்புகளைப் பெற்றிருந்தது. [11]

இவர், ஒரு கனிவான நபராகவும் எப்போதும் தேவைப்படும் மக்களுக்கு உதவுபவராகவும் இருந்தார். இவர் விதவைகளுக்கும், அனாதைகளுக்கும் உதவினார். இவர் மக்களுக்கு உதவி செய்தது மட்டுமல்லாமல் ஒவ்வொரு வருடமும் ஹஜ் யாத்திரிகர்களை மெக்காவுக்கும், மதீனாவிற்கும் அனுப்பினார்.[12] இவர் இசையிலும் ஆர்வம் காட்டினார். இவருடைய காலத்துப் பெண்களில் இவர் சிறந்த பாடகி என்று கூறப்பட்டது. [12]

மரபு

[தொகு]

இவரது கவிதை புத்தகம் 1929 இல் தில்லியிலும் 2001 இல் தெகுரானிலும் அச்சிடப்பட்டது. அதன் கையெழுத்துப் பிரதிகள் பிரான்சின் தேசிய நூலகம், பிரித்தானிய அருங்காட்சியகம், ஜெர்மனியில் உள்ள டூபிங்கன் பல்கலைக்கழக நூலகம், இந்தியாவில் மோட்டா நூலகம் ஆகியவற்றில் உள்ளன. இலாகூரில் இவர் அமைத்த சௌபுர்கி அல்லது நான்கு கோபுரங்கள் என்று அழைக்கப்பட்ட தோட்டம், சுவர்கள் மற்றும் வாயில்கள் மீதமுள்ள பகுதிகளால் இன்றும் நிலைத்துள்ளது.

இவரைப் பற்றிய எழுத்துகள்

[தொகு]
  • Princess Zeb-un-nissa (1920). Divan-i Makhf (Persian). Lahore Amrit Press.
  • Zeb-un-nissa; Tr. by Paul Whalley (1913). The Tears of Zebunnisa: Being Excerpts from 'The Divan-I Makhf'. W. Thacker & Co. Archived from the original on 2014-08-19. பார்க்கப்பட்ட நாள் 2021-09-16.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Also romanized as Zebunnisa, Zebunniso, Zebunnissa, Zebunisa, Zeb al-Nissa. زیب Zēb means "beauty" or "ornament" in Arabic and نساء Nissa means "women" in Arabic, Zebunnisa means "most beautiful of all women"
  2. Lal & Westbrook 1913, ப. 20.
  3. 3.0 3.1 Lal & Westbrook 1913.
  4. "Aurangzeb daughter's monument in a shambles". nation.com.pk. 16 July 2009. Archived from the original on 28 ஆகஸ்ட் 2012. பார்க்கப்பட்ட நாள் 16 செப்டம்பர் 2021. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
  5. Sir Jadunath Sarkar (1912). History of Aurangzib: Mainly based on Persian sources, Volume 1. M.C. Sarkar and Sons. p. 69.
  6. Women in India A Social and Cultural History.
  7. Women in Mughal India.
  8. "WISE: Muslim Women: Past and Present – Zebunnisa". Archived from the original on 2011-12-27. பார்க்கப்பட்ட நாள் 2021-09-16.
  9. Dictionary of Indo-Persian Literature.
  10. History of Aurangzib: Mainly based on Persian sources, Volume 1.Sir Jadunath Sarkar (1912). History of Aurangzib: Mainly based on Persian sources, Volume 1. M.C. Sarkar and Sons. p. 69.
  11. Nath 1990.
  12. 12.0 12.1 Nath 1990, ப. 163.

உசாத்துணை

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Zeb-un-Nisa
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=செப்-உன்-நிசா&oldid=3930218" இலிருந்து மீள்விக்கப்பட்டது