சென்னை மாநில சட்டமன்றத் தேர்தல், 1957
| ||||||||||||||||||||||||||||
சென்னை மாநில சட்டமன்றத்திற்கான 205 இடங்கள் | ||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| ||||||||||||||||||||||||||||
|
சென்னை மாநிலத்தின் இரண்டாவது சட்டமன்றத் தேர்தல் 1957 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடை பெற்றது. ஏற்கனவே ஆட்சியில் இருந்த இந்திய தேசிய காங்கிரசு கட்சி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. காமராஜர் இரண்டாவது முறையாக தமிழகத்தின் முதல்வரானார்.
தொகுதிகள்
[தொகு]ஒருங்கிணைந்த சென்னை மாநிலத்தின் சட்டமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை 375. சென்னை மாநிலத்திலிருந்து அக்டோபர் 1, 1953 இல் ஆந்திரா பிரிந்து தனி மாநிலமாக உருவானது. கன்னடம் பேசப்படும் பெல்லாரி மாவட்டம் மைசூர் மாநிலத்துடன் இணைந்தது. இதனால் சென்னை சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை 231 ஆகக் குறைந்தது. நவம்பர் 1 1956 இல் மாநில மறுசீரமைப்புச் சட்டத்தினால் மலபார் மாவட்டம் கேரள மாநிலத்துடன் இணைக்கப்பட்டதால், உறுப்பினர் எண்ணிக்கை 190 ஆகக் குறைந்தது. கேரளத்தின் தமிழ் பேசும் பகுதிகளான கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் செங்கோட்டை தாலுகா ஆகியவை சென்னை மாநிலத்தில் இணைந்தன. இதனால் உறுப்பினர் எண்ணிக்கை 205 ஆக உயர்ந்தது. இந்த 205 இடங்களுக்கே 1957 இல் தேர்தல் நடத்தப்பட்டது. 167 தொகுதிகளிலிருந்து இந்த 205 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.அப்போது இரட்டை உறுப்பினர் முறை வழக்கில் இருந்ததால் 38 தொகுதிகள் இரண்டு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் உரிமை பெற்றிருந்தன. இவற்றுள் 37 தாழ்த்தப்பட்டவருக்கும் (SC) 1 பழங்குடியினருக்கும் (ST) ஒதுக்கப்பட்டிருந்தன. இரட்டை உறுப்பினர் தொகுதிகள், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 332 ஆவது உட்பிரிவின்படி உருவாக்கப்பட்டன. உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் முறை மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், 1950 இல் விவரிக்கப் பட்டிருந்தது.[2][3][4] ஒரு லட்சத்திற்கு மிகுந்த வாக்காளர்களைக் கொண்ட தொகுதிகளுக்கே இரண்டு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.[5] இத்தொகுதிகளில் இரு வேட்பாளர் பட்டியல்கள் இருந்தன - பொதுப் பட்டியல் மற்றும் தனிப் பட்டியல். வாக்காளர்கள் இரு பட்டியல்களுக்கும் தனித்தனியே இருமுறை வாக்களிக்க வேண்டும். வெற்றி பெற்ற இரு வேட்பாளர்கள் பின்வருமாறு தேர்ந்தெடுக்கப் பட்டனர்.
- தனி உறுப்பினர் - தனிப் பட்டியலில் உள்ள SC/ST வேட்பாளர்களுள் அதிக வாக்குகள் பெற்றவர்
- பொது உறுப்பினர் - தனி உறுப்பினரைத் தவிர்த்த ஏனைய வேட்பாளர்களுள் அதிக வாக்குகள் பெற்றவர் (இவர் பொதுப் பட்டியலிலும் இருக்கலா���், தனிப் பட்டியலிலும் இருக்கலாம்)
இம்முறையினால் சில சிக்கல்கள் உண்டாகின. சில தொகுதிகளில் (எ.க கோவை -2 தொகுதி) இரு உறுப்பினர்களுமே தனிப் பட்டியலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டனர். இத்தகைய சிக்கல்களால் 1961 இல் இரட்டை உறுப்பினர் முறை நீக்கப்பட்டு தற்போதுள்ள தனித் தொகுதி முறை அமல்படுத்தப்பட்டது.[6]
கட்சிகள்
[தொகு]1946 ஆம் ஆண்டு முதல் சென்னை மாநிலத்தை ஆண்டு வந்த காங்கிரசு, காமராஜரின் தலைமையில் செயல்பட்டு வந்தது. அவரே முதல்வராகவும் இருந்தார். காமராஜர், பெரியார் ஈ வே. ராமசாமியின் திராவிடர் கழகத்தின் ஆதரவையும் பெற்றிருந்தார். முந்தைய தேர்தலைப் போலவே இம்முறையும் காங்கிரசில் உட்கட்சிப் பூசல் இருந்தது. 1954 இல் முதல்வர் பதவியை ராஜினாமா செய்திருந்த ராஜகோபாலாச்சாரி, தன் ஆதரவாளர்களுடன் காங்கிரசை விட்டு வெளியேறி காங்கிரசு சீர்திருத்தக் குழு என்ற புதிய கட்சியைத் தொடங்கினார் (சில ஆண்டுகளில் அதுவே சுதந்திரா கட்சியாக மாறியது). 1952 இல் ந.டந்த முந்தைய தேர்தலில் முக்கிய எதிர் கட்சியாக இருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முன்னிருந்த மக்கள் ஆதரவை இழந்து விட்டது. அதன் இடத்தை 1949 இல் தோன்றிய திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) பிடித்துக் கொண்டது. மேற்குறிப்பிட்ட கட்சிகளைத் தவிர முஸ்லிம் லீக், ஆச்சார்யா கிருபாளினியின் பிரஜா சோஷ்யலிஸ்ட் கட்சி, முத்துராமலிங்கத் தேவரின் ஃபார்வார்டு ப்ளாக் போன்ற கட்சிகளும் இந்த தேர்தலில் போட்டியிட்டன.[7][8]
அரசியல் நிலவரம்
[தொகு]பதினோரு ஆண்டுகள் தொடர்ந்து ஆட்சியில் இருந்த காங்கிரசு காமராஜரின் தலைமையில் பலம் பொருந்திய கட்சியாக மாறியிருந்தது. ஆந்திர மாநிலம் பிரிந்து போனதால் கம்யூனிஸ்டுகள் பலமிழந்திருந்தனர். பெரியாரின் ஆதரவால் மேலும் வலுவடைந்திருந்த காங்கிரசு, இந்தத் தேர்தலை பெரும் பலத்துடன் சந்தித்தது. 1952 தேர்தலில் நேரடியாகப் போட்டியிடாத தி, மு. க, 1956 இல் நடந்த திருச்சிப் பொதுக் குழு கூட்டத்தில் தேர்தலில் போட்டியிட முடிவு செய்தது. தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக இல்லாததால், தி. மு. க உறுப்பினர்கள் சுயேட்சைகளாகப் போட்டியிட்டனர். கா. ந. அண்ணாதுரை, க. அன்பழகன், மு. கருணாநிதி, என். வி. நடராஜன், சத்யவாணி முத்து உட்பட திமுக வினர் 117 சட்டமன்றத் தொகுதிகளிலும், 8 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் போட்டியிட்டனர். ராஜகோபாலாச்சாரியின் சீர்திருத்த காங்கிரசு 55 சட்டமன்றத் தொகுதிகளிலும், 12 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் போட்டியிட்டது. காமராஜரின் ஆட்சி காலத்தில் பல தமிழர்கள் உயர் பதவிகளில் நியமிக்கப்பட்டதால், திமுகவின் தமிழ் தேசியவாதம் சற்றே வலுவிழந்தது. எனவே திமுகவின் தேர்தல் அறிக்கையில் பொருளாதார பிரச்சனைகளுக்கும் இடமளிக்கப்பட்டது.[9][10][11]
முடிவுகள்
[தொகு]மார்ச் 31 இல் வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 47 சதவிகித வாக்குகள் பதிவாகின.[12]
காங்கிரசு | இடங்கள் | திமுக | இடங்கள் | மற்றவர்கள் | இடங்கள் |
---|---|---|---|---|---|
காங்கிரசு | 151 | திமுக | 13 | காங்கிரசு சீர்திருத்தக் குழு | 9 |
இந்திய கம்யூனிஸ்ட் | 4 | ||||
ஃபார்வார்டு ப்ளாக் | 3 | ||||
பிரஜா சோஷ்யலிஸ்ட் கட்சி | 2 | ||||
சோஷ்யலிஸ்ட் கட்சி | 1 | ||||
சுயேட்சைகள் | 22 | ||||
மொத்தம் (1957) | 151 | மொத்தம் (1957) | 13 | மொத்தம் (1957) | 41 |
மொத்தம் (1952) | 152 | மொத்தம் (1952) | n/a | மொத்தம் (1952) | n/a |
காங்கிரசு 45% வாக்குகள் பெற்றது. திமுக 14 சதவிகிதமும் சீர்திருத்த காங்கிரசு 8 சதவிகிதமும் பெற்றன.
ஆட்சி அமைப்பு
[தொகு]காங்கிரசு தனிப்பெரும்பான்மை பெற்று, காமராஜர் இரண்டாம் முறை முதல்வரானார். அவரது அமைச்சரவையில் (1 ஏப்ரல் 1957 - 1 மார்ச் 1962) இடம் பெற்றிருந்தவர்கள் [13]
அமைச்சர் | துறை |
---|---|
காமராஜர் | முதல்வர், திட்டப்பணி, மகளிர் மேம்பாடு |
எம். பக்தவத்சலம் | உள்துறை |
சி.சுப்பிரமணியம் | நிதி |
ரா. வெங்கட்ராமன் | தொழில் |
எம். ஏ. மாணிக்கவேல் நாயக்கர் | வருவாய் |
பி. கக்கன் | பொதுப் பணிகள் |
வி. இராமையா | மின்சாரம் |
லூர்தம்மாள் சைமன் | உள்ளாட்சி |
மேலும் பார்க்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Madras Legislative Assembly, 1952-1957, A Review" (PDF). assembly.tn.gov.in. Legislative Assembly Department Madras-2. March 1957. Archived from the original (PDF) on 3 November 2021.
- ↑ "1952 Election" (PDF). Archived from the original (PDF) on 2011-09-04. பார்க்கப்பட்ட நாள் 2010-06-19.
- ↑ "The Representation of People Act, 1950" (PDF). Archived from the original (PDF) on 2015-08-24. பார்க்கப்பட்ட நாள் 2010-06-19.
- ↑ "The State Legislature - Origin and Evolution". Archived from the original on 2010-04-13. பார்க்கப்பட்ட நாள் 2010-06-19.
- ↑ "Constituent Assembly of India Debates Vol IV, Friday the 18th July 1947" (PDF). Archived from the original (PDF) on 2011-07-03. பார்க்கப்பட்ட நாள் 2010-06-19.
- ↑ Hasan, Zoya; Sridharan, Eswaran; Sudharshan, R (2005). India's living constitution: ideas, practices, controversies. Anthem Press. pp. 360–63. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1843311364, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781843311362.
- ↑ Atul Kohli (2001). The success of India's democracy. Cambridge University Press. p. 89. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0521805309.
- ↑ Robert L. Hardgrave, Jr. (1964-1965). "The DMK and the Politics of Tamil Nationalism". Pacific Affairs 37 (4): 396–411. http://www.jstor.org/stable/2755132.
- ↑ Lloyd I. Rudolph (May 1961). "Urban Life and Populist Radicalism: Dravidian Politics in Madras". The Journal of Asian Studies 20 (3): 283–297. http://www.jstor.org/stable/2050816.
- ↑ James R. Roach (May), "India's 1957 elections", Far Eastern Survey, 26 (5): 65–78
{{citation}}
: Check date values in:|date=
and|year=
/|date=
mismatch (help) - ↑ Manivannan, R. (25 January 1992). "1991 Tamil Nadu Elections: Issues, Strategies and Performance". Economic and Political Weekly (Economic and Political Weekly) 27 (4): 164–170. http://www.jstor.org/pss/4397536. பார்த்த நாள்: 20 January 2010.
- ↑ "1957 Madras State Election Results, Election Commission of India" (PDF). Archived from the original (PDF) on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2010-06-19.
- ↑ Kandaswamy. P (2008). The political Career of K. Kamaraj. Concept Publishing Company. pp. 62–64. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 81-7122-801-808.
{{cite book}}
: Check|isbn=
value: length (help); External link in
(help)|title=
வெளி இணைப்புகள்
[தொகு]1957 சட்டமன்ற தேர்தல் முடிவுகள் பரணிடப்பட்டது 2016-03-04 at the வந்தவழி இயந்திரம்