உள்ளடக்கத்துக்குச் செல்

சூலியா ஜாத்ரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

சூலியா ஜாத்ரா (Sulia Jatra) எனும் திருவிழா மேற்கு ஒடிசாவின் பலாங்கீர் மாவட்டத்தில் அமைந்துள்ள கைர்குடா கிராமத்தில் கொண்டாடப்படுகிறது. பௌச (தை) மாதத்தின் இரண்டாவது செவ்வாய்க் கிழமையன்று சூலியா ஜாத்ரா நடைபெறும். இவ்விழாவில் ஆயிரக்கணக்கான விலங்குகள் மற்றும் பறவைகள் பலியிடப்படுவதாகப் பரவலாகத் தெரிவிக்கப்படுகிறது.[1]

தோற்றம்

[தொகு]

சூலியா ஜாத்ரா பழங்குடி சமூகங்களின் சூலியா கடவுளின் பெயரால் விழா நடைபெறுகிறது. விழா நடைபெறும் இடம் இயற்கையால் சூழப்பட்டுள்ளது. மிருக பலி கந்த பழங்குடியினரின் நீண்ட காலப் பாரம்பரியமாகும். சூலியா கடவுளுக்கு இரத்தம் செலுத்துவதன் மூலம் சமூகத்திற்கு வெற்றியையும் செழிப்பையும் தருவதாக இவர்கள் நம்புகிறார்கள். 500 ஆண்டுகள் பழமையான இந்த பாரம்பரியத்தில் கந்தாவின் எட்டு துணை சாதிகள் சூலியாவை தங்கள் முதன்மை தெய்வமாக வழிபடுகின்றனர்.

ஊடக பார்வையில்

[தொகு]

சூலியா ஜாத்ரா குறித்த செய்திகள் ஊடகங்களில் பரவலாக இடம்பெறுகின்றன.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Animal sacrifice goes unabated at Sulia Jatra". Daily Pioneer.com. Archived from the original on June 16, 2011.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=சூலியா_ஜாத்ரா&oldid=3743915" இலிருந்து மீள்விக்கப்பட்டது