சுபைதா ஜலால் கான்
சுபைதா ஜலால் கான் (Zubaida Jalal Khan உருது : زبيدہ جلال خان; பிறப்பு 31 ஆகஸ்ட் 1959), ஒரு பாக்கித்தான் அரசியல்வாதி ஆவார், இவர் பாக்கித்தானின் பாதுகாப்பு துறை அமைச்சராக பணியாற்றுகிறார். மேலும் ஒரு ஆசிரியர், சுதந்திரவாதி மற்றும் சமூக ஆர்வலர் ஆவார். இவர் 20 ஆகஸ்ட் 2018 அன்று பாதுகாப்பு உற்பத்தி அமைச்சராக பதவி ஏற்றுக்கொண்டார்.
2002ஆம் ஆண்டில் நடைபெற்ற பாக்கித்தான் பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு சவுதிக் அசிசின் அமைச்சரவையில் பரவலாக அறியப்பெற்ற பெண் அமைச்சராக இருந்தார்.2002 முதல் 2007 வரை, இவர் கல்வி அமைச்சராக (MoEd) இருந்தார் மற்றும் 2008 இல் நடைபெற்ற பொதுத் தேர்தல்களில் தோல்வியுற்றார்.
தேசிய அரசியலில் இருந்து ஐந்து வருட இடைவெளிக்குப் பிறகு, இவர் பாக்கித்தான் முஸ்லீம் லீக்கில் சேர்ந்தார். இவர் 2013 பொதுத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் பாக்கித்தான் முஸ்லீமின் பெண் தலைவராகத் தன்னைத் தக்கவைத்துக் கொண்டார்.
சமூக மற்றும் அரசியல் செயல்பாடு
[தொகு]கல்விக்கான போதனைகள் மற்றும் சேவைகள்
[தொகு]குவைத்திலிருந்து திரும்பிய பிறகு, இவர் தன் தந்தையின் ஆதரவுடன் தன் கிராமத்தில் பெண்கள் பள்ளியை நிறுவ முயற்சி செய்தார். ஏனெனில் அந்த காலத்தில் இத்தகைய பாரம்பரிய பழமைவாத பலூச் சமூகம் பெண்களை பள்ளிகளுக்கு செல்ல அனுமதிக்கவில்லை. பள்ளியில் கற்பிக்கும் போது, பலூசிஸ்தான் பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியத்தையும் கற்பித்தார். 1993 ஆம் ஆண்டில், இவரது சேவைகளை பாக்கித்தான் அரசு அங்கீகரித்தது மற்றும் பாக்கித்தான் குடியரசுத் தலைவரால் கல்விக்கான பிரைட் ஆஃப் பெர்ஃபாமன்ஸ் விருதை வழங்கி கவுரவித்தது. பலோச் எம்பிராய்டரி மற்றும் வறுமை ஒழிப்பு உள்ளிட்ட பல வெளியீடுகளை இவர் எழுதியுள்ளார்.
1988-ல் பிரதமர் நவாஸ் ஷெரீப் தலைமையிலான வலதுசாரி பாக்கித்தான் முஸ்லீம் லீக்கில் (பிஎம்எல்) சேர்ந்த பிறகு இவரது அரசியல் செயல்பாடு தொடங்கியது. 2002 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் இவர் போட்டியிட்டு வெற்றி பெற்றார், இவர் NA – 27 தொகுதியில் போட்டியிட்டு 44,177 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். [1] 2002 ஆம் ஆண்டில் இவர் கல்வி அமைச்சராக நியமிக்கப்பட்டார்.இவர் பாக்கித்தானிய குடியரசுத் தலைவர் ப��்வேசு முசரப்பிடம் இருந்து உறுதி மொழி எடுத்துக் கொண்டு ஜஃபாருல்லா ஜமாலியின் அமைச்சரவையில் அமைச்சராகப் பதவியேற்றார்.[2] பிரதமர் சௌத் அஜீஸின் அமைச்சரவையில் தொடர்ந்து பணியாற்றுவதற்காக பணி நீட்டிப்பு பெற்றார்.[2]
கல்வி அமைச்சகம்
[தொகு]2004 ஆம் ஆண்டில், சுபைடா ஜலால் "அனைத்து மதக் கருத்தரங்குகளும் இப்போது அனைத்து முக்கிய கல்வித் திட்டங்களிலும் ஈடுபடுத்தப்படும்" என்று அறிவித்தார். [3] குடியரசுத் தலைவர் பர்வேஸ் முசரப்பால் அங்கீகரிக்கப்பட்ட இந்த திட்டம் மதரஸா (செமினரிகள்) நவீன கல்வி சீர்திருத்தங்களுடன் ஒருங்கிணைக்கப்பட்டதாக இருந்தது. [4] ஜலால் தனிப்பட்ட முறையில் இதனை அங்கீகரித்தார் . 2003-04 க்கு அரசாங்கத்திடமிருந்து 225–500 மில்லியன் ரூபாய்க்கான ஒப்புதல் வழங்ன்கப்பட்டது. அனைத்து நிதியுதவியும் அமெரிக்க ஏஐடியால் கூட்டாக வெளியிடப்பட்டது. [4] பள்ளி பாடத்திட்டத்தை மாற்றுவதற்காக சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன மற்றும் பல மறுமலர்ச்சி திட்டங்கள் கொண்டுவரப்பட்டன, பாடப்புத்தகங்கள் ஒழுங்குபடுத்தல் ஆகியவை சுபைடா ஜலால் மேற்பார்வையிடப்பட்ட திட்டத்தின் ஒரு பகுதியாகும். [4]
துவக்கம் மற்றும் நவீனமயமாக்கல�� இருந்தபோதிலும், திட்டம் ஒரு அங்குலம் கூட நகரவில்லை என்று ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. [5] தொடர்புடைய கூட்டங்கள் எதுவும் திட்டமிடப்படவில்லை மற்றும் புதிய கொள்கை வழிகாட்டுதல்கள் அரசாங்கத் துறைகளுக்கு வழங்கப்படவில்லை. [5] டெய்லி டைம்ஸ் வெளியிட்ட ஒரு ஊடக அறிக்கையில் , 2004 ல் மதரஸா (செமினரிகள்) சீர்திருத்தங்களை வெற்றிகரமாகச் செய்வதில் கல்வி அமைச்சகம் தோல்வியடைந்தது எனக் குறிப்பிட்டது. [5]
சான்றுகள்
[தொகு]- ↑ "Zubaida Jalal". Express Tribune Election Cell (ExTEC) இம் மூலத்தில் இருந்து 13 ஜூலை 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130713024119/http://elections.tribune.com.pk/candidate/zubaida-jalal/.
- ↑ 2.0 2.1 "Jamali, cabinet take oath: PPP, PML-N abstain from ceremony". Dawn area studies, 2002. http://archives.dawn.com/2002/11/24/top1.htm.
- ↑ "'Madrassa students will be brought into mainstream'". http://www.dailytimes.com.pk/default.asp?page=story_23-5-2004_pg7_54.
- ↑ 4.0 4.1 4.2 "Masood looks for ways to implement madrassa reforms". http://www.dailytimes.com.pk/default.asp?page=story_30-7-2004_pg7_26.
- ↑ 5.0 5.1 5.2 "2004 – education issues, problems and reforms". http://www.dailytimes.com.pk/default.asp?page=story_7-1-2005_pg7_30.