சுஜாதா விஜயராகவன்
சுஜாதா விஜயராகவன் (Sujatha Vijayaraghavan) நடனக் கலைஞர், இசைக்கலைஞர், இசைக்கலைஞர் மற்றும் நுண்கலை ஆராய்ச்சி அறிஞர் என பன்முகங்கள் கொண்ட ஓர் இந்திய எழுத்தாளராவார். புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் இவர் பேராசிரியராக பணியாற்றினார். [1] [2] தமிழ்நாட்டின் சென்னை நகரிலுள்ள நாரத கான சபையின் பாரம்பரிய கலைப் பிரிவுகளில் ஒன்றான நாட்டிய அரங்கம் பிரிவுடன் இணைந்து இவர் இயங்கினார். அமெரிக்காவின் சிக்காக்கோ நகரிலுள்ள நாட்டிய நடன திரையரங்கு என்ற பாரம்பரிய பரதநாட்டிய நிறுவனத்தோடும் இணைந்து செயல்பட்டார். [3] மேலும் இவர் முன்னோடி பரதநாட்டிய நடனக் கலைஞர் கலாநிதி நாராயணனுடன் தொடர்பு கொண்டிருந்தார் .
தமிழ் பட வர்ணம் திட்டத்தில் மூத்த உறுப்பினராக இருந்த சுஜாதா ஆண்டவன் பிச்சை மற்றும் கும்பகோணம் பானுமதி போன்ற பரதநாட்டிய நடனக் கலைஞர்களின் வாழ்க்கை மற்றும் படைப்புகள் குறித்த பல ஆவணப்படங்களை இயக்கியுள்ளார் . அனிதா குகா, போன்ற நடனக் கலைஞர்களுடன் இணைந்து பரதநாட்டிய நடன தயாரிப்புத் திட்டங்களிலும் இவர் ஒத்துழைத்துள்ளார். தேவி பாரதம் என்ற இசையமைப்பில் பெரும் புகழ்பெற்றார் : இது பங்கிம் சந்திர சாட்டர்ச்சி எழுதிய தேசிய பிரார்த்தனை பாடலும் சுப்பிரமணிய பாரதி தமிழில் மொழிபெயர்த்த பாடலுமான வந்தே மாதரம் என்ற பாடலை அடிப்படையாகக் கொண்ட இசை நிகழ்வாகும்.
நூல் விளக்கம்
[தொகு]- ஒரு சிறிய வைரம் ] (தமிழில்). வானதி பதிப்பகம் 1990.
- அரங்கம் : நாவல் (தமிழில்). வானதி பதிப்பகம் ,1993.
- எந்தையும் தாயும் (தமிழில்). வானதி பதிப்பகம். 1995.
- அமைதியானவன் . (2009) பெங்குவின் புத்தகங்கள் .பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-14-306346-9 .
- நூறு தமிழ் நாட்டுப்புற மற்றும் பழங்குடி கதைகள் . (2010; அரு இராமநாதன் உடன்) ஓரியண்ட் பிளாக்சுவான் .பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-250-3920-4ISBN 978-81-250-3920-4 .
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "National seminar on women in Indian English fiction on March 9". Coastal Digest (in ஆங்கிலம்). 6 March 2012. பார்க்கப்பட்ட நாள் 2020-12-31.
- ↑ "Women in Alice Walker's Fiction". Indian Journal of American Studies (American Studies Research Centre, Osmania University) 27: 88.
- ↑ Warnecke, Lauren (9 November 2019). "Review: Natya Dance's world premiere 'Inai' asks, what if there were no differences, racial or otherwise?". Chicago Tribune. பார்க்கப்பட்ட நாள் 2020-12-31.